இலங்கை விஞ்ஞான சேவை, இலங்கைக் கட்டிட நிர்மாண சேவை, இலங்கைத் தொழில்நுட்ப சேவை என்பவற்றின் மனிதவளங்கள் முகாமைத்துவம் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அது அரச சேவைகள் ஆணைக்குழுவினால் அதிகாரம் அளிக்கப்பட்ட செயற்பாடாக இருந்தாலும், அரச சேவைகள் ஆணைக்குழு இல்லாத நேரத்தில் இலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை, தொழில்நுட்ப சேவை என்பவற்றின் ஆட்சேர்ப்பு, பதவியை உறுதிப்படுத்தல், பதவியுயர்வு, இடமாற்றம், ஓய்வுபெறச்செய்தல், ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்பவை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கை தொழில்நுட்ப சேவை விடயத்தில் வினைத்திறன் தடைகாண் பரீட்சை மாத்திரம் அரசாங்க பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு, சேவையை உறுதிப்படுத்தல், பதவியுயர்வு, இடமாற்றம், இளைப்பாறுதல் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் என்பவை இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் அதிகாரமளிக்கப்பட்ட அவர்களின் சொந்த நிறுவகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களும் இருக்கின்ற வலுவாற்றலும் கீழுள்ள அட்டவணையில் சுருக்கமாகமாகத் தரப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் அங்கீகரிக்க்பபட்ட பணியாளர்களும் வலுவாற்றலும்
சேவை |
அங்கீகரிக்க்பபட்ட பணியாளர் |
தற்போதைய வலிமை |
இலங்கை விஞ்ஞான சேவை |
407 |
255 |
இலங்கை கட்டிட நிர்மாண சேவை |
45 |
33 |
குறிக்கோள்கள்
- விஞ்ஞான சேவையின் மனித வள முகாமைத்துவம் பற்றிய கொள்கைகளை உருவாக்குதல்
- பொது மக்களின் தேவைகளைத் திருப்திகரமான முறையில் நிறைவேற்றுவதற்கு வினைத்திறன்மிக்க விஞ்ஞான சேவைகளைத் தாபித்தல்
பிரதான செயற்பாடுகள்
ஆட்சேர்ப்பு
- பதவி, நிர்வாகம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடங்களை அடையாளம் காணல்
- எம்.எஸ்.டி. மற்றும் தேசிய வரவு செலவு திட்டத்திற்கான அங்கீகாரத்தைப் பெறல்
- ஆட்சேர்ப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடல்
- தேர்வு பரீட்சையை நடத்துதல்
- நேர்முகப் பரீட்சையினூடாக பரீட்சார்த்தியின் தகைமையை உறுதிப்படுத்துதல்
- நியமனம் வழங்குவதற்காக அ.சே.ஆ குழுவின் அங்கீகாரத்தைப் பெறல் மற்றும் நியமனக் கடிதங்களை வழங்குதல்
சேவையை நிரந்தரப்படுத்தல்
- ஊழியரின் நிறுவகத்திலிருந்து பரிந்துரையைப் பெறுதல்
- அரசாங்க நிர்வாக செயலாளரின் பரிந்துரையை அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்குதல்
பதவியுயர்வு
- ஊழியரின் நிறுவகத்திலிருந்து பரிந்துரையைப் பெறுதல்
- அரச சேவை ஆணைக் குழுவுக்கு பரிந்துரையை வழங்குதல்
வி.தி.த.காண். பரீட்சையை நடத்துதல்
- வி.தி.தா.கா. பரீட்சை முடிவுகளை வழங்குதல்
- பதவி உயர்வு
சேவை நீடிப்பு மற்றும் ஓய்வுபெறல்
- ஊழியரின் நிறுவகத்திலிருந்து பரிந்துரையைப் பெறுதல்
- அரச சேவை ஆணைக்குழுவுக்குப் பரிந்துரையை வழங்குதல்
நிறுவனக் கட்டமைப்பு

தரவிறக்கங்கள்
தொடர்பு விபரங்கள்
வெற்றிடம் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2695187 (நீடிப்பு - 161) |
தொலைநகல் |
: |
+94 11 2695187 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
திருமதி. ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2698418 (நீடிப்பு - 180) |
தொலைநகல் |
: |
+94 11 2695187 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|