"பகுத்தறிவால் உண்மையைக் காண்போம்"
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு அமைக்கப்பட்டதாகும்.
தொலைநோக்கு
"இலங்கையில் அரச துறையில் ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை வாய்ந்ததும் மற்றும் வினைத்திறன், விளைதிறனுடைய அலகாக மாற்றமடைதல்"
பணிநோக்கு
"அரச சேவையில் நல்லாட்சிக்கு தேவையான பண்பைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பை பேணுவதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஆலோசனை முன்மொழிவுகளை வழங்குதல்"
புலனாய்வுப் பணிகள்
Investigation
இவ்வமைச்சுடன் ஒருங்கிணைக்கப்பட்ட/நாடலாவிய ரீதியான சேவையில் உள்ள அலுவலர் சம்பந்தமாக
- முறைப்பாடுகளைப்பெறல் (நிறுவகதலைவர்களிடமிருந்து/பொதுமக்களிடமிருந்து/எழுத்து மூலம்/வாய் மூலம்)
- ஆரம்ப புலனாய்வு செய்வதை தீர்மானித்தல்/ நடவடிக்கை எடுக்காதிருத்தல்
- புலனாய்வு உத்தியோகத்தரை பிரேரித்தல்/ புலனாய்வு உத்தியோகத்தரை நியமித்தல்
- முறையான நியமன கடிதத்தை உரிய புலனாய்வு உத்தியோகத்தரிற்கு விநியோகித்தல்
- புலனாய்வை ஆரம்பித்தல் (அறிக்கைகளை பதிதல்/காரியாலயங்களை பரீட்சித்தல்)
- ஆரம்ப புலனாய்வு அறிக்கையை தயாரித்தல்
- ஆரம்ப புலனாய்வு அறிக்கையை அதிகாரம் அளித்த நிறுவனத்திடம் சமர்ப்பித்தல்
ஆராய்ச்சி படிமுறை
- ஆராய்ச்சிக்கான தலைப்பை தெரிவு செய்தல் (அலுவலர்களின் ஆலோசனைப்படி, வெளியாளர்களின் வேண்டுகோள், நிறுவனங்களின் ஆராய்ச்சி)
- உத்தியோகத்தர்களை முன்மொழிதல்
- குறித்த ஆராய்ச்சி சம்பந்தமாக ஆரம்ப கற்கையை மேற்கொள்ளல்
- தகவல் சேமிப்பு முறையை தீர்மானித்தல்(வினாப்பட்டியல், நேர்முகம், விடய ஆய்வு)
- தெரிவு செய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி தரவுகளைப் சேகரித்தல்
- சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தல்
- பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுக்கேற்ப ஆராய்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பித்தல்
கண்காணிப்பு
- நடைபெற்றுக் கொண்டிருக்கும் புலனாய்வுகளின் முன்னேற்றத்தை கண்காணித்தல்
- தொடர்ச்சியான தொடர்பாடல் மூலம் குறித்த நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொள்ள நியமித்த புலனாய்வு உத்தியோகத்தரை ஒருங்கிணைத்து வினைத்திறனாக புலனாய்வு நடைபெறுவதை முகாமை செய்தல்
- வேறு நிறுவனங்களிலிருந்து உடனடியாக புலனாய்வு அறிக்கை கோரப்பட்டிருப்பின் அவைகளை பின்தொடர்ந்து அறிக்கைகள் பெறப்படுவதை உறுதி செய்தல்
- புலனாய்வு செய்யப்பட்டு அறிக்கை உரிய அமைச்சு/நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
![]() மேலதிகச் செயலாளர் (சீர்திருத்தம் மற்றும் விசேட புலனாய்வு)
|
![]() சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
![]() உதவிச் செயலாளர்
|
![]() உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
![]() நிருவாக உத்தியோகத்தர்
|
சீர்திருத்தம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவு
|
||||