இதுவரை காலமும் இராஜகிரியையில் இயங்கி வந்த தேசிய மொழிகள் பிரிவை இன்று கொழும்பு 07 இல் அமைந்துள்ள பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் வளாகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை காலமும் இந்தப் பிரிவு தனியார் கட்டடமொன்றை வாடகைக்குப் பெற்று இயங்கி வந்ததது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட தேசிய மொழிகள் பிரிவு இன்று (02 ஆம் திகதி) காலை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதம மந்திரியுமான திரு. தினேஷ் குணவர்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பிரதம மந்திரி அவர்கள் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதிலும் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக நீதித் துறையில் மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களின் சேவையை நீண்ட காலமாகப் பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.இந்த நிலைமையைக் குறைப்பதற்காக மொழிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்களும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட பிரதம மந்திரி அவர்கள், ஆங்கில மொழி அறிவை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் உயர் மட்டத்த்திலான கல்வியை இந்த உத்தியோகத்தர்களுககு வழங்குவதற்காக மொழி பெயர்ப்புத் துறையை பல்கலைக்கழகங்களுடனும் தொடர்புபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதற்காக கனடா போன்ற நாடுகள் வழங்கும் வெளிநாட்டு உதவிகளை பெரிதும் பாராட்டுகிறோம் என்றும் பிரதம மந்திரி அவர்கள் குறிப்பிடார்கள்.
தேசிய மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவது, அரசகரும மொழி ஆணைக்குழுவுடன் இணைந்து மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், மொழிக் கொள்கைகளுடன் தொடர்புடைய சுற்றறிக்கைகளை வெளியிடுதல் என்பவற்றுடன் அரசகரும மொழிப் பரீட்சைகளை நடாத்துதலும் இந்தப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் மொழிசார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும் 1956 துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தீர்வுகளை உடனடியாக வழங்குதலும் இந்தப் பிரிவினால் வழங்கப்படுகின்றது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, அசோக பிரியந்த, அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன உள்ளிட்ட அமைச்சின் உத்தியோகத்தர்கள் பலர் பங்கேற்றனர்.
புத்திக ரூபசிங்க
ஊடகச் செயலாளர்,
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு