Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் இணைந்த சேவைகள் இலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை

இலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை

பொறுப்பளிக்கப்பட்ட வகிபாகம் தொடர்பான பொது வரைவிலக்கணம்

அரசாங்கத்தின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் முதன்மையான சேவையாக இருந்துகொண்டு, கொள்கைகளை அமுலாக்கம் செய்வதில் உதவிசெய்யும் உள்ளக, வெளியக நிறுவனங்களுடனான முறையான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பினைப் பேணுதல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகளைப் பயன்படுத்துதல் ஆகியன மூலம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையினை யதார்த்தமாக்குவதற்கென சிறந்ததோர் அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்குத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதே இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகிபாகமாகும்.

அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை – 2017/04/30 ஆம் திகதி

வகுப்பு அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை
வகுப்பு 1 121
வகுப்பு 2 350
வகுப்பு 3 1814

ஆட்சேர்ப்புச் செய்தல்

இலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் III, வகுப்பு 2 இன் தரம் II, வகுப்பு 3 இன் தரம் III இற்க திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புகள் இடம்பெறும்.

  • இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற அறிவித்தல் மூலம் விண்ணப்பங்களை கோரி நியமன அதிகாரி சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அல்லது நியமன அதிகாரியினால் தீர்மானிக்கப்படுகின்ற வேறு தகைமை வாய்ந்த நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமைகளை பூர்த்தி செய்கின்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  •  

வகுப்பு மற்றும் தரம் திறந்த மட்டுப்படுத்தப்பட்ட
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III 100% -
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 தரம் II 70% 30%
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 1 தரம் III 70% 30%

 

குறிப்பு:- மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 இனது தரம் II மற்றும் வகுப்பு 1 இனது தரம் III ஆகியவற்றிலுள்ள பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியுடைய ஆட்களின் எண்ணிக்கையானது வெற்றிடங்களின் 30% இனை விடக் குறைவாக இருந்தால் அத்தொகையானது திறந்த போட்டிப் பரீட்சையில் தகுதியுடைய ஆட்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படும்.

தகைமைகள்

  • வகுப்பு 3 இன் தரம் III
    • கல்வித் தகைமைகள்
      க.பொ.த. (சாதாரண தரம்) இல் மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஐந்து திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களை ஒரே தடவையில் சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.
    • தொழில் தகைமைகள்
      மூன்றாம் நிலை, தொழிற்கல்வி ஆணைக்குழுவின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஆகக்குறைந்தது NVQ இன் மட்டம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட மட்டத்தில் கணனி/ தகவல் தொழில்நுட்ப கற்கைநெறி ஒன்றை பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

       

  • வகுப்பு 2 இன் தரம் II
    • திறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்
      1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பட்டமொன்றைப் பெற்றிருத்தல்.

        அல்லது

      2. I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பிரதான பாடம் ஒன்றாக கணனி விஞ்ஞான /தகவல் தொழில்நுட்பத்துடனான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்)

        அத்துடன்

        II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

        அல்லது

      3. I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்தான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

        அத்துடன்

        II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

        அல்லது

      4. I. குறைந்தது தேசிய தொழில் தகைமையின் (NVQ) மட்டம் 07 இன் தகைமை ஒன்றை அல்லது மூன்றாம்நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமனான தகைமை ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும்.

        அத்துடன்

        II. உரிய துறையில் இரண்டு (02) வருட தொழில்சார் அனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.

         

    • மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்
      • I. நான்கு வருடங்கள் வகுப்பு 3 இன் தரம் I இல் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதுடன் உடன் முன்வரும் 05 வருடங்களில் முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவையினைப் பூர்த்திசெய்திருத்தலும் வேண்டும்.

        அத்துடன்

        II. வகுப்பு 3 இன் தரம் I இற்காக குறித்துரைக்கப்பட்ட வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையினை சித்தியெய்தியிருத்தல் வேண்டும்.

