Divisions
முகாமைத்துவ மறுசீரமைப்பு, உற்பத்தித் மற்றும் பொது உறவுகள்
தொடர்பு விபரங்கள்
![]() மேலதிகச் செயலாளர் (மனித வள மற்றும் அபிவிருத்தி)
|
|||||||||||||||||||
![]() பிரதான கணக்காளர்
|
![]() உதவிப் பணிப்பாளர்
|
||||||||||||||||||
சீர்திருத்தம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவு
"பகுத்தறிவால் உண்மையைக் காண்போம்"
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்குகின்ற நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாகப் புலனாய்வு செய்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு அமைக்கப்பட்டதாகும்.
தொலைநோக்கு
"இலங்கையில் அரச துறையில் ஊழல் மற்றும் இலஞ்சம் என்பவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தலைமை வாய்ந்ததும் மற்றும் வினைத்திறன், விளைதிறனுடைய அலகாக மாற்றமடைதல்"
பணிநோக்கு
"அரச சேவையில் நல்லாட்சிக்கு தேவையான பண்பைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பை பேணுவதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றிற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஆலோசனை முன்மொழிவுகளை வழங்குதல்"
புலனாய்வுப் பணிகள்
Investigation
இவ்வமைச்சுடன் ஒருங்கிணைக்கப்பட்ட/நாடலாவிய ரீதியான சேவையில் உள்ள அலுவலர் சம்பந்தமாக
- முறைப்பாடுகளைப்பெறல் (நிறுவகதலைவர்களிடமிருந்து/பொதுமக்களிடமிருந்து/எழுத்து மூலம்/வாய் மூலம்)
- ஆரம்ப புலனாய்வு செய்வதை தீர்மானித்தல்/ நடவடிக்கை எடுக்காதிருத்தல்
- புலனாய்வு உத்தியோகத்தரை பிரேரித்தல்/ புலனாய்வு உத்தியோகத்தரை நியமித்தல்
- முறையான நியமன கடிதத்தை உரிய புலனாய்வு உத்தியோகத்தரிற்கு விநியோகித்தல்
- புலனாய்வை ஆரம்பித்தல் (அறிக்கைகளை பதிதல்/காரியாலயங்களை பரீட்சித்தல்)
- ஆரம்ப புலனாய்வு அறிக்கையை தயாரித்தல்
- ஆரம்ப புலனாய்வு அறிக்கையை அதிகாரம் அளித்த நிறுவனத்திடம் சமர்ப்பித்தல்
ஆராய்ச்சி படிமுறை
- ஆராய்ச்சிக்கான தலைப்பை தெரிவு செய்தல் (அலுவலர்களின் ஆலோசனைப்படி, வெளியாளர்களின் வேண்டுகோள், நிறுவனங்களின் ஆராய்ச்சி)
- உத்தியோகத்தர்களை முன்மொழிதல்
- குறித்த ஆராய்ச்சி சம்பந்தமாக ஆரம்ப கற்கையை மேற்கொள்ளல்
- தகவல் சேமிப்பு முறையை தீர்மானித்தல்(வினாப்பட்டியல், நேர்முகம், விடய ஆய்வு)
- தெரிவு செய்யப்பட்ட முறையைப் பயன்படுத்தி தரவுகளைப் சேகரித்தல்
- சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தல்
- பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளுக்கேற்ப ஆராய்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்ப்பித்தல்
கண்காணிப்பு
- நடைபெற்றுக் கொண்டிருக்கும் புலனாய்வுகளின் முன்னேற்றத்தை கண்காணித்தல்
- தொடர்ச்சியான தொடர்பாடல் மூலம் குறித்த நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொள்ள நியமித்த புலனாய்வு உத்தியோகத்தரை ஒருங்கிணைத்து வினைத்திறனாக புலனாய்வு நடைபெறுவதை முகாமை செய்தல்
- வேறு நிறுவனங்களிலிருந்து உடனடியாக புலனாய்வு அறிக்கை கோரப்பட்டிருப்பின் அவைகளை பின்தொடர்ந்து அறிக்கைகள் பெறப்படுவதை உறுதி செய்தல்
- புலனாய்வு செய்யப்பட்டு அறிக்கை உரிய அமைச்சு/நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்தல்
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
![]() மேலதிகச் செயலாளர் (சீர்திருத்தம் மற்றும் விசேட புலனாய்வு)
|
![]() சிரேஷ்ட உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
![]() உதவிச் செயலாளர்
|
![]() உதவிச் செயலாளர்
|
||||||||||||||||||
![]() நிருவாக உத்தியோகத்தர்
|
சீர்திருத்தம் மற்றும் விசேட புலனாய்வு பிரிவு
|
||||
மனித வள அபிவிருத்தி
தொடர்பு விபரங்கள்
|
|||||||||
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், அரச சேவைப பிரிவுக்குரிய உள்ளக கணக்காய்வுப் பிரிவு, நி.பி. 133 இன் பிரகாரம், அமைச்சின் செயலாளருக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான உள்ளக கணக்காய்வாளர் ஒருவரின் கீழ் இயங்கி வருகின்றது. அக்கிளைத் தலைவர் உட்பட 12 உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களையும், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் சாரதி ஒருவரையும் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பணியாட்தொகுதியினரைக் தன்னகத்தே கொண்டுள்ளது.
