2022 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 ஆம் திகதி முதல் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எனப் பெயரிடப்பட்ட இந்த அமைச்சு ஆரம்பம் முதல் இன்று வரையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களினதும் அரசாங்க ஊழியர்களினதும் மேம்பாட்டுக்காக உன்னத சேவையினை வழங்குவதற்காக மிகவும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட்டு வருகின்றது. இந்த அமைச்சின் வரலாறு 8 தசாப்தங்களுக்கும் மேலாக நீண்டு செல்கின்றது. நிதி அமைச்சின் கீழான ஒரு திணைக்களமாக 1931 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட இந்த அமைச்சு 1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் பின்னர் தெரிவுசெய்யப்படும் அரசாங்கங்களின் கீழ் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்து தற்போது பொது நிருவாகத்திற்கான உன்னத பணியொன்றை நிறைவேற்றி வருகின்றது.
2022 ஆம் ஆண்டு யூன் மாதம் 22 ஆம் திகதி பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு என்று பெயரிடப்பட்ட இந்த அமைச்சின் கீழ் இரண்டு இராஜாங்க அமைச்சுக்கள் உள்ளன. அவை உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சு என்பனவாகும்.
அரச சேவையின் "தாய் வீடு" ஆக விளங்கும் இந்த அமைச்சு அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் தேவையான வழிகாட்டல்களையும் அரசாங்க சேவைக்குத் தேவையான கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்கி அரச கொள்கையின் அடிப்படையில் சிறந்த அரசாங்க சேவையொன்றை கட்டியெழுப்புவதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
பொது மக்களுக்கு திருப்திகரமான அரசாங்க சேவையொன்றை உறுதிப்படுத்துவதற்காக நீதி, சமத்துவம், வினைத்திறன் என்பவற்றில் கவனம் செலுத்தி நிர்வாக ஏற்பாடுகளையும் ஒழுங்குவிதிகளையும் உருவாக்குவது இந்த அமைச்சின் அடிப்படைப் பொறுப்பாகும். அதனடிப்படையில், தாபனவிதிக் கோவை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொது நிருவாகச் சுற்றறிக்கைகளை உருவாக்குதல், தேவையான திருத்தங்களைச் செய்தல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அவதானிப்புக்களை வழங்குதல் என்பனவும் இந்த அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றன. பொது நிருவாகச் செயல்பாடுகள் தொடர்பில் தேசிய மட்டத்திலான கொள்கைகளை உருவாக்குதல், பொருள்கோடல் செய்தல், அவற்றுடன் தொடர்புடைய வழிகாட்டல்களை வழங்குதல் என்பன இந்த அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற முக்கியமான செயல்பாடுகளாகும். அதன் மூலம் மிகவும் பயனுறுதிவாய்ந்த சேவையினை வழங்கக்கூடிய வகையில் ஒட்டுமொத்த அரசாங்க சேவையினதும் செயற்பாட்டை கட்டியெழுப்பி நிர்வகித்து வருகின்றது.
அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்
- ஓய்வூதியத் திணைக்களம்
- அரச சேவை பரஸ்பர சேமலாப நிதியச் சங்கம்
- இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்
- தொலைக் கல்வி நிலையம்
- அரசகரும மொழிகள் திணைக்களம்
- அரசகரும மொழி ஆணைக்குழு
- மனித வள அபிவிருத்திக்கான இலங்கை தேசிய சபை
- மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய நிறுவனம்
தொலைநோக்கு
“தேசத்திற்கான சிறந்ததோர் அரச சேவை”
பணிநோக்கு
“மனித வளத்தை உரிய வகையில் நிர்வகிப்பதனூடாகவும், முகாமைத்துவம், மறுசீரமைப்பு என்பவற்றினூடாகவும் சிறந்ததோர் அரசாங்க சேவையை உறுதிப்படுத்தல்”
நோக்கம்
- அரச சேவையின் மனித வள முகாமைத்துவக் கொள்கைக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு செய்தல், ஊதியம் மற்றும் ஏனைய சேவை நிபந்தனைகளுடன் தொடர்புடைய பயனுள்ள அரச கொள்கைகளைத் தயாரித்தல்.
- பொது மக்களின் தேவைகளுக்காக மறுமொழி வழங்கும் போது தற்போது அரசாங்க சேவையில் கடமையாற்றும் அலுவலர்களின் அபிலாசைகளுக்கு புதிய பாதையினை நோக்கி வழிநடாத்துகின்றது.
- அரசாங்க சேவையின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தினை மேம்படுத்துவதற்காக புதிய முகாமைத்துவ கட்டமைப்பொன்றினை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.
- பிரதான அமைப்பொன்றினை நிறுவி பரிமாறிக் கொள்ளல் ( முடிவினை இலக்காகக் கொண்ட மனப்பாங்கு, பொறுப்புக்கூறல், வளங்களை சிறந்த முறையில் கையாளுதல், சார்புத் தன்மையற்ற, தூர நோக்கு போன்றன)
- அரச துறையில் வேண்டி நிற்கும் பயிற்சித் தேவைகளை இனங்காணல் மற்றும் பயிற்சி திட்டங்களுக்கு வசதிகளை வழங்குதல்.
- ஓய்வுதியத்துக்கு உரியதான சிக்கல்களை தீர்த்து வைப்பதற்காக ஓய்வூதிய நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.
- அரசின் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பூர்த்தி செய்யும் இயலுமையுடன் கூடிய அரசாங்கப் பிரிவின் நிறுவாக விருத்திக்கான கட்டமைப்பினை தயாரித்துக் கொள்ளல்.
- சேவை வழங்களின் உற்பத்தித்திறன் மற்றும் தரத்தினை கட்டியெழுப்புவதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்தினை கையாள்வதை மேம்படுத்தல்..
- அரச சேவையின் பணியாட் தொகுதியினரின் செயற்திறன்களை விருத்தி செய்தல்.
- மாற்றமுறும் நிலைமைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வேண்டி முறைமைகளை எளிதாக்குதல் மற்றும் செயலாக்கத்தினை மீண்டும் தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை மேம்படுத்தல், விருத்தி செய்தல் மற்றும் செயலுருப்படுத்துதல்.
விடயப் பரப்பெல்லை
சகல அரச சேவையிலும் முழுமையான இயலளவு விருத்திகளை மேற்கொண்டு நவீன தகவல் தொழில்நுட்ப மூலோபாயங்கள் ஊடாக செயற்பாடுகளின் இரட்டிப்புத் தன்மையைத் தடுத்து சேவைப் பெறுநர்களுக்கு அதிசிறந்த சேவைகளை வழங்குதல் மற்றும் மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் நிலவுகின்ற வேறுபாடுகளைக் குறைத்து மக்களுக்கு உயர் சேவையை உறுதிப்படுத்தல்.