        அல்லது

      • I. இச் சேவைப் பிரமாணக் குறிப்பின் 7.3.1.2.1 இல் குறிப்பிடப்பட்ட கல்வித் தகைமைகளை பூர்த்திசெய்திருத்தல் வேண்டும்

        அத்துடன்

        II. உடன் முன்வரும் 05 வருடங்களில் முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவை ஒன்றுடன் வகுப்பு 3 இல் தரம் II இனது அலுவலர் ஒருவராக இருத்தல்.

         

  • வகுப்பு 1 இன் தரம் III
    • திறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்
      • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் / கணனிப் பொறியியல் அல்லது கணனித் தொழில்நுட்பத்தில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

        அல்லது

      • I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்).

        அத்துடன்

        II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.

        அல்லது

      • I. குறைந்தது தேசிய தொழில் தகைமையின் (NVQ) மட்டம் 07 இன் தகைமை ஒன்றை அல்லது மூன்றாம்நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சமனான தகைமை ஒன்றினை பெற்றிருத்தல் வேண்டும்.

        அத்துடன்

        II. உரிய துறையில் இரண்டு (02) வருட தொழில்சார் அனுபவத்தினைக் கொண்டிருக்க வேண்டும்.

         

    • மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்
      • I. 2 ஆம் வகுப்பின் I ஆம் தரத்தின் அலுவலராகவிருத்தல் அத்துடன் உடன் முன்வரும் 05 வருடங்களில் முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.

        அத்துடன்

        II. அத்தரத்திற்கு உரிய வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

        அல்லது

      • I. 7.4.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.

        அத்துடன்

        II. 2 ஆம் வகுப்பின் II ஆந் தரத்தின் அலுவலராகவிருத்தல் அத்துடன் உடன் முன்வரும் 05 வருடங்களில் முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்.

        அத்துடன்

        III. அத்தரத்திற்கு உரிய வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.

 

சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்

 

  • தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
இலக்கம் திகதி
01. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1894/26 ஆம் இலக்கம் 2014/12/26
02. திருத்தங்கள் இலக்கம் - 01
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1982/15 ஆம் இலக்கம்
2016/08/30

 

  • முன்னைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
இலக்கம் திகதி
01. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1631/20 ஆம் இலக்கம் 2009/12/09
02. திருத்தங்கள் இலக்கம் - 01
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1861/44 ஆம் இலக்கம்
2014/05/09

 

  • தொடர்புடைய சுற்றறிக்கைகள்
இல. சுற்றறிக்கை இலக்கம் திகதி
01. 04/2011 2011/02/15
02. 04/2011(i) 2012/08/16
03. 04/2011(ii) 2014/08/28
04. 03/2015 2015/01/29
05. 03/2016 2016/02/25
06. 04/2011(iii) 2017/02/17

 

ஆவணங்கள்

e-HRM தரவுத் தாள் -

e-HRM தரவுத் தாளுக்கான அறிவுறுத்தல்கள் -

இ. த. மற்றும் தொ. தொ. சேவையின் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் -

இ. த. மற்றும் தொ. தொ. சேவையின் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் இணைப்பு >>

 

தொடர்புகளுக்கு

 

திருமதி.கே. வீ. பி. எம்.ஜீ. கமகே
பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி   : +94 11-2694560 (நீட்சி- 500)
தொலைநகல்  :+94 11-2692254
மின் அஞ்சல் : dgcs[at]pubad.gov.lk

 

 

திரு. எஸ். ஆலோக பண்டார
பணிப்பாளர், இணைந்த சேவைகள் - II
தொலைபேசி   : +94 11-2682972 (நீட்சி- 600)
தொலைநகல்  :+94 11-2688754
மின் அஞ்சல் : dcs-ii[at]pubad.gov.lk

 

 

திரு. எ. எஸ். ரத்னாயக
உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி   : +94 11-2699966 (நீட்சி- 612)
தொலைநகல்  : +94 11-2688754
மின் அஞ்சல் : adcs-vii[at]pubad.gov.lk

 

 

தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை கிளை

தொலைபேசி   : +94 11-2696211-13 (நீட்சி- 611)
தொலைநகல்  : +94 11-2688754

Last Updated on Friday, 06 October 2017 05:01  

இற்றைப்படுத்தப்பட்டது 17-10-2017.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter