அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் இலங்கை விஞ்ஞான சேவையின் III ஆம் தரத்திற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2015

 

அரசாங்கத்தின் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விஞ்ஞான சேவையின் III ஆம் தரத்திற்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக, 1942 ஆம் இலக்க மற்றும் 2015.11.20 ஆம் திகதிய இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் வர்த்தமானியில் 1 ஆம் பாகத்தின் : (II ) பந்தியில் பரீட்சைப் பெறுபேறுகள் என்பதன் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு அறிவித்தலுக்கு ஏற்ப, 2016.02.13 ஆம் திகதியன்று பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், விண்ணப்பதாரிகளின் தகைமைகளைப் பரீட்சிப்பதற்காக நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுவதற்காக உரிய விண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் கீழ்வருமாறு காணப்படுகின்றது.

         Rounded Rectangle: பதிவிறக்கம் செய்கவிண்ணப்பதாரிகளின் பெயர்ப் பட்டியல் -

 

02. அப்பெயர்ப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரிகளுக்கானது, தற்போது அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதில் வழங்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் படி குறித்த திகதி, உரிய நேரத்திற்கு உரித்தான சான்றிதழ்கள் மற்றும் சகல ஆவணங்களுடன் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும்.

 

03. மேலும் சந்தேகத்திற்கிடமான ஆவணங்கள் தொடர்பான அரசாங்க உதவிப் பகுப்பாய்வாளருக்கான கல்வித் தகைமையாக, தகவல் தொழிநுட்ப பாடத்துடத்துக்கான பட்டத்துடன் கூடிய தகைமையுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரிகளும் தனது க.பொ.த உயர்தர கல்விச் சான்றிதலுடன் அச்சான்றிதலில் தன் மூலம் உண்மையான பிரதி என உறுதி செய்யப்பட்ட இரண்டு பிரதிகள் கொண்டு வர வேண்டும்.

 

04. அதற்கிணங்க திறந்த போட்டிப் பரீட்சையில் அடையப்பெற்ற புள்ளிகளின் எண்ணிக்கையினை முன்னிலைப்படுத்தி தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளிலிருந்து பதவிக்கான வெற்றிடங்கள் நியமிக்கப்படவுள்ளதோடு, நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுதலானது பதவி நியமனத்திற்காக தாங்கள் தகைமையுடையவர் என கருதப்படமாட்டாது.

 

 

 

ஒப்பம் : ஜே. தடல்லகே

ஆர்.எம்.என்..கே. ரணசிங்க செயலாளர்

பணிப்பாளர் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு

விஞ்ஞான சேவை, கட்டடக்கலையியல் சேவை

மற்றும் தொழில்நுட்ப சேவைப் பிரிவு