பதவியணியினர்
- 117
ஆட்சேர்ப்பு
இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் வகுப்பு III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதுடன், அவ்வாறு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவது இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்படுகின்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் தகைமைகளை பரீசீலனை செய்வதற்கான நேர்முகப் பரீட்சையில் தகைமை பெறுகின்றவர்கள் மாத்திரமாகும். இலங்கை அரசாங்க நூலகர் சேவையின் வகுப்பு III இல் காணப்படுகின்ற மொத்த வெற்றிடங்களின் எண்ணிக்கையில் 70% திறந்த அடிப்படையிலும், 30% இற்கு மேற்படாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.
விண்ணப்பித்தல்
அரசாங்க வர்த்தமானியில் பரீட்சை அறிவித்தல் வெளியிடப்படுவதன் ஊடாக ஆட்சேர்ப்புக்கான பரீட்சைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய முறை பற்றி வெளியிடப்படும்
சேவைக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
- திறந்த அடிப்படையிலானது:
- இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்
- விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாதவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்
- ஆகக் குறைந்த கல்வித் தகைமைகள் சிங்களம் / தமிழ் / ஆங்கில மொழி, கணிதம் மற்றும் வேறு பாடங்கள் இரண்டுக்கு திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் (இவற்றில் 5 பாடங்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து அல்லது இலங்கை நூல்நிலைய சங்கத்திலிருந்து நூலகவியல் பற்றிய மூன்று வருட டிப்ளோமா பாடநெறியில் சித்தியடைந்திருத்தல்
- மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலானது:
- அரசாங்க சேவையின் நூலக உதவியாளர் / நூலக ஊழியர் சேவையில் நிரந்தரமாக்கப்பட்டிருத்தல் மற்றும் அப்பதவியில் 10 வருட முனைப்பான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருத்தல்
- விண்ணப்பம் கோரும் திகதிக்கு முந்திய 5 வருட காலப்பகுதிக்குள் திருப்திகரமான சேவைக் காலத்தை பூர்த்தி செய்திருப்பதாக உரிய திணைக்களத் தலைவர் உறுதி செய்தல் வேண்டும். (இதற்கான உச்ச வயதெல்லை ஏற்புடையதன்று)
சேவை பிரமாணக் குறிப்புகள்
- வர்த்தமானி இல. 1620/22 – 2009.09.24
[ PDF - 206 KB ] - வர்த்தமானி இல. 1002/13 – 1997.11.19
[ PDF - 25 KB ]
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
- அ.நி. சுற்றறிக்கை இல. 19/2009 – இலங்கை அரசாங்க நூலகர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பை அமுல்படுத்துதல்
- அ.நி. சுற்றறிக்கை இல. 03/2010 – நூலகச் சேவையில் வகுப்பு 11 / வகுப்பு 1 மற்றும் விசேட வகுப்புக்களுக்கு தரமுயர்த்துதல்
- அ.நி. சுற்றறிக்கை இல. 03/2010 (I) – நூலகச் சேவையில் வகுப்பு 11 / வகுப்பு 1 மற்றும் விசேட வகுப்புக்களுக்கு தரமுயர்த்துதல்