அறிமுகம்
ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் கீழ் அரசாங்க நிர்வாகச் செயலாளருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றுதல், ஓய்வூதியம் தொடர்பான கொள்கை விடயங்களை தொகுத்தல், ஓய்வூதியர்களின் மற்றும் ஓய்வூதியச் சங்கங்களினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் ஓய்வூதியத் திணைக்களத்தின் தாபன நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்தல் போன்றவற்றினை ஓய்வூதியப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
இப்பிரிவு மேலதிகச் செயலாளரின் ( அரச நிர்வாக ) மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுவதோடு கிட்டிய மேற்பார்வை அலுவலராக சிரேஷ்ட உதவிச் செயலாளர் ( ஓய்வூதியம்) நடவடிக்கை மேற்கொள்வதுடன், உதவிச் செயலாளர் ( ஓய்வூதியம்) பதவியொன்றும் நிலவுகின்றது.
தொலைநோக்கு
"திருப்திகரமான ஓய்வூதியாச் சமூகம்"
பணிக்கூற்று
"ஓய்வூதியம் பெறுநர்களின் வாழ்வினை கட்டியொழுப்புவதற்காக ஓய்வூதிய முரண்பாடுகளை அகற்றுதல், நிலவும் கொள்கைகளை திருத்தியமைத்தல் மற்றும் புதிய கொள்கைகளைத் தொகுத்தலை உறுதிப்படுத்துதல்"
இலக்குகள்
- ஓய்வூதியம் தொடர்பாக அரசாங்க நிர்வாகச் செயலாளரின் கட்டளைகளை வெளியிடுவதற்கு அவசியப்படும் சந்தர்ப்பங்களின் போது அதனை மிகத் துரிதமாக நிறைவேற்றல்.
- ஓய்வூதியம் பெறுநர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன், ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான ஆலோசனைகளை வெளியிடல்.
- அவசியப்படும் போது, ஓய்வூதியத் திணைக்களத்தின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக உதவுதல்.
- ஓய்வூதியத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை கண்கானித்தல் மற்றும் ஒருங்கிணைப்புச் செய்தல்.
- ஓய்வூதியம் வழங்குதலை நியாயமான முறையில் இடம்பெறுகின்றதா என்பதனை உறுதிப்படுத்துவதற்காக அவசியப்படும் வகையில் கொள்கைகளை திருத்தியமைத்தல் மற்றும் நாளதுவரைப்படுத்துதல்.
செயற்பாடுகள்
- ஓய்வூதியம் பெறுநர்கள் மற்றும் அவர்களின் சங்கங்களினால் முன்வைக்கப்படும் குறைபாடுகள் மற்றும் முறைப்பாடுகளை விசாரணை செய்தல் மற்றும் அவசியப்படும் வகையில் குறித்த நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பிணக்குகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- ஓய்வூதிய நிலுவை, ஒய்வூதியத்தினை ஒப்படைத்தல், உரித்துடைமை கோரப்படாத ஓய்வூதியங்கள் தொடர்பான பிணக்குகளுக்கு பதிலளித்தல்.
- ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12 மற்றும் 15 ஆம் பிரிவுகளின் கீழ் ஓய்வூதியம் பெறச் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக செயலாளரின் முடிவினை உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல்.
- ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் மூலம் அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வேறு பணிகளை நிறைவேற்றுவதற்கு உரித்தான செயற்பாடுகள்.
- ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய கட்டளைச் சட்டங்களை திருத்தியமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- ஓய்வூதியம் தொடர்பான நடவடிக்கைகளின் போது உரித்துடைய சகல நிறுவனங்கள் மற்றும் அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புச் செய்து நடவடிக்கை எடுத்தல்.
நிறுவனக் கட்டமைப்பு
ஓய்வூதியம் தொடர்பாக தற்போது நிலவும் சட்டங்கள் மற்றும் சுற்றறிக்கை
- ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு மற்றும் அதன் திருத்தங்கள்
- 1989 இலக்கம் 01 இனைக் கொண்ட விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்
- 1983 இலக்கம் 24 இனைக் கொண்ட விதவைகள் தபுதாரர்கள் ஓய்வூதியச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்
- அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்குவிதிக் குறிப்பு
- தாபன விதிக்கோவையின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 33 மற்றும் 36 ஆம் பிரிவுகள்
- அனைத்து ஓய்வூதியச் சுற்றறிக்கைகள்
- ஓய்வூதியம் தொடர்பான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை
- 1970 இலக்கம் 18 இனைக் கொண்ட ஆயுதப் படை விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டம்
- ஆயுதப் படை ஓய்வூதியச் சட்டம்
ஓய்வூதியம் தொடர்பாக அமைந்த அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இவ் இணையத்தளத்தின் சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பகுதியிலும், ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஓய்வூதியத் திணைக்களத்தின் www.pensions.gov.lk எனும் இணையத்தளத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.
தொடர்பு விபரங்கள்
ஓய்வூதியத் திணைக்களம் (தொடர்பு விபரங்கள்) |
ஓய்வூதியத் திணைக்களம் - www.pensions.gov.lk | ||||||||||||||||||
தொலைபேசி இலக்கம் | +94 112431647 | ||||||||||||||||||
துரித தொலைபேசி இலக்கம் | 1970 | ||||||||||||||||||
பொது நிருவாகப் பிரிவு - ஓய்வூதியப் பிரிவு |
|||||||||||||||||||
திருமதி. ஏ.ஏ.டி.எஸ். அத்தபத்து சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
செல்வி. பி.ஏ.எம்.என். ரத்நாயகா உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||