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும், அதன் கீழ் இயங்கும் ஓய்வூதியத் திணைக்களம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம், அரச சேவைகள் பரஸ்பர சேமலாப நிதிச் சங்கம், தொலைக் கல்வி நிலையம், அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழி ஆணைக்குழு, மனித வள மேம்பாட்டிற்கான தேசிய ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம், பாராளுமன்ற விவகாரப் பிரிவு, அரசகரும மொழிப் பிரிவு மற்றும் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டங்களுக்கு உரித்தான உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பும், அதற்கு மேலதிகமாக தேவைப்பாட்டுக்கு ஏற்ப விசேட சோதனைகளும் உள்ளக கணக்காய்வுப் பிரிவின் விடயப் பரப்பினுள் உள்ளடக்கப்படுகின்றது.
தொலைநோக்கு
“தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தவும் பயனுறுதி மிக்க மனித வளம் கொண்ட அரச சேவையை தோற்றுவித்தல்”
பணிக்கூற்று
"அமைச்சினதும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பாக நிலவுகின்ற உள்ளகக் கட்டுப்பாட்டு முறையில் பங்கேற்று, அந்நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுத்தல். அத்துடன் அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் உள்ளக பரிசோதனைகளின் ஒழுங்குமுறை மற்றும் நியமங்கள் குறித்து தொடர்ந்தேர்ச்சியான கணிப்பாய்வு மற்றும் சுயாதீன மதிப்பீட்டினை மேற்கொண்டு பயனுறுதிமிக்க மனித வளத்தின் ஊடாக அரச வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்"
உள்ளக கணக்காய்வுப் பிரிவின் பணிகள்
- அமைச்சின் மேற்பார்வையின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவேற்றும் போது நிதிப் பிரமாணம் 133 இன் படி பின்வருமாறு குறித்துரைக்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துகின்றது.
- தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக திணைக்களம் / நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், திட்டங்களைப் போன்றே உண்மையான செயற்பாடுகள் ரீதியாகவும் வெற்றிகரமாக உள்ளதா எனக் கண்டறிதல்.
- கணக்கு மற்றும் ஏனைய அறிக்கைகளில் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக கையாளப்பட்டுள்ள கணக்கியல் ஒழுங்கு முறைகளின் மூலம் பிழையற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்காக அவசியப்படும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை கண்டறிதல்.
- நிறுவனத்தின் பணியாட்தொகுதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு அவர்களின் செயலாற்றுகைத் தரத்தை மதிப்பீ செய்தல்.
- திணைக்களம் / நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள், சகல விதத்திலும் நட்டங்களிலிருந்து எவ்வளவு துாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டறிதல்.
- அரசாங்க தாபன விதிக்கோவை , அரசாங்க நிதிப் பிரமாணம் மற்றும் பொது நிருவாக விடயப் பொறுப்பு அமைச்சினால் மற்றும் பொதுத் திறைசேரியினால் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய குறைநிரப்பு ஆலோசனைகள் என்பன பின்பற்றப்படுகின்றனவா என கண்டறிதல்.
