தகவல் தொழில்நுட்பப் பிரிவானது இணையத்தளம், உள்ளூர் வலையமைப்பு, செயலாற்றுகைக் கண்காணிப்பு முறைமை, இலங்கை அரசாங்க வலையமைப்பு, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை தரவுத்தளம், பொதுமக்களை விளிக்கும் முறைமை, கணனி மென்பொருள் வன்பொருள் முகாமைத்துவம், அரசாங்க பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளைப் பெறுகின்ற மற்றும் பல்வேறு மறுசீரமைப்புகளை மூலமாகக் கொண்ட த.தொ.தொ.நு. கருத்திட்ட முகாமைத்துவத்துடன் சம்பந்தப்படுதல் என்பவை உள்ளடங்கலாகத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை முகாமைப்படுத்தும் பணிக்குப் பொறுப்பாக இருக்கிறது.
செயற்பாடுகள்
- அமைச்சின் பணிப்பாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள்
- அமைச்சின் இணையத்தளத்தைப் பராமரித்தலும் விருத்திசெய்தலும்
- அமைச்சின் கிளைகளுக்காகத் தரவுத்தளத்தையும் சம்பந்தப்பட்ட மென்பொருளையும் அபிவிருத்தி செய்தல்
- அமைச்சின் உள்ளூர் வலையமைப்பையும் கணனிகளையும் பராமரித்தல்
- த.தொ. எழுத்தறிவை அதிகரிப்பதற்காக அமைச்சின் பணியாளர்களுக்குப் பயிற்சியளித்தல்
- தபால், மின்னஞ்சல், இணையத்தளம் என்பவற்றினூடாக அ.நி. சுற்றறிக்கைகளை விநியோகித்தல்
- தனியார்துறை முகவர்களுக்கு த.தொ. அடிப்படையாகக் கொண்ட சேவைகளை வழங்குதல்
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திரு. பி.டபிள்யூ. விக்கிரமசிங்க
|
||||||||||
திருமதி.எச்.ரி.ஏ. குறுந்துகும்புற
|
||||||||||
தகவல் தொழில்நுட்பப் பிரிவு
|