Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

2015 දී පංච බලකේන්ද්‍රීය ආයතන ඔස්සේ රාජ්‍ය සේවයේ නව ප්‍රතිසංස්කරණ රැසක්

Appointments as Assistant Divisional Secretaries

இலங்கை இலத்திரனியல் ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்கின்றது

அரச அலுவலர்களின் சேவை நீட்டிப்பு ரத்து செய்யப்படவில்லை

அரசாங்க நிர்வாக அமைச்சு நடமாடும் சேவையை ஆரம்பிக்கின்றது

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு சேவைகள் நாடளாவிய சேவைகள் இலங்கை பொறியியல் சேவை

இலங்கைப் பொறியியல் சேவை

பதவியணியினரின் எண்ணிக்கை :- 1061

ஆட்சேர்ப்பு

திறந்த ஆட்சேர்ப்பு – (தொழில்சார் தகைமைகளைக் கொண்டுள்ள பொறியியலாளர்கள் மாத்திரமாகும்.)

கல்வித் தகைமைகள்.

  • பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகம் ஒன்றிலிருந்து அவ்ஆணைக்குழு அங்கீகரித்துள்ள 04 வருட முழுநேர விஞ்ஞானமானிப் பொறியியல் பட்டப் பாடநெறிக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்ற பாடத்துறையின் கீழ் வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள பட்டத்தை பெற்றிருத்தல்.
  • மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டப் பாடநெறிக்குச் சமமான தகைமையாக பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற கற்கை மற்றும் ஏனைய சகல தேவைப்பாடுகளுக்கும் இணைத்துக் கொள்ளப்படுகின்ற பாடத்துறையின் கீழ் பூர்த்தி செய்து அது தொடர்பில் செல்லுபடியான சான்றிதழைப் பெற்றிருத்தல்.

தொழில்சார் தகைமைகள்

இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கற்கைத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து அது தொடர்பான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமைகளையும் பூர்த்தி செய்திருப்பதாக உறுதி செய்வதற்காக குறித்த நிறுவகத்தினால் வெளியிடப்படுகின்ற சான்றிதழைப் பெற்றிருத்தல்.

மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு

  • நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவைக்கு உரித்தான அலுவலராக 15 வருடங்களுக்கு குறையாத சேவைக்காலத்துடன், அதில் ஆகக் குறைந்தது 05 வருடங்கள் அச்சேவையின் தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றி இருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளரினால் நடாத்தப்படுகின்ற சிரேஷ;ட தொழில்நுட்ப பரீட்சையில் பூரணமாக சித்தியடைந்திருத்தல்.
  • புகையிரதத் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவப் பதவியொன்றில் சேவையாற்றுகின்ற ஒரு அலுவலர், அத்திணைக்களத்தில் 15 வருடங்களுக்கு குறையாத சேவைக் காலத்துடன், அதில் ஆகக் குறைந்தது 05 வருடங்கள் அச்சேவையின் தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றி இருத்தல்.
  • இலங்கைத் தொழில்நுட்பச் சேவையில் தொழில்நுட்ப அலுவலராக 15 வருடங்களுக்கு குறையாது சேவையாற்றி இருப்பதுடன், அதில் ஆகக் குறைந்தது 05 வருடங்கள் அச்சேவையின் தரம் 1 இற்கு பதவி உயர்வு பெற்று அதில் சேவையாற்றி இருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளரினால் நடாத்தப்படுகின்ற அரசாங்க தொழிலநுட்ப அலுவலர்களுக்கான மூன்றாம் பரீட்சையில் (1979 இன் பிரமாணக் குறிப்பு) பூரணமாக சித்தியடைந்திருத்தல்.
  • இலங்கை தொழில்நுட்பச் சேவையில் தொழில்நுட்ப அலுவலராக 21 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்துடன், அச்சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டிருத்தல் மற்றும் அச்சேவையின் தரம் 1 இல் 05 வருடங்கள் சேவையாற்றியிருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளரினால் நடாத்தப்படுகின்ற அரசாங்க தொழில்நுட்ப அலுவலர்களுக்கான இரண்டாம் பரீட்சையில் (1979 இன் பிரமாணக் குறிப்பு) பூரணமாக சித்தியடைந்திருத்தல்.
Last Updated on Monday, 23 April 2012 03:57  

இற்றைப்படுத்தப்பட்டது 20-05-2013.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter
காப்புரிமை © 2013 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.