தொலைநோக்கு
"திறன்மிக்க மனித வளங்களை உருவாக்குதல்"
பணிநோக்கு
"இவ் அமைச்சினால் வழங்கப்படும் சேவைகளை உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் மிக்கதாக மேம்படுத்தும் வகையில் திறமைகளுடன் கூடிய மனித வளத்தினை உருவாக்குதல்"
குறிக்கோள்கள்
- பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் பணியாற்றும் அலுவலர்களின் பயிற்சித் தேவைப்பாடுகளை இனங்காணல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் அதற்குரிய வசதி வாய்ப்புக்களை வழங்குதல்.
- வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயிற்சிக்குரிய வாய்ப்புக்களை நியாயமாக பகிர்ந்து வழங்குதல்.
- அரசாங்க நிதியினை உற்பத்தித்திறன் வாய்ந்ததாகப் பயன்படுத்தல்.
- சேவை விநியோகத்தின் போது வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காகப் பணித்தொகுதியினரை ஊக்கப்படுத்தல்.
பணிகள்
- அமைச்சின் கீழ் கடமையாற்றும் சகல பணியாளர்களினதும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பயிற்சித் தேவைப்பாடுகளை இனங்காணல்.
- இவ் அமைச்சுக்கு உரித்தான ஏனைய திணைக்களங்கள் / நிறுவனங்களில் கடமையாற்றும் சகல அலுவலர்களினதும் கடமை நிமித்தம் எடுக்கப்படும் வெளிநாட்டு விடுமுறைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
- வெளிநாட்டு வளங்களை திணைக்களத்தின் ஊடாகப் பெற்று நீண்ட கால வெளிநாட்டுப் பயிற்சிகள் தொடர்பாக அலுவலர்களை விழிப்பூட்டல்.
- குறுகிய கால வெளிநாட்டுப் பயிற்சிக்கான தகைமையுடைய அலுவலர்களின் பெயர்ப் பட்டியல் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
- குறுகிய கால வெளிநாட்டுப் பயிற்சிக்கு தகைமையுடைய அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அவசியப்படும் தகவல்கள் / அறிக்கைகளை வழங்குவதற்கு அவசியப்படும் தரவுத் தளத்தினைப் பேணல் மற்றும் அதற்கு அவசியப்படும் தகவல்களைச் சேகரித்தல்.
- அலுவலர்கள் பங்குபற்றியுள்ள வெளிநாட்டுப் பயிற்சிகள் தொடர்பான தகவல்கள்.
- அலுவலர்களின் தகைமைகள் தொடர்பான தகவல்கள் (கல்வி/ ஆங்கில மொழித் தேர்ச்சி) போன்ற விடயங்கள்
- நன்கொடை முகவர்களுடன் இணைந்து அவசியப்படும் அறிக்கைகள் / முன்மொழிவுகளைத் தயாரித்து வெளிநாட்டுப் பயிற்சிக்குரிய வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளல்.
- நேரடியாகப் பெறப்பட்ட வெளிநாட்டுப் பயிற்சி வாய்ப்புக்கள் சம்பந்தமாக செயற்படுதல்.
- வெளிநாட்டுப் பயிற்சிகளின் மூலம் அலுவலர்கள் பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் அனுபவங்களை அவர்கள் தங்களது நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக ஈடுபடுத்திய விதம் பற்றி தொடர்நடவடிக்கை மேற்கொள்ளல்.
- உள்நாட்டு நீண்ட கால பயிற்சி வாய்ப்புக்கள் ( பட்டப்பின் பட்டம் / பட்டப்பின் பட்ட டிப்ளோமா) என்பன தொடர்பாக அலுவலர்களை விழிப்பூட்டுதல் மற்றும் அவற்றிற்கு அனுப்புதல்.
- உள்நாட்டுப் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிக்குரிய வாய்ப்புக்களைப் பெறுதல்.
- பாடநெறிக் கட்டணங்களைச் செலுத்துவது தொடர்பான நிதிக் கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கு அவசியப்படும் தகவல்களைச் சேகரித்தல் மற்றும் தரவுத் தளத்தினை பேணல்.
- இவ் அமைச்சுக்கு உரித்தான அலுவலர்களின் உள்நாட்டுப் பயிற்சிப் பாடநெறிக் கட்டணங்களைச் செலுத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்.
- இவ் அமைச்சின் கீழ் கடமையாற்றும் சகல அலுவலர்களினதும் மொழிப் பயிற்சித் தேவைகளை இனங்கண்டு, அவற்றினை பூர்த்தி செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- நிறுவனத்திற்கு வெளியே அமைந்த பயிற்சிகளை ஒழுங்கு செய்தல்.
- அரசாங்க சேவைப் பயிற்சி நிறுவனத்தை மீள நிறுவுதல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- முகாமைத்துவ நிலையற்ற மட்டத்துடைய அரச ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை மாவட்ட ரீதியில் நடாத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.
- அரசாங்க சேவையில் முகாமைத்துவ நிலையற்ற மட்டத்துடைய அலுவலர்களுக்காக தகுதியுடைய பயிற்சிப் பாடநெறிகளைத் தயாரித்தல் மற்றும் பயிற்சிக் கொள்கைகளை அறிமுகஞ்செய்தல்.
- நடாத்தப்படும் பயிற்சிச் செயலமர்வுகள் தொடர்பான முழுமையாக மதிப்பீடு செய்தல் மற்றும் அறிக்கைகளைப் பேணல்.
- பயிற்சிப் பாடநெறிகளுக்காக மாவட்ட ரீதியில் மதிப்பீடுகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை வழங்குதல்.
- வளவாளர்களுக்கான பயிற்சித் தேவைகளை இனங்கண்டு எஞ்சிய பாடநெறிகளுக்காக பங்குபெறச் செய்யும் நடவடிக்கையினை ஒருங்கிணைத்தல்.
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஆர்.பி.எம்.எஸ். ராஜபக்செ சிரேட்ட உதவிச் செயலாளர்
|
திருமதி. ஆர்.எம்.டீ.கே. ரணதுங்க உதவிச் செயலாளர்
|
மனித வள அபிவிருத்திப் பிரிவு
|
|||||||