தொலை நோக்கு
தகுதிவாய்ந்த மனித வளங்கள்
பணி நோக்கு
சேவை விநியோகத்தின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான தகுதிவாய்ந்த மனித வளங்களை விருத்தி செய்தல்.
குறிக்கோள்கள்
- அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் உள்ள உத்தியோகத்தர்களின் பயிற்சித் தேவைப்பாடுகளை இனங்காணுதல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்ட வசதிகளும் அவற்றை நடாத்தலும்.
- வெளிநாட்டு, உள்ளூர்ப் பயிற்சி வாய்ப்புக்களை நியாயமாக வழங்கல்.
- அரசாங்க நிதியத்தினைப் பயனுறுதிவாய்ந்ததாகப் பயன்படுத்தல்.
- சேவை விநியோகத்தின் பயனுறுதி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்காகப் பணித்தொகுதியினரை ஊக்கப்படுத்தல்.
முக்கிய செயற்பாடுகள்
- மாவட்ட, பிரதேச செயலகங்களில் உள்ள உத்தியோகத்தர்களை உள்ளடக்கி இந்த அமைச்சுக்கு உரிய உத்தியோகத்தர்களின் உள்ளுர்ப் பயிற்சிக் கற்கை நெறிகளின் கட்டணங்களைச் செலுத்துதல் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
- பயிற்சிக் கற்கை நெறிகளின் கட்டணங்களைச் செலுத்துதல் மீது நிதிக்கட்டுப்பாடொன்றிற்காகத் தேவையான தகவல்களைச் சேகரித்தலும் தரவுத் தளத்தினைப் பராமரித்தலும்.
- உள்ளூர்ப் பயிற்சி வாய்ப்புக்களை உத்தியோகத்தர்களுக்கு அறியச் செய்தல் (குறுகிய கால/ பட்டப்பின் பட்டம் மற்றும் திப்புளோமாக்கள்)
- உள்ளூர்ப் பயிற்சி நிறுவனங்கள் நடாத்துகின்ற பயிற்சி வாய்ப்புக்களைப் பெறுதல்
- மாவட்ட, பிரதேச செயலகங்களை உள்ளடக்கி இந்த அமைச்சுக்கு உரிய அனைத்துத் திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் உள்ள உத்தியோகத்தர்களின் இலங்கைக்கு வெளியே செலவிடுவதற்கான கடமை லீவினைக் கையாளல்.
- வெளியக மூலவளங்கள் திணைக்களத்தின் ஊடாகப் பெறப்பட்ட நீண்ட கால வெளிநாட்டுப் பயிற்சிக் கற்கை நெறிகளை உத்தியோகத்தர்களுக்கு அறியச் செய்தல்.
- குறுகிய கால வெளிநாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்காக உத்தியோகத்தர்களின் பெயர் குறிப்பிடுகை தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
- குறுகிய கால வெளிநாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்காகப் பொருத்தமான உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக தேவைப்படும் அறிக்கைகள்/ தகவல்களை வழங்கும் பொருட்டு தகவல்களைச் சேகரித்தலும் தரவுத் தளத்தினைப் பேணுதலும்.
- உத்தியோகத்தர்கள் பங்குபற்றுகின்ற வெளிநாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பான தகவல்.
- உத்தியோகத்தர்களின் தகைமைகள் தொடர்பான தகவல் (கல்விசார், ஆங்கில மொழித் தேர்ச்சி).
- முகாமைத்துவப் போட்டிகளில் உற்பத்திசார் பரிசுகளைப் பெற்ற இடங்களைப் பிடித்த உத்தியோகத்தர்களின் தகவல்.
- நன்கொடை முகவர்களுடன் இணைந்து முன்மொழிவுகளைத் தயாரிப்பதன் ஊடாக வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களைப் பெறுதல்
- நேரடியாகப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்களைக் கையாளுதல்.
- அவர்களுடைய நிறுவனத்தின் அபிவிருத்திக்காக வெளிநாட்டுப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களில் பெறப்பட்ட அறிவு மற்றும் அனுபவங்களைப் பிரயோகித்து உத்தியோகத்தர்களைப் பரீட்சிப்பதற்கு தொடர் நடவடிக்கையை எடுத்தல்.
- இந்த அமைச்சின் கீழ் உள்ள சகல உத்தியோகத்தர்களின் மொழிப் பயிற்சித் தேவைகளை இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்ப்படுத்தல்.
- சாரதிகளை உள்ளடக்கி அலுவலக உதவியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை அழுல்ப்படுத்தல்.
- இந்த அமைச்சின் கீழ் உள்ள சகல உத்தியோகத்தர்களின் வெளியூர் மற்றும் உள்ளூர் பயிற்சித் தேவைகளை இனங்காணல்.
அமைப்பு வரைபடம்
தொடர்பு விபரங்கள்
திருமதி. கே.வீ.பீ.எம்.ஜே. கமஹே
சிரேட்ட உதவிச் செயலாளர்
தொலைபேசி - +94 11-2688124 (நீடிப்பு - 708)
தொலைநகல் - +94 11-2698461
மின்னஞ்சல் - sas-hr[at]pubad.gov.lk
.
.
திருமதி. கே.ஜீ.ஐ.எஸ். கலஹே
உதவிச் செயலாளர்
தொலைபேசி - +94 11-2698464(நீடிப்பு - 709)
தொலைநகல் - +94 11-2698461
மின்னஞ்சல் - ashr[at]pubad.gov.lk
















