இலங்கைக்கான புதிய கனேடிய உயர்ஸ்தானிகர் திரு. எரிக் வோல்ஷ் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு. நீல் பண்டார ஹபுகின்ன ஆகியோருக்கு இடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று கடந்த 17ஆம் திகதி அமைச்சில் இடம்பெற்றது.
அமைச்சு என்றவகையில் அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் போது கனேடிய அரசு காட்டும் ஒத்துழைப்பு தொடர்பில் இங்கு இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதுடன், அது குறித்து கனடா அரசாங்கம் காட்டிய அக்கறைக்கு அரசாங்கத்தின் சார்பில் உயர்ஸ்தானிகருக்கு அமைச்சின் செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் மொழியினால் பெரும் பங்காற்ற முடியும் என்பதை வலியுறுத்திய திரு எரிக் வால்ஷ், அதற்காக இலங்கைக்கு தமது அரசாங்கத்தின் ஆதரவை வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தித் தலைவர் செல்வி. லிண்டா எரிக்ஸ், அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் அசோகா, தேசிய மொழிப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஜி.எஸ்.விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஊடகப் பிரிவு