தொலைநோக்கு
"நாட்டுக்குச் சிறந்த சேவையை அளிப்பதற்குத் திருப்திகரமான பொறியியல் சேவையை அளித்தல்"
பணிநோக்கு
"இலங்கை பொறியியல் சேவை அறிக்கையின் நிபந்தனைகளின்படி அரச சேவையின் பொறியியலாளர்களை முகாமைப்படுத்துதல், அதன்மூலம் நாட்டின் பொறியியல் சேவையில் எதிர்பார்க்கப்பட்ட திருப்திகரமான சேவை பெறப்படுகின்றது என்னும் விடயத்தில் கவனம் செலுத்துதல்"
பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள்
அரச சேவையில் பொறியியலாளர்கள் சம்பந்தப்பட்ட பின்வரும் விடயங்கள் பொதுவாகப் பணிப்பாளர் சபையினால் கையாளப்படுகின்றன.
- நியமனமும் பதவியுயர்வும்
- இராஜிநாமா
- நியமனத்தை நிரந்தரப்படுத்தல்
- நியதிச்சட்ட சபைகள், கூட்டுத்தாபனங்கள், வெளிநாட்டு நிதியுதவி அளிக்கப்படும் கருத்திட்டங்கள் போன்றவற்றுக்கு விடுவித்தல்
- அமைச்சுகளுக்கிடையில் இடமாற்றம்
- ஓய்வுபெறச் செய்தல்
- தகுதிகாண் காலத்தை நீடித்தல்
- ஒழுக்காற்று விடயங்கள்
- புலமைப்பரீட்சைக்கு, பயிற்சிக்கு, வேலைக்கு அல்லது வெளிநாட்டில் படிப்பதற்கு விடுவித்தல்
- தொழிற்சங்கங்களினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படல்
பின்னணி
- வெவ்வேறு திணைக்களங்கள் பின்பற்றுகின்ற நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாகும். ஆகவே, அரசசேவை பொறியியலாளர்கள், பொறியலாளர்களுக்கெனத் தனியான ஒரு சேவை உருவாக்கப்பட வேண்டுமெனக் கருத்துத் தெரிவித்தனர். அதன்மூலம் பொறியியலாளர்கள் எந்தத் திணைக்களத்தில் சேவையாற்றினாலும் அரச சேவையிலுள்ள அனைத்துப் பொறியியலாளர்களுக்கும் சமமான ஒரு நிலைப்பாட்டை பேணக்கூடியதாக இருந்தது.
- இலங்கைப் பொறியியலாளர் சேவை 1971.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு திணைக்களத்தின் தேவைக்கு ஏற்பக் குறித்த திணைக்களங்களினால் அரச சேவைக்குத் தேவைப்படும் பொறியியலாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டனர்.
வெளியீடு – சேவை அறிக்கை
- சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்தனர். பின்னர் அரசாங்கம், ஒரு சபையுடன் அதன் பணிகளை முகாமைப்படுத்தும் நோக்கில் இலங்கைப் பொறியியல் சேவையை உருவாக்கும் அறிக்கையை அங்கீகரித்தது. சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கு தரம் 1 சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் நிறைவேற்றுப் பணிப்பாளராகச் செயற்படுவார்.
- இலங்கைப் பொறியியல் சேவை அறிக்கை 1972 மார்ச் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 15001/8 ஆம் இலக்க இலங்கை அரசாங்க வர்த்தமானியில் (அதிவிசேடம்) (அரச சேவைகள் ஆணைக்குழு, செயலாளரால்) வெளியிடப்பட்டது. மேலும், 1971 ஒக்டோபர் 01ஆம் திகதி இலங்கைப் பொறியியல் சேவை ஸ்தாபிக்கப்பட்டது.
சேவையின் முகாமைத்துவம்
- இ.பொ.சே. அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட நிபந்தனைகளின் பிரகாரம் சபை மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் ஒருவர் பொது நிருவாக அமைச்சின் செயலாளர், மற்றைய இருவரும் இ.பொ.சேவையைச் சேராத சிரேஷ்ட பட்டயப் பொறியியலாளர்கள் ஆவர். இவர்கள் பொது நிருவாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்டனர். இச்சபைக்குப் பொறியியல் சேவை சபை எனப் பெயரிடப்பட்டது.
- இலங்கை பொறியியல் சேவை பொது நிருவாக அமைச்சின் விடயப் பரப்பின் கீழ் வருகின்ற நாடளாவிய சேவைகளுடன் சமாந்தரமாகச் செல்கின்ற சேவையாகும். பொறியியலாளர்களின் நியமனம், ஒழுக்காற்று நடவடிக்கை என்பவற்றிற்கான அதிகாரத்தை அரச சேவைகள் ஆணைக்குழு கொண்டிருக்கிறது
இலங்கைப்பொறியியல் சேவையின் கட்டமைப்பு
இலங்கைப் பொறியியல் சேவை தற்போதுள்ள வகையில் 10 வித்தியாசமான குழுக்களைக் கொண்டிருக்கிறது. அவை பொறியியல் ஒழுக்க விதிகளுக்கமைய வகைப்படுத்தப்பட்டுள்ளன. சிவில் 6, இயந்திரம் 2, மின்சாரம் 2 (இலகு மற்றும் கன மின்னோட்டம்) இவை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- தற்போதுள்ள பொறியியலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1156.
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பு விபரங்கள்
திரு. டபிள்யூ. கே. எஸ். விக்ரமபால (ப.க.) பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2698268 (நீடிப்பு - 158) |
தொலைநகல் |
: |
+94 11 2698268 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
செல்வி. ஆர்.எ.ரி.ஆர். றன்டேனியா உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2694035 (நீடிப்பு - 140) |
தொலைநகல் |
: |
+94 11 2698268 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
கிளைத் தலைவர் திருமதி. எல்.பீ.எஸ். டீ சில்வா
தொலைபேசி |
: |
+94 11 2698268 (நீடிப்பு - 159) |
தொலைநகல் |
: |
+94 11 2698268 |
|
|
|