Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Public Admin News

தலைப்புச் செய்திகள்

2015 දී පංච බලකේන්ද්‍රීය ආයතන ඔස්සේ රාජ්‍ය සේවයේ නව ප්‍රතිසංස්කරණ රැසක්

Appointments as Assistant Divisional Secretaries

இலங்கை இலத்திரனியல் ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்கின்றது

அரச அலுவலர்களின் சேவை நீட்டிப்பு ரத்து செய்யப்படவில்லை

அரசாங்க நிர்வாக அமைச்சு நடமாடும் சேவையை ஆரம்பிக்கின்றது

நீங்கள் இங்கே உள்ளீர்கள்:  முகப்பு பிரிவுகள் உள்ளக கணக்காய்வுப் பிரிவு

உள்ளக கணக்காய்வுப் பிரிவு

பிரதான உள்ளக கணக்காய்வாளரின் கீழ் இயங்கி வருகின்றது. இது கிளைத் தலைவர் உள்ளிட்ட உள்ளக கணக்காய்வு அலுவலர்கள் ஒன்பது பேர், அலுவலக சிற்றூழியர் மற்றும் சாரதி ஒருவரை உள்ளடக்கியதான அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரைக் கொண்டுள்ளது.

அரசாங்க நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற ஓய்வூதியத் திணைக்களம், பதிவாளர் நாயகத் திணைக்களம், இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம், இருபத்தைந்து (25) மாவட்ட செயலகங்கள் மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற வெளிநாட்டு கருத்திட்டங்களின் உள்ளக நடவடிக்கைகளை பேணிவருகின்ற பொறுப்பு உள்ளக கணக்காய்வுப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தேவைகளின் அடிப்படையில் மாவட்ட செயலகங்களின் கீழ் காணப்படுகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளும், விசேட விசாரணைகளும் உள்ளக கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது நோக்கு

ஊழல், மோசடியற்றதும் வினைத்திறன் மிக்கதுமானதொரு அரசாங்க சேவை.

எமது செயற்பணி

அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற திணைக்களங்கள் நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் அமுலிலுள்ள உள்ளக நிர்வாக முறைமையில் பங்கேற்று, அந்நடவடிக்கைகளில் இடம்பெறக்கூடிய தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதும் மற்றும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற உள்ளக பரிசோதனைகளின் முறையான தன்மை மற்றும் போதியளவானதன்மை தொடர்பில் தொடர்ச்சியான ஆய்வுகள் மற்றும் சுயமான மதிப்பீட்டை மேற்கொண்டு உற்பத்தித்திறன்மிக்க நல்லாட்சியை பேணிவருவதுடன், அரசாங்க வளங்களில் நல்லதொரு முகாமைத்துவத்தை ஏற்படுத்த செயற்படுவதாகும்.

எமது பணிகள்

  • அமைச்சின் கண்காணிப்பின் கீழ் காணப்படுகின்ற நிறுவனங்களின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவேற்றும் போது நி.பி.133 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பின்வரும் பணிகள் தொடர்பில் விசேட கவனஞ் செலுத்தப்படும்.
  • தவறுகள் மற்றும் மோசடிகளைத் தவிர்ப்பதற்காக திணைக்களம் நிறுவனத்தினுள் அமுல்படுத்தப்பட்டுள்ள உள்ளக பரிசோதனை மற்றும் நிர்வாக முறைமையானது, திட்டம் மற்றும் உண்மையான செயற்பாட்டுக்கு அமைவாக வெற்றிகரமானதாக உள்ளதா என்பது பற்றி தேடிப் பார்ப்பதாகும்.
  • கணக்குகள் மற்றும் வேறு அறிக்கைகளின் நம்பகத்தன்மையை நிர்ணயித்தல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு முறைகளினால் சரியான நிதிக் கூற்றுக்களை தயார் செய்வதற்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என்பதை பரிசீலனை செய்தல்.
  • நிறுவனத்தின் பதவியணியினருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் அவர்களின் செயலாற்றுகையின் தரத்தை மதிப்பீடு செய்தல்.
  • திணைக்களம் / நிறுவனத்திற்கு உரித்தான சொத்துக்கள், சகல வகையிலும் சேதங்களுக்கு உள்ளாவதிலிருந்து எந்தளவுக்கு பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிதல்.
  • அரசாங்கத்தின் தாபன விதிக்கோவை, அரசாங்கத்தின் நிதிப் பிரமாணங்கள் மற்றும் பொது நிர்வாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சினால் மற்றும் பொதுத் திறைசேரியினால் அடிக்கடி வெளியிடப்படுகின்ற சுற்றறிக்கைகள் மற்றும் வேறு குறைநிரப்பு அறிவுரைகளும் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதைக் கண்டறிதல்.
  • வீண்விரயம், பயனற்ற செயற்பாடுகள் மற்றும் அளவுக்கதிகமாக செய்யப்படுகின்ற செலவினங்களைத் தடுத்தல் மற்றும் அவற்றை வெளிப்படுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற உள்ளக கட்டுப்பாட்டு முறைமையின் போதியளவான தன்மை பற்றி ஆராய்தல்.
  • திணைக்களம் / நிறுவனத்தின் கணக்கீட்டு ஒழுங்குமுறை மற்றும் யாதாயினும் நிதி செலவாவதற்கு காரணமாகின்ற குறித்த நடவடிக்கைகளை பரிசீலனை செய்தல் மற்றும் திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் ஆதனங்கள் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும், முறையாகவும் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி பரிசீலனை செய்தல்.
  • தேவையான சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை நடாத்தல்.
  • உற்பத்தித்திறன்மிக்க செயலாற்றுகைக்காக கட்டமைப்புசார் பகுப்பாய்வு மற்றும் செயலாற்றுகைப் பகுப்பாய்வை மேற்கொள்ளல்.
  • முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தினால் அடிக்கடி வெளியிடப்படுகின்ற அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவதும், அவ்வவ் ஆண்டுகளில் ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை அமைச்சின் கணக்காய்வு, முகாமைத்துவக் குழுக் கூட்டத்தை நடாத்துவதும், அக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை அமுல்படுத்துவது பற்றிய முன்னேற்றம் சம்பந்தமான பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இப்பிரிவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள மற்றொரு பணியாகும்.

ஒழுங்கமைப்பு

பிரிவுத் தலைவர்

திருமதி. ஐ.டி.ஐ.எம். குணசேகர
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்
தொலைபேசி - +94-11 2682459 (தொடர் - 171)
தொலைநகல் - +94 11 2682459
மின்னஞ்சல் - cia[at]pubad.gov.lk

.
.

எம்மைத் தொடர்பு கொள்ள

கொழும்பு – 07, சுதந்திர சதுக்கத்திலுள்ள அரசாங்க நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரதான கட்டடத்தின் 'எம்' (ஆ)  மாடியில் அமைந்துள்ளது.

பிரிவு தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் +94 11 2667171 (தொடர் - 2151) +94 11 2667171 cia[at]pubad.gov.lk
உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு +94 11 2696211-116 (தொடர் - 11) +94 11 2667171
Last Updated on Friday, 17 May 2013 07:06  

இற்றைப்படுத்தப்பட்டது 20-05-2013.
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Visitors Counter
காப்புரிமை © 2013 பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.
அபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.