- வீண்விரயம், செயற்பாடற்ற மற்றும் அளவினை விஞ்சிய வகையில் செலவு செய்வதனைத் தடுப்பது போன்றே, அவற்றைக் கண்டறியப்படுவதற்கு கையாளப்படுகின்ற உள்ளக கட்டுப்பாட்டு முறையின் தர நியமங்களையும் ஆராய்தல்.
- திணைக்களத்தின் கணக்கு நடைமுறைகள் மற்றும் ஏதேனுமொரு வகையில் நிதி செலவாவதற்கு காரணமாக அமையும் செயற்பாடுகளை பரீட்சித்துப் பார்த்தல் மற்றும் திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் வளங்களைப் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் முறைசார்ந்தவாறு பிரயோகிக்கப்படுகின்றா என்பதனை ஆராய்தல்.
- தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளல்.
- உற்பத்தித்திறன் வாய்ந்த செயற்திறனிற்காக தொகுதி ரீதியான பகுப்பாய்வு மற்றும் செயற்திறனை பகுப்பாய்வு செய்தல்.
- முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தினால் அவ்வப்போது பிரசுரிக்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவதும், அந்தந்த வருடங்களின் சகல காலாண்டுக்கும் ஒரு முறை அமைச்சின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை நடாத்துதல், அக்கூட்டங்களில் எட்டப்படும் முடிவுகளை செயற்படுத்துகையினால் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பது இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றொரு பணியாகும்.
- ஓய்வூதியம் செலுத்துதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம் ஓய்வூதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஊழல், மோசடி மற்றும் ஒழுங்கின்மை குறித்து அவதானம் செலுத்துவதும், ஓய்வூதியம் செலுத்துதல் சம்பந்தமான விபரங்களை தரவுத் தளத்தில் மற்றும் ஓய்வூதிய கடிதக் கோப்புக்களில் உள்ள பிணக்குகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முடிவுகளை எடுக்கப் பிரயோகிக்கும் ஆவணங்கள்
- தாபன விதிக்கோவை
- நிதிப் பிரமாணம்
- அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை
- முகாமைத்துவ கணக்காய்வுச் சுற்றறிக்கை
- உள்ளக கணக்காய்வு வழிகாட்டல்
தொடர்பு விபரங்கள்
![]() பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
|
||||||||||
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
|
|||||||
சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 இல் அமைந்துள்ள அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான கட்டிடத்தை அடுத்துள்ள கட்டிடத்தின் முதலாவது மாடியில் தாபிக்கப்பட்டுள்ளது. |
நிதிப் பிரிவு
தொலைநோக்கு
"அரசாங்க துறையில் சிறந்ததோர் அரசாங்க நிதி முகாமையாளராக விளங்குதல்"
பணிநோக்கு
"அரசாங்க வளங்களைப் பேணிப் பாதுகாத்து, வினைத்திறன் மிக்க வகையிலும் வெளிப்படைத்தன்மையாகவும் அவ் வளங்களை கையாளல் மற்றும் சிறந்ததோர் நிதி அறிக்கையிடல் வாயிலாக அரசாங்க நிதி சம்பந்தமாக பொறுப்புக்கூறலுடன் குறுகியகால, நீண்டகால இலக்குகளை அடைந்துகொள்வதை உறுதிப்படுத்துதல்."
நிதிப் பிரிவின் தொனிப்பொருள்
வினைத்திறன் மிக்க சேவையினூடாக பயன்பெறுநர்களை மகிழ்வுறச் செய்தல்
நோக்கம்
- குறித்த நாட்களுக்கு முன்னர் நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தல்.
- கொடுப்பனவு செயற்பாட்டினை ஒழுங்குமுறைப்படுத்துவதன் மூலம் அதற்கென செலவிடப்படும் காலத்தைத் குறைத்துக் கொள்ளல்.
- வருடாந்த வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டினை 100% பயன்படுத்துதல்.
