அரச சேவைகளிலுள்ள ஆளணியினரின் தேவைகளை நிறைவேற்றுமுகமாகப் பின்வரும் சேவைகளிலுள்ள அலுவலர்களை நிர்வகிக்கின்ற அனைத்துக் கொள்கைகளையும் இணைந்த சேவைகள் பிரிவு உருவாக்கி அமுல்படுத்துகின்றது. அதில் பணியாளர்களின் தேவைகளை அடையாளம் காணுதல், ஆட்சேர்ப்பு, சேவையில் அமர்த்துதல் மற்றும் அத்தகைய பணியாளர்களின் சேவைக் குறிப்புகளை முறையாக முகாமைப்படுத்துதல் என்பவை உள்ளடங்குகின்றன.
குறிக்கோள்
தேசிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க மனிதவளங்களை ஏற்பாடு செய்தல்.
செயற்பாடு
தேசிய கொள்கையுடன் இணைந்து செல்கின்ற வினைத்திறன்மிக்க மனிதவள முகாமைத்துவத்தினூடாக உற்பத்தித்திறன்மிக்க அரச சேவையொன்றை ஸ்தாபித்தல் மற்றும் சமூக பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் துரிதப்படுத்த செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்.
சேவைகள்
- மொழிபெயர்ப்பாளர்கள் சேவை
- அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை
- அலுவலக ஊழியர் சேவை
- இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவை
- நூல்நிலையப் பொறுப்பாளர்கள் சேவை
- சாரதிகள் சேவை
இணைந்த சேவைகளின் மனிதவள செயற்பாடுகள்
- ஆட்சேர்ப்பு
- பதவியுயர்வு
- இடமாற்றம்
- சேவை நீடிப்பும் ஓய்வுபெறுதலும்
- சேவையில் நிரந்தரப்படுத்தல்
- லீவு (வெளிநாட்டு / உள்நாட்டு)
- ஒழுக்காற்று நிர்வாகம்
- இணைந்த சேவைகளின் கொள்கைத் தீர்மானங்களை உருவாக்கல்
தாபனக் கட்டமைப்பு
e-HRM கருத்திட்டம்
பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணைந்த சேவைகள் பிரிவின் (இ.சே.பி.) மனிதவள நடவடிக்கைகளை மேம்படுத்துமுகமாக e-HRM கருத்திட்டத்துக்கு புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச வங்கி (உலக வங்கி) நிதியுதவியளிக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் (இ.அ) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (த.தொ.தொ.மு.) நிலையம் கருத்திட்டத்தின் ஆலோசகராகச் செயலாற்றுகிறது.
கிளைகள்
|
|
நாடளாவிய ரீதியில் பல்வேறு நிலைகளைக் கையாள்கின்ற இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை நிர்வகிக்கின்ற அனைத்துக் கொள்கைகளையும் இலங்கை நிர்வாக சேவைக்கிளை தயாரித்து அமுலாக்குகின்றது.
சேவையின் வரலாறு
பிரித்தானிய சிவில் சேவையை அடிப்படையாகக்கொண்டு 1833ல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்கீழ் இலங்கை அரசாங்கத்தில் சிறந்த சிவில் சேவையை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்தின் பின்னர், அதாவது 1963 மே மாதம் 1ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 1963ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவை உருவாக்கப்பட்டு ஐந்து தரங்களில் ஸ்தாபிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா நிர்வாக சேவை என மறுபெயரிடப்பட்டது. இப்பொழுது இது அரசாங்கத்தின் பிரதான நிர்வாக சேவையாக இருக்கின்றது.
பணிப்பாளர் நாயகம்
திருமதி. பி.பீ.பீ.எஸ். அபேகுணரத்ன
பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி : +94 11-3169429 (நீடிப்பு - 500)
தொலைநகல் : +94 11-2692254
மின்னஞ்சல் : dgcs[at]pubad.gov.lk
.
தொடர்பு கொள்வதற்கான தகவல்கள்
| அலகு | பெயர் |
பதவி | தொலைபேசி | தொலைநகல் | மின்னஞ்சல் |
| திருமதி. எஸ்.எஸ். குருகே | பணிப்பாளர் –SLAS | +94 11-2698605 | +94 11-2698605 | dslas[at]pubad.gov.lk | |
| திரு. எச்.பீ். சுனில் குமாரசிறி | பணிப்பாளர்-DCS I | +94 11-2694300 | dcs-pmas[at]pubad.gov.lk | ||
| திரு. எஸ். அலோக பண்டார | பணிப்பாளர்-DCS II | +94 11-2682972 | +94 11 2688754 | dcs-os[at]pubad.gov.lk | |
| திரு. ஜே.எஸ். பிரசாத் பியசேன | பணிப்பாளர்-DCS III | +94 11-2690100 | +94 11-2690100 | dcs-it[at]pubad.gov.lk | |
| SLAS | திரு. எல்.டி.வி. திலக்கரத்ன | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2698147 | adslas[at]pubad.gov.lk | |
| அதியுயர் மற்றும் கொள்கை | செல்வி. டபிள்யு.ஏ.எஸ்.டி. குமாரசிங்க | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2689123 | cspmas-s[at]pubad.gov.lk | |
| PMAS I | செல்வி. ஜே.ஏ.சீ.எச். ஜயசிங்ஹ |
உதவிப் பணிப்பாளர் (பதிற் கடமை) | +94 11-2698649 | cspmas-i[at]pubad.gov.lk | |
| PMAS II | செல்வி. ஜே.ஏ.சீ.எச். ஜயசிங்ஹ | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2699400 | cspmas-ii[at]pubad.gov.lk | |
| PMAS III | செல்வி. எம். கரவிட்ட | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2693769 | cspmas-iii[at]pubad.gov.lk | |
| அலகு IV (அலுவலக சிற்றூழியர் சேவை) | திரு. ஏ.ஏ.டி.சீ.என். அமரசிங்ஹ | உதவிப் பணிப்பாளர் (பதிற் கடமை) | +94 11-2682499 | cs-iv[at]pubad.gov.lk | |
| அலகு V (சாரதி) | செல்வி. சீ.பி. நவரத்ன | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2686154 | cs-v[at]pubad.gov.lk | |
| ஒழுக்காற்று | திரு. எல்.வி. ஹெட்டிஆராச்சி | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2697235 | csdisc[at]pubad.gov.lk | |
| ICTS அலகு | செல்வி. டீ.எஸ். கரஸ்னாகொட | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2699966 | cs-it[at]pubad.gov.lk | |
| ஆட்சேர்ப்பு | திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ | உதவிப் பணிப்பாளர் |
+94 11-2681237 | csrec[at]pubad.gov.lk | |
| திரு. நுவன் துஷாரிக (C.D) | கணினி பகுப்பாய்வாளர் | +94 11-2684404 | nuwan[at]pubad.gov.lk | ||
| திரு. யு.எச்.கே. ரணசிங்ஹ | நிர்வாக உத்தியோகத்தர் |
+94 11-2693516 | ao-cs[at]pubad.gov.lk |
















