கௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்
கௌரவ அமைச்சர்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
தொலைபேசி | : | +94 11 2674115 |
தொலைநகல் | : | +94 11 2699720 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
1953 ஆம் ஆண்டு தம்புள்ளையில் பிறந்த திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். வியாபார முகாமை, பொது மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ள அவர் 1973 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகராக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த்தார்.
அன்று தொடக்கம் தனக்கு இயற்கையாகவே கிடைக்கப் பெற்ற ஆற்றல்களையும் தொழில் ரீதியான திறன்களையும் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களின் நிலையப் பொறுப்பதிகாரியாக நாட்டுக்குச் சேவையாற்றிய திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் 1993 ஆம் ஆண்டில் தலையக பொலிஸ் பரிசோதகராக பதவி வகித்த போது ஓய்வுபெற்றார். அரசாங்க உத்தியோகத்தர் என்ற நிலையிலிருந்து ஓய்வுபெற்ற திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் அதன் பின்னர் தனது அரசியல் வாழ்வில் பிரவேசித்தார். பொலிஸ் சேவையில் பெற்ற அனுபவத்தின் மூலம் 1993 ஆம் ஆண்டில் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் அதுவரையில் தான் பெற்றிருந்த மக்கள் செல்வாக்கின் மூலம் மத்திய மாகாண சபைக்குத் தெரிவானார். மாகாண சபையில் பெற்ற அரசியல் அறிவை தேசிய அரசியலுக்குப் பயன்படுத்தி அவர் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தம்புள்ளை தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்து வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார். பாராளுமன்றத்தில் ஒரு திறமையான உறுப்பினராகச் செயற்பட்ட திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை தொழில் பிரதி அமைச்சராகக் கடமையாற்றினார். அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை சுகாதார பிரதி அமைச்சராக்க் கடமையாற்றிய அவர் மீண்டும் 2004 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய கூட்டணி அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 6 வருடங்களாக அந்த அமைச்சுப் பதவிக்குரிய கடமைகளை சிறப்பாக நிறைவேற்றிய திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் தனது பதவிக் காலத்தில் வினைத்திறன்மிக்க, பயனுறுதிவாய்ந்த மாகாண சபை முறையொன்றையும் உள்ளூராட்சி முறையொன்றையும் பேணி வருவதற்காக தனது அனுபவம் நிறைந்த அரசியல் தலைமைத்துவத்தை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்த அவர் அந்தப் பதவியில் 5 வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் 2015 ஏப்ரல் மாதம் முதல் 2015 ஆகஸ்ட் மாதம் வரை மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராகக் கடமையாற்றினார்.
அப்போது முதல் ஒரு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றிய திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் 2019 நவம்பர் மாதம் 16 ஆந் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டார். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதி என்ற பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ள திரு. ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் வினைத்திறன்மிக்க, பயனுறுதிவாய்ந்த அரச சேவையொன்றை உருவாக்குவதற்காக தமது அனுபவம் நிரம்பிய அரசியல் தலைமைத்துவத்தை பொது நிருவாக, உள்ளாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு வழங்கி வருகின்றார்.