- அமைச்சுக்கு கிடைக்கப்பெறும் கணக்காய்வு விசாரணைகளின் எண்ணிக்கையை 50% குறைத்தல்.
- தவறுகள் மற்றும் விடுபடுதல் என்பவற்றை 100% குறைத்தல்.
- கணனி தரவுமுறைமைகளினூடாக சொத்துக்களின் இருப்பை பேணல், பாதுகாத்தல், உறுதிப்படுத்தல்.
தொழிற்பாடுகள்
- நிதிசார் திட்டங்களை வகுத்தல் மற்றும் பாதீட்டுக் கட்டுப்பாடு.
- அரசாங்க நிதிசார் சட்டதிட்டங்கள் சுற்றறிக்கைகள் ஏற்பாடுகள் என்பவற்றுக்கு அமைய நிதிசார் கொள்கைளை நடைமுறைப்படுத்தல்.
- சொத்துக் கொள்வனவு, பராமரிப்பு மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்குரியதான பணிகளை முன்னெடுத்தல்.
- வருடாந்த நிதிசார் அறிக்கைகள் / முகாமைத்துவ அறிக்கைகள் / செயற்திறன் அறிக்கைகள் என்பவற்றைத் தயாரித்தலும் சமர்ப்பித்தலும்.
- மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவுகள் சம்பந்தமான கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.
- அரசாங்க அலுவலர்களின் முற்பணம் (பீ) கணக்கு தொடர்பான கொடுக்கல் வாங்கலினை அனுமதிக்கப்பட்ட வரையறைகளினுள் பேணல் மற்றும் வருடாந்த கணக்கிணக்க அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்.
- நிதிசார் அலுவல்களுக்கு வேண்டிய செயற்பாடுகளை ஒழுங்கமைத்தலும், தீர்மானமெடுத்தலை இலகுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பான தரவு முறைகள், வேலைசார் கையேடுகள், சரிபார்ப்பு பட்டியல்கள், நியம மாதிரிகள் என்பவற்றைத் தயாரித்தல்.
பெறுமானம்
- வினைத்திறன் + விளைதிறன்
- குழு முயற்சி
- வாடிக்கையாளருக்கு மதிப்பளித்தல்
- திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மை
- 100% மிகச் சரியாகஇருத்தல்
சேவைக் கட்டமைப்பு
பதவி | அங்கீகிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை | உள்ளபடியான பணியாட்தொகுதி |
பிரதான நிதி அலுவலர் | 01 | 01 |
பிரதான கணக்காளர் | 01 | 01 |
கணக்காளர் | 02 | 02 |
நிர்வாக அலுவலர் | 01 | 01 |
அபிவிருத்தி அலுவலர் | 12 | 06 |
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் | 40 | 37 |
அலுவலக உதவியாளர் | 07 | 05 |
சாரதி | 02 | 02 |
மொத்தம் | 66 | 55 |
நிதிப் பிரிவின் பிரதான பிரிவுகள்
பெறுகை பிரிவு
வருடாந்த வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் பொருட்களினதும் சேவைகளினதும் கொள்ளல் தொடர்பாக ஒதுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை வினைத்திறன் மிக்க வகையில் கையாண்டு பெறுகை திட்டத்திற்கு அமைய வேலை, பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
பெறுகைப் பிரிவானது பிரதான கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் பிரிவுத் தலைவர் ஒருவரையும், விடயப்பொறுப்பு கடமைகளை மேற்கொள்வதற்கு 06 அரசாங்க முகாமைத்துவ உதவியாளர்களையும் கொண்டுள்ளது.
பிரதான பணிகள்
- அமைச்சு சம்பந்தமான பெறுகை திட்டங்களை வகுத்தல்.
- உரிய பெறுகை முறையில்களை கடைப்பிடித்தல்.
- வருடாந்த பெறுகை குழுக்களை நியமித்தலும், தொழிநுட்ப மதிப்பீட்டு குழுக்களை நியமித்தலும்.
- களஞ்சிய முகாமைத்துவ பணிகளை மேற்கொள்ளல்.
- சொத்து முகாமைத்துவ பணிகளை மேற்கொள்ளல்.
