தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் விளைத்திறன் மிக்க நிதி முகாமைத்துவத்திற்காக சுய அதிகாரமிக்க கணக்காளர் சேவை"
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காக இலங்கை கணக்காளர் சேவையின் நிமித்தம் அமைச்சரவை மற்றும் சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் விதிக்கப்பட்ட சகல கொள்கைகளும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயளாலரின் அனுமதியுடன் இலங்கை கணக்காளர்கள் சேவைப்பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
நோக்கம்
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குதல்.
இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு
இரண்டாம் உலக யுத்தத்தின் போது அரச துறையில் கடமைப் பரப்புக்கள் விரிவடைந்தமை, முற்பணக் கொடுப்பனவுச் செயற்பாடுகள் அதிகரித்தமை, கணக்கீட்டு முறைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டமை என்பவற்றின் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், அரச பொறிமுறையில் நிகழும் மாற்றங்களுக்கு தோல்கொடுத்து கணக்காளர் சேவையும் தற்போதுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்தப் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சேவையின் நிருவாக நிலையம் காலத்துக் காலம் மாற்றமடைந்துள்ளது.
அதற்கிணங்க, நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட கணக்காளர் சேவை 2015.06.18 ஆந் திகதி முதல் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதால் தற்போது இலங்கை கணக்காளர் சேவை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் நிருவகிக்கப்படுகின்றது.
நாடளாவிய சேவையொன்றாகக் கருதப்படும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அந்த உத்தியோகத்தர்களை சுய கட்டுப்பாடுடைய மதிநுட்பமுள்ள மற்றும் தொழில்சார் தேர்ச்சிகள் நிரம்பிய உத்தியோகத்தர்களாக உருவாக்குவது, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காளர் சேவையின் பொறுப்பாகும். அதற்காக எதிர்காலத்தில் பின்வரும் விதத்தில் அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
- கணக்காளர்கள் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதனால் சுய நிர்வாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தேவையான மனப்பாங்கு மாற்றங்களைக் கட்டியெழுப்புதல் (SLIDA போன்ற நிறுவனங்களின் கீழ்).
- ஒழுக்காற்றுப பிரச்சினைகள் குறையும் விதத்தில் கெளரவத்துடன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் மனப்பாங்குகளை உத்தியோகத்தர்களிடத்தில் உருவாக்குதல்.
- இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களிடம் காணப்பட வேண்டிய தேர்ச்சிகளைப் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அவர்களை அனுப்புதல்.
- சமகாலத் தேவைகளை அடையாளம் கண்டு கணக்காளர்களை திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் (Capacity Building) பங்கேற்கச் செய்தல்.
- அபிவிருத்திப் பணிகளின் வெற்றியில் சரியான நிதி எதிர்வுகூறல் முக்கியான இடத்தை வகிப்பதனால் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல், ஆய்வுப் பின்னணியொன்றை உருவாக்குதல், அவற்றின பெறுபேறுகளை பயன்படுத்துதல்.
- கணக்காளர்களை வாண்மைத் தொழிலாளர்களாக உருவாக்குவதற்குத் தேவையான உபாய முறைகளை உருவாக்குதல்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஐ.யு.பீ. குணவர்தன பணிப்பாளர்
|
திருமதி.ஏ.ஏ.கே. பெரேரா பிரதிப் பணிப்பாளர்
|
திருமதி. பீ.பீ.எச். லியனகே உதவிப் பணிப்பாளர்
|
கணக்காளர்கள் சேவை பிரிவு
|
|||||||