அறிமுகம்
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ப அரச நிர்வாகப் பொறிமுறையொன்றை நிறுவுதல் இந்த அமைச்சின் முதன்மையான மற்றும் காலத்தின் தேவையொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி, இந்த அமைச்சின் பொது நிர்வாகப் பிரிவின் பிரதான பொறுப்பாகிய பொதுச் சேவையில் மனித வளத்தின் முறையான முகாமைத்துவத்திற்கு தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், மனித வள முகாமைத்துவத்திற்கான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் மற்றும் நிகழ்நிலைத் தளங்களைத் தயாரித்தல் (Online Platform), தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற காலாவதியான செயன்முறைகளுக்குப் பதிலாக தேவையற்ற பணிப் நடவடிக்கைகள் மற்றும் தாமதங்களை இயன்றளவு குறைக்கும் வகையில் செயன்முறைகளை மீளாக்கம்செய்தல் (Process Reengineering), டிஜிட்டல் மயமாக்கலின் மூலம் எதிர்கால சந்ததியினருக்கான மற்றும் நவீன உலகப் போக்குகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற பொது நிர்வாக பொறிமுறையை உருவாக்குவதற்குத் தேவையான நவீனமயமாக்கல்கள் மற்றும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இப்பிரிவு தாபிக்கப்பட்டுள்ளது.
இங்கு, பொது மனித வள முகாமைத்துவத்தின் காலத்தின் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்களை மையமாகக் கொண்டு முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்களை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, புதிய பொது முகாமைத்துவச் செயன்முறைகள்(New Public Management) மற்றும் டிஜிட்டல் - பொது நிர்வாகச் செயன்முறைகளைப்(Digital – Government) பயன்படுத்துவதன் மூலம் மேற்கண்ட இலக்குகளை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கு
“நவீனமயமாக்கத்தின் மூலம் பொது சேவையில் விஷேடத்துவத்தை அடைந்துகொள்ளுதல்”
பணி
“பொதுச் சேவையை நவீனமயமாக்குவதன் மூலம், பொது சேவையில் விஷேடத்துவத்தை அடைந்துகொள்வதற்காக, சேவைகளை டிஜிட்டல் மயமாக்கம், மெய்நிகராக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி இந்த அமைச்சின் செயற்பாடுகளை நவீனமயமாக்குதல் நவீன முகாமைத்துவச் செயன்முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயற்பாடுகளை மீளாக்கம் செய்வதன் மூலம் நோக்கங்கள் அடைதல் மேற்கொள்ளப்படுகின்றது”
நோக்கங்கள்
- பொதுச் சேவையை வினைத்திறன் மற்றும் விளைதிறன் உள்ள விதத்தில் வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களை அறிமுகப்படுத்துதல்.
- சேவைத் திருப்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- குறைந்த செலவில் சிறந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்தல்.
- மனித வள முகாமைத்துவக் கட்டமைப்பு மூலம் பொதுச் சேவையின் பணிகளை எளிதாக்குதல்.
- டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் பொதுச் சேவையில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்.
- செயற்பாடுகளை மீளாக்கம் செய்வதன் மூலம் பொதுச் சேவையின் பணிப் படிமுறைகளை எளிதாக்குதல்.
- நவீனமயமாக்கல் மூலம் எதிர்கால சந்ததியினர் மற்றும் நவீன உலகத்தின் தேவைகளுக்குப் பொருத்தமான பொதுச் சேவையை உருவாக்குதல்.
செயற்பாடுகள்
- அமைச்சின் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் மெய்நிகராக்குவதற்கான ஒரு மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல்.
- பொதுத்துறையில் மனித வள முகாமைத்துவத்துக்கான தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பொன்றினை உருவாக்குதல்.
- அமைச்சின் ஆவணங்கள் மற்றும் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆவண முகாமைத்துவக் கட்டமைப்பொன்றினை நிறுவுதல்.
- அமைச்சின் செயற்பாடுகளை மீளாக்கம் செய்யும் திட்டமொன்றினைத் தயாரித்தல்.
அழைப்புக்களுக்கான தகவல்கள்
திரு. ஆர்.ஜி.சி.பி.டி. ராமவிக்கிரம சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பொது சேவைகள் மறுசீரமைப்பு)
|
திருமதி கே.எம். ஷஷினி அனுபமா உதவிச் செயலாளர் (பொது சேவைகள் மறுசீரமைப்பு)
|
||||||||||||||||||