- நிதிசார் பிரிவின் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளல்.
நிதி அறிக்கையிடல் பிரிவு
அமைச்சு தொடர்பான வருடாந்த வரவு செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் அனைத்து நிதிசார் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளையும் முன்னெடுத்தல்.
நிதி அறிக்கையிடல் பிரிவானது இப்பிரிவிற்குரிய கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் பிரிவுத் தலைவர் ஒருவரையும், விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அபிவிருத்தி அலுவலர்களையும், ஒன்பது அரசாங்க முகாமைத்துவ உதவியளார்களையும், அலுவலக உதவியாளர் ஒருவரையும் கொண்டுள்ளது.
பிரதான பணிகள்
- அமைச்சின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரித்தல்.
- ஒதுக்கீட்டுக் கணக்கு மற்றும் திரண்ட அடிப்படையிலான கணக்குகளைத் தயாரித்தல்.
- அமைச்சின் வருடாந்த செயலாற்ற அறிக்கை மற்றும் வருடாந்த கணக்கு அறிக்கை என்பனவற்றைத் தயாரித்தல்.
- வருமான தலைப்பு 20.02.01.01 அரசாங்க கட்டிட வாடகை வருமானம் தொடர்பாக வருடாந்த கணக்குகளைத் தயாரித்து கணக்காய்வாளர் அதிபதிக்கு சமர்ப்பித்தல், அரையாண்டு நிலுவை வருமான அறிக்கைகளை சமர்ப்பித்தல், விடுதி வாடகை சேகரிப்பினை கண்காணித்தல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு விடையளித்தல் மற்றும் அரசாங்க கணக்கு குழுவின் விசாரணை சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்தல்.
- ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் நிதிசார் பணிகளை கண்காணித்தல்.
- நட்டம் மற்றும் பதிவழித்தல் பதிவேடு தொடர்பான பணிகள்.
வருமான தலைப்பு இல. 20.02.01.01 அரசாங்க கட்டிட வாடகை வருமான கணக்கீட்டு அலுவலராக 2015.01.01 ஆந் திகதியில் இருந்து அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கடமையாற்றுவதனால் அரசாங்க கட்டிட வாடகை வருமானம் சம்பந்தமாக பின்வரும் பணிகள் இவ் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- வருமான மதிப்பீடு தயாரித்தல்.
- வருமானம் திரட்டல்.
- வருமான கணக்கு தயாரித்தல்.
- வருமான பதிவழித்தல் / மீள் கொடுப்பனவுகளுக்கான சிபார்சினை மேற்கொள்ளல்.
- நிலுவை வருமான சேகரிப்பு சம்பந்தமான கண்காணிப்புப் பணிகள்.
- அரசாங்க கட்டிடங்கள் தொடர்பாக தகவல் திரட்டல்.
மனிதவள கொடுப்பனவுப் பிரிவு
அமைச்சின் அனைத்து அலுவலர்களதும் சம்பளம் தயாரித்தல், மற்றும் பிற கொடுப்பனவுகளை தயாரிக்கும் பணிகள் என்பன இப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
மனித வள கொடுப்பனவுப் பிரிவானது இப்பிரிவிற்குரிய கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் பிரிவுத் தலைவர் ஒருவரையும், விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அபிவிருத்தி அலுவலர்களையும், ஐந்து அரசாங்க முகாமைத்துவ உதவியளார்களையும், அலுவலக உதவியாளர் ஒருவரையும் கொண்டுள்ளது.
பிரதான பணிகள்
- அமைச்சின் பணியாட்தொகுதியினருக்கு உரிய சம்பளம் தயாரித்தல்.
- பணியாட்தொகுதியினருக்கு உரிய மேலதிகநேர மற்றும் பிற கொடுப்பனவுகளை கணக்கிட்டு அதனை பரிசீலித்ததன் பின்னர் கொடுப்பனவுக்குச் சமர்ப்பித்தல்.
- அராசங்க அலுவலர்களின் முற்பண பீ கணக்கிற்கு ஏற்ப அலுவலர்களுக்கு கடன் வழங்கல்.
