பிரிவின் பெயர் - பாராளுமன்ற விவகாரப் பிரிவு
இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமானது, பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனானதும் பயனுறுதி வாய்ந்ததுமான சேவைகளை வழங்க முடியுமான வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும். அலுவலக உபகரணங்கள், வாகன உரிமங்கள் வழங்குதல் மற்றும் காப்புறுதி வசதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரத்தியேக ஊழியர் குழாத்தை நியமனம் செய்தல், சேவையை முடிவுறுத்தல், அந்த ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பணிக்கொடை வழங்குதல் மேலும் அவர்களுக்கு பயிற்சியளித்தல் என்பன இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகளாகும்.
தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் பயனுறுதி மிக்க மக்கள் சேவைக்காக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களை வலுவூட்டல்.
பணிக்கூற்று
கெளர பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பொது மக்களுக்கான சேவையை உகந்த அளவில் வழங்க ஆதரவு சேவைகளை வழங்குதல்.
நோக்கமும் பணிகளும்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக பணியாட்தொகுதியினரை நியமித்தலும், சேவையை முடிவுறுத்தலும்.
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக பணியாட்தொகுதியினருக்கு சம்பளம் வழங்குதல்
- சேவையை முடிவுறுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேகப் பணியாட்தொகுதியினருக்கு பணிக்கொடை செலுத்துதல்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலக உபகரணங்களை வழங்குதல்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களிடமும் செல்வதற்கு முடியுமான வகையில் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் தீர்வை வரியற்ற வாகன உரிமங்களை வழங்குதல்.
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டுக் காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
- கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பணியாட்தொகுதியினருக்கான பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்
அமைப்பின் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஆர்.எம்.என்.இ.கே. ரணசிங்க மேலதிகச் செயலாளர்
|
திரு. டி.எம்.சி. நாலக சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
திரு எல்.எல்.எஸ். சஞ்ஜீவ கணக்காளர்
|
|||||||||
பொதுவான விடயங்கள்
|
|||||||||
முகவரி: பாராளுமன்ற விவகாரப் பிரிவு, 18 ஆம் மாடி, ‘“நில மெதுர”,எல்விடிகல மாவத்தை, நாரஹேன்பிட, கொழும்பு 05. |