விண்ணப்பித்தல்
அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி வெளியிடப்படும்
சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
- வகுப்பு 1:
- இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
- விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதிலுள்ள மாதத்திற்கு முன்னரான மாதத்தின் இறுதித் திகதியில் 21 வயதை அடைந்துள்ளதுடன் மற்றும் 40 வயதை அடையாதவராக இருத்தல் வேண்டும், (அரசாங்க அல்லது மாகாண அரசாங்க சேவையின் நிரந்தர அலுவலர்களுக்கு வயதெல்லைகள் ஏற்புடையதன்று)
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகமொன்றிலிருந்து பட்டம் அல்லது சட்டத்தரணிப் பரீட்சை அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்லூரியொன்றிலிருந்து அல்லது பல்வேறு வகையிலுமான தொழில்நுட்ப நிறுவகமொன்றிலிருந்து வணிகவியல் டிப்ளோமாச் சான்றிதழ் அல்லது இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் முகாமைத்துவம் பற்றிய தேசிய டிப்ளோமா உயர் சான்றிதழ் அல்லது மொரட்டுவை பல்கலைக் கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமாச் சான்றிதழில் சித்தியடைந்திருத்தல்
- ஆகக் குறைந்த கல்வித் தகைமையாக க.பொ.த. (சா.த) அல்லது அதற்குச் சமமான பரீட்சை ஒன்றில் இரண்டாம் மொழிக்கு திறமைச் சித்தி அல்லது இரண்டாம் மொழி தொடர்பாக அங்கீகரிக்கத்தக்க அதற்கு மேற்பட்ட உயர் தகைமையைக் கொண்டுள்ளதுடன், முதலாம் மொழிக்கு திறமைச் சித்தியைப் பெற்றிருத்தல்.