புதிதாக நியமிக்கப்பட்ட பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் கொழும்பு 07, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள அவ் அமைச்சில் தமது கடமையை (19ஆம் திகதி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்களுக்கு அமைச்சர் குறிப்பிட்டு கூறியது, புதிய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததுடன் நாட்டின் பயணப் பாதையில் புதிய அத்தியாயமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவாகும். இவ் அத்தியாயத்தினை முறையாக செயற்படுத்தி மக்கள் நலன் கொண்ட பயணமொன்று செல்வதற்கு அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களும் ஒன்றாகச் செயற்படுதல் வேண்டும் எனவும் இங்கு அமைச்சர் குறிப்பிட்டார். மக்களுக்காக பணியாற்றும் போது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கான சூழலொன்றை உருவாக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என குறிப்பிட்ட அமைச்சர் அங்கு உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் தடைகளைப் போன்றே அவ் சேவைகளை பெற்றுக் கொள்ளும் போது நாட்டிலுள்ள மக்களுக்கு ஏற்படும் தடைகளும் இல்லாமற் செய்வதும் தமது எதிர்பார்ப்பு எனவும் இங்கு குறிப்பிட்டார்.
இவ் நிகழ்விற்கு அமைச்சரவையின் செயலாளர் எஸ்.ஆலோகபண்டார அவர்கள் உட்பட அமைச்சின் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.