ஒரே விதத்தில் மொழியை உச்சரிக்கும் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்
-பிரதம மந்திரி தினேஷ் குணவர்தன ...2023.07.05 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற மொழிபெயர்ப்பாளர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையில் நியமனம் வழங்கும் நிகழ்வு கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதம மந்திரி இவ்வாறு கூறினார்.
அங்கு கருத்துத் தெரிவித்த பிரதம மந்திரி
"எமது நாட்டில் இரண்டு தாய்மொழிகளையும் பயன்படுத்தும் ம்ககள் இரு்ப்பதனால் மொழிபெயர்ப்பின் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். பொருளாதாரத்திற்கு, சேவைகளுக்கு, மக்கள் வாழ்க்கைக்கு மொழிபெயர்ப்பு முக்கியம் என்பதால் அதனை இலகுபடுத்துவதற்கு நீங்கள் இவ்வாறு தினைக்களத்தினால் நடாத்தப்படும் பயிற்சிகளுக்கு உட்பட்ட வகையில் மொழிபெயர்ப்புப் பணியில் இணைகிறீர்கள். எழுத்து மொழியைப் போன்றே நாங்கள் பேசும் மொழியும் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடுகின்றது. பல்வேறு பிரதேசங்களின் ஊடாகப் பயனிக்கும் போது அந்த அனுபவத்தை நீங்கள் பெறலாம்.
சிங்கள மொழியை நன்றாகப் பேசும் தென் மாகாணத்திற்குச் சென்றால் உச்சரிப்பு வேறுபடுகின்றது. கிராமத்துக்குச் சென்றால் உச்சரிப்பு வேறுபடுகின்றது. இளைஞர்கள் இதனை அதிகம் கவனத்தில் எடுக்காமல் இருக்கலாம். அதேபோன்று தமிழ் மொழியும் பிரதேசங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம், மலைநாடு என உச்சரிப்பு வேறுபடுகின்றது. இந்த வேறுபாடுகள் படிப்படியாகக் குறைந்து ஒரே விதத்தில் மொழியை உச்சரிக்கும் காலத்தை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அரசாங்க அலுவலகங்கள் ஒவ்வொன்றிலும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவர்கள் இருப்பது அவசியமாகும். அதில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை நிரப்புவது பொது நிருவாக அமைச்சு என்ற வகையில் எமது கடமையாகும். எனினும் அரசாங்கப் பரீட்சைகளின் புள்ளிகளை மாற்ற அமைச்சரால் முடியாது. அதனை நான் பணிவுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். பரீட்சை வெட்டுப் புள்ளி எதுவோ அதிலிருந்து பயணிப்பதே எஞ்சியுள்ளவர்களை உள்ளடக்குவதற்கான கொள்கையாக ேஏற்றுக்கொள்கிறேன்."
இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர அவர்களும் இதன் போது கருத்துத் தெரிவித்தார். இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் எஸ். ஆலோக பண்டார, மேலதிக செயலாளர்கள் மற்றும் நியமனம் பெறுபவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.