ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரையும் மாநகர சபையாக அபிவிருத்தி செய்யும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் எண்ணக்கருவினை நடைமுறைப்படுத்தும் வகையில், 7 மாவட்டங்களில் உள்ள 7 தலைநகரங்களை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகர சபைகளாக தரமுயர்வு செய்யப்பட்டுள்ள 7 மாநகர சபைகளில் வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்கள் ( நகர சபைகள்) முதலாவது வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் மன்னார் நகரங்கள் இரண்டும் உட்பட இந்த 7 நகர சபைகளையும், மாநகர சபைகளாக மாற்றுவதற்கும், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இதற்கு முன்னர் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது.
இவ்வாறு மாநகர சபைகளாக தரமுயர்த்தப்பட்ட 7 உள்ளூராட்சி நிறுவனங்களில் 5 இனை, பிரதமரும், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட, இலக்கம் 2296/05 மற்றும் இலக்கம் 2296/37 இனைக் கொண்ட அதிவிசேட வர்த்தமானியின் கீழ் நகர சபைகளாக மாற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள நகர சபைகள் இரண்டுமான மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய உள்ளூராட்சி மன்றங்கள் மாநகர சபைகளாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படவுள்ளது.