இந்நாட்டு கிராமிய வைத்தியசாலைகளின் விருத்தி, ஆரம்ப நிலைச் சுகாதாரப் பிரிவினை மேம்படுத்துவதனைப் போன்றே கல்வித் துறையின் விருத்திக்கும் தொடர்ச்சியான உதவியை வழங்குவதாக உலக வங்கியின் இந்நாட்டு மற்றும் மாலை தீவின் நம்பிக்கை முகாமையாளர் திருமதி. சியோ கன்டா அவர்கள் தெரிவித்தார்கள். அவர் இதுபற்றி குறிப்பிட்டது இன்று (09) ஆந் திகதி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரை அவ்வமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்சமயம் நாட்டில் காணப்படும் பிரதேச வைத்தியசாலைளைப் பாரியளவில் விருத்தி செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து நிதி உதவிகள் பெற்றுள்ளதோடு, எதிர்வரும் காலங்களில் தம்புள்ளை, தேவஹுவ, கலேவெல போன்ற கிராமிய வைத்தியசாலைகளை விருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சருக்கு தெரிவித்தார். வருங்காலத்தில் நாட்டு மக்களின் சுகாதார அட்டை முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது தனது அமைப்பின் கண்காணிப்பின் கீழ் என உலக வங்கியின் பிரதிநிதிகள் அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்கள். அதனால் தனது உடலாரோக்கியம் தொடர்பாக இற்றைப்படுத்தப்பட்ட தகவல் தொகுதியொன்று பேண முடியும் எனவும் அறிவித்தார். அத்தோடு கிராமியக் கல்வி மட்டத்தை மேம்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் ரூபவாஹினி ஊடகத்தைப் போன்றே வானொலி ஊடகத்தையும் பயன்படுத்துவதற்கு உலக வங்கி எதிர்பார்ப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினார்கள். அதிகளவு கலைப் பிரிவைச் சேர்ந்த உயர் தர மாணவர்கள் உள்ள பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்து அப்பாடசாலைகளை இலக்காகக் கொண்டு ஆங்கிலக் கல்வியை வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்திற்கு அமைச்சின் செயலாளர் திரு. ஜே.ஜே. ரத்னசிரி அவர்கள், அமைச்சின் ஆலோசகர் திரு. மஹிந்த மடிஹேவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.