கௌரவ சனாதிபதி அவர்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சரினால் இணைந்து சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ...
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா இல்லங்கள் மற்றும் விசும்பாயங்களும், வெவ்வேறு பிரதேசங்களில் காணப்படும் சனாதிபதி மாளிகைகளையும் பொருளாதார ரீதியாக விளைத்திறனாக பயன்படுத்திக் கொள்வதற்கு பரிந்துரைகளை கொண்டு அதற்காக குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் செய்யப்பட்ட இணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர். கலாநிதி. ஏ.எச்.எம்.எச் அபயரத்ன அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும் பேராசிரியர். சந்தன அபேரத்ன அவர்கள் குறிப்பிட்டதாவது, வீடுகள் மற்றும் வளாகங்கள், நியமிக்கவிருக்கும் குழுவின் அவதானிப்புக்களின் பின்பு, கொண்டு வரப்படும் பரிந்துரைகளின்படி பொருளாதார ரீதியாக விளைதிறனாக பயன்படுத்தப்படவுள்ளது.
கௌரவ சனாதிபதி மற்றும் பொது நிருவாக அமைச்சரினால் இவ் இணைந்த பரிந்துரையை கொண்டு வருவதற்கு காரணமாக அமைந்த விடயம் என்னவெனில், உரிய வீடுகள் மற்றும் வளாகங்கள் குறை பயன்பாட்டு நிலைமையில் காணப்படுகின்றமையாகும்.
பொது நிருவாக அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும், தற்போது வரையிலும் பாரிய நிதி செலவிடப்பட்டிருந்தாலும் தற்போது குறை பயன்பாட்டு நிலையில் உள்ள அரசாங்க பங்களாக்களின் எண்ணிக்கை 50 ஆகும். அவை கொழும்பு 07 மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களில் அமைந்துள்ளன. இதற்கு முன்னால் இவ் வளாகங்கள் முன்னால் சனாதிபதிகள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் வெவ்வேறுபட்ட அரசாங்க நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படுவது நடைபெற்றுள்ளது.
அத்தோடு, சனாதிபதி காரியாலயத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் காணப்படும் கொழும்பு மற்றும் கண்டியைத் தவிர வேறு பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட்ட சனாதிபதி பங்களாக்களும் குறை பயன்பாட்டு நிலையிலேயே காணப்படுகின்றன. அவ் சனாதிபதி பங்களாக்கள் நுவரேலியா, மஹியங்கணை, கதிர்காமம், யாழ்ப்பாணம், அம்பிலிபிட்டிய, மற்றும் பென்தோட்ட பிரதேசங்களில் அமைந்துள்ளன.
இதற்கு மேலதிகமாக கொழும்பு 02 இல் அமைந்துள்ள விசும்பாவும் குறை பயன்பாட்டு நிலையில் நிலவும் வளங்களைச் சேரும். விசும்பாய, காணப்படுவது நகர அதிகாரசபையின் நிர்வாகத்திற்கு கீழாகும். அத்தோடு நுவரேலியாவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் குறை பயன்பாட்டு நிலையில் உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஊடகப் பிரிவு