நிதி அறிக்கையிடல் பிரிவு
அமைச்சு தொடர்பான வருடாந்த வரவு செலவு மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் அனைத்து நிதிசார் அறிக்கைகளை தயாரிக்கும் பணிகளையும் முன்னெடுத்தல்.
நிதி அறிக்கையிடல் பிரிவானது இப்பிரிவிற்குரிய கணக்காளரின் கண்காணிப்பின் கீழ் பிரிவுத் தலைவர் ஒருவரையும், விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அபிவிருத்தி அலுவலர்களையும், ஒன்பது அரசாங்க முகாமைத்துவ உதவியளார்களையும், அலுவலக உதவியாளர் ஒருவரையும் கொண்டுள்ளது.
பிரதான பணிகள்
- அமைச்சின் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரித்தல்.
- ஒதுக்கீட்டுக் கணக்கு மற்றும் திரண்ட அடிப்படையிலான கணக்குகளைத் தயாரித்தல்.
- அமைச்சின் வருடாந்த செயலாற்ற அறிக்கை மற்றும் வருடாந்த கணக்கு அறிக்கை என்பனவற்றைத் தயாரித்தல்.
- வருமான தலைப்பு 20.02.01.01 அரசாங்க கட்டிட வாடகை வருமானம் தொடர்பாக வருடாந்த கணக்குகளைத் தயாரித்து கணக்காய்வாளர் அதிபதிக்கு சமர்ப்பித்தல், அரையாண்டு நிலுவை வருமான அறிக்கைகளை சமர்ப்பித்தல், விடுதி வாடகை சேகரிப்பினை கண்காணித்தல்.
- கணக்காய்வு விசாரணைகளுக்கு விடையளித்தல் மற்றும் அரசாங்க கணக்கு குழுவின் விசாரணை சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்தல்.
- ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் நிதிசார் பணிகளை கண்காணித்தல்.
- நட்டம் மற்றும் பதிவழித்தல் பதிவேடு தொடர்பான பணிகள்.
வருமான தலைப்பு இல. 20.02.01.01 அரசாங்க கட்டிட வாடகை வருமான கணக்கீட்டு அலுவலராக 2015.01.01 ஆந் திகதியில் இருந்து அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கடமையாற்றுவதனால் அரசாங்க கட்டிட வாடகை வருமானம் சம்பந்தமாக பின்வரும் பணிகள் இவ் அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
- வருமான மதிப்பீடு தயாரித்தல்.
- வருமானம் திரட்டல்.
- வருமான கணக்கு தயாரித்தல்.
- வருமான பதிவழித்தல் / மீள் கொடுப்பனவுகளுக்கான சிபார்சினை மேற்கொள்ளல்.
- நிலுவை வருமான சேகரிப்பு சம்பந்தமான கண்காணிப்புப் பணிகள்.
- அரசாங்க கட்டிடங்கள் தொடர்பாக தகவல் திரட்டல்.