ஓய்வூதியத் திருத்தத்திற்கான ஏற்பாடுகளை ஒதுக்குவதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமரும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான திரு.தினேஷ் குணவர்தன அவர்கள் 08.11.2023 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 31.12.2015 க்கு முன்னர் மற்றும் 01.01.2016 முதல் 01.01.2020 வரை ஓய்வு பெற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய திருத்தத்திற்காக வருடாந்தம் 67,608 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
" பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2016 இன் ஏற்பாடுகளின்படி, ஓய்வூதியங்களை திருத்துவதற்கு அரசாங்கம் இரண்டு சந்தர்ப்பங்களில் அரசினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், நிலவிய நிதி மற்றும் பொருளாதார சிக்கல்களின் மத்தியில், அதற்கு போதுமான நிதியை ஒதுக்க முடியாமையினாலும், அரசின் முன்னுரிமைகள் மாறியமையினாலும், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற அரச கொள்கையின் காரணமாக சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாயினும் அதில் எவ்விதத் தட்டிக் கழிப்பும் இடம்பெறவில்லை என்று பிரதமர் கூறினார்.
பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன 08.11.2023 ஆம் திகதி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.