- நி.பி. 506 D இற்கமைய அரசாங்க அலுவலர்களின் முற்பணம் பீ கணக்கிற்கு தயாரித்தல்.
- ஓய்வூதியர்களின் மாதாந்த ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை கணக்கிடப்பட்டு உரிய பிரதேச செயலகத்திற்கு அனுப்பி வைத்தல்.
- அரசாங்க சேவை சேமலாப நிதியத்திற்கு உரிய அறவீடுகள் தொடர்பாக ஓய்வூதிய திணைக்களத்துக்கு தகல்களை சமர்ப்பித்தல்.
கொடுப்பனவுப் பிரிவு
அமைச்சின் அனைத்து மீண்டுவரும் மற்றும் மூலதன செலவினங்கள் சம்பந்தமான கொடுப்பனவுப் பணிகள், வருமானம் வைப்பிலிடல் மற்றும் வருமானம், செலவுகள் சம்பந்தமான மாதாந்த அறிக்கை பொதுத் திறைசேரிக்குச் சமர்ப்பித்தல் என்பன இப் பிரிவின் பிரதான பணிகளாகும். அத்துடன் இதற்கு உரியதான அமைச்சின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கினை நடைறைப்படுத்தல். செலவு பதிவேடு, திறைசேரி கட்டுநிதிக் கணக்கு, வைப்புக் கணக்கு என்பனவற்றின் பேணல் நடவடிக்கைகளும் இப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
கொடுப்பனவுப் பிரிவானது இப்பிரிவிற்குரிய கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் பிரிவுத் தலைவர் ஒருவரையும், விடயத்திற்குப் பொறுப்பான மூன்று அபிவிருத்தி அலுவலர்களையும், ஏழு அரசாங்க முகாமைத்துவ உதவியளார்களையும், அலுவலக உதவியாளர் ஒருவரையும் கொண்டுள்ளது.
பிரதான பணிகள்
- அமைச்சின் மூலதன மற்றும் மீண்டுவரும் செலவுகள் சம்பந்தமான அனைத்துவித கொடுப்பனவுப் பணிகள்.
- சிகாஸ் (CIGAS) கணினி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் மாதாந்த கணக்குப் பொழிப்பினைச் சமர்ப்பித்தல்.
- காசேட்டினைப் பேணல்.
- வாக்குப்பண பதிவேட்டினைப் பேணல்.
- பெறுவனவு மற்றும் கொடுப்பனவு பணிகள் தொடர்பாக சிறாப்பர் பிரிவைப் பேணல்.
- பொது வைப்புக் கணக்கினைப் பேணல்.
- வங்கி கணக்கிணக்க அறிக்கைகள் மற்றும் மாதாந்த கணக்கிணக்க அறிக்கைகளைத் தயாரித்தல்.
தொடர்பு விபரங்கள்
![]() தலைமை நிதி அதிகாரி
|
||||||||||
![]() பிரதான கணக்காளர் (அரச நிர்வாகம்)
|
![]() கணக்காளர் தரம் I (நிதி அறிக்கையிடல்)
|
||||||||||||||||||
![]() கணக்காளர் (கொடுப்பனவு மற்றும் மனிதவள கொடுப்பனவுகள்)
|
![]() கணக்காளர் (தேசிய மொழிகள் கொடுப்பனவுக்)
|
||||||||||||||||||
![]() நிர்வாக அலுவலர்
|
||||||||||
கிளை | கிளைத் தலைவர் | நீடிப்பு | |
1. | கொடுப்பனவுக் அலகு | செல்வி எ.எ.எஸ்.கே. விமலரத்னே | 405 , 407 |
2. | பெறுகைக் அலகு | செல்வி டபிள்யு.சி.ஆர். குமாரி | 409 |
3. | நிதி அறிக்கையிடல் அலகு | திருமதி எஸ்.எ.ரி.ஆர். சேனநாயகே | 411 |
4. | தேசிய மொழிகள் கொடுப்பனவுக் அலகு | திருமதி எம்.எச்.எல். ஜீவணி | 413 |
5. | தலைமை முகாமைத்துவ சேவை அலுவலகர் அலகு | 414 |