முகாமைத்துவ சேவைப் பரீட்சையில் சித்தியடைந்த 447 பேருக்கான முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் 3ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (10.10.2023) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
ஆட்சேர்ப்பு மீளாய்வுக் குழுவின் பரிந்துரைகள், அமைச்சரவையின் தீர்மானங்கள் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பிரகாரம் முகாமைத்துவ சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மூன்று கட்டங்களின் கீழ் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.