பொது வினவல்களுக்கான பதில்கள்
அரசாங்க பொது நிர்வாக அமைச்சு
அரச நிறுவனங்களில் அடிக்கடி ஏற்படும் வினவல்களின் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள்.
அரச நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தாபன விதிக்கோவை அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைகளில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தினைக் கேட்டு அடிக்கடி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இவ்விதத்தில் அடிக்கடி கிடைக்கப்பெறும் 100 பிரச்சினைகள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் பொதுவான தீர்வுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதில்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏதாவது சிக்கலான நிலைகள் ஏற்படுமாயின் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 12/2012 இற்கமைய குறித்த விடயங்களை எனக்கு சமர்ப்பிக்கும் படி மேலும் அறியத்தருகின்றேன்.
விடுமுறை
அரசின் நிரந்தர நியமனமொன்றை கையேற்கும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்துள்ள உத்தியோகத்தரொருவரின் பொருட்டு 03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை ஏற்புடையதாகக் கொண்டு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா?
முடியும். குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து மேற்படி சுற்றறிக்கை ஏற்பாடுகளுக்கமைய சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடியும்.
கடமை வேளையில் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றறிக்கையின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது.
வெளிநாட்டு புலமைப்பரிசிலின் பேரில் மேலதிக கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்லும் உத்தியோகத்தரொருவரின் வாழ்க்கைத் துணை அரச உத்தியோகத்தராக உள்ள சந்தர்ப்பத்தில் அவ்வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகத்தருடன் வாசம் செய்வதற்கு வெளிநாட்டு விடுமுறை பெற்றுக் கொள்ள முடியுமா?
முடியும். 2014.05.19 தினத்தன்று அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2014 இன் படி சம்பளம் இன்றி விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா?
முடியாது
ஒரு குழந்தையை சட்டப்பூர்வமாக தத்தெடுக்கும் அரச பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு, அதற்கான விடுப்பு பெற்றுக்கொள்ள முடியுமா?
2023.06.26 ஆம் திகதிக்கு முன்னர் குழந்தையொன்றைத் தத்தெடுத்த அரச பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அதற்கான விஷேட விடுமுறை வழங்குவதற்கு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். 2023.06.26 ஆம் திகதிக்குப் பின்னர் குழந்தையைத் தத்தெடுக்கும் அரச பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 18 ஆம் பிரிவுக்கு புதிய துணைப்பிரிவுகளை உள்ளடக்கி வெளியிட்டுள்ள 2023.09.06 ஆம் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை 16/2023 இன் ஏற்பாடுகளுக்கிணங்க விடுப்பு வழங்க குறித்த திணைக்களத் தலைவரால் முடியும்.
கட்டாய சேவைக் காலத்துடன் உத்தியோகத்தரொருவருக்கு தாபனக் கோவையின் XII வது அத்தியாயத்தின் 14 அல்லது 16 வது பிரிவுகளின் ஏற்பாடுகளின் படி சம்பளத்துடனான அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்கியுள்ள சந்தர்ப்பத்தில், அவ்விடுமுறைக்குரிய கட்டாய சேவைக் காலத்தை நிறைவு, செய்யும் பொருட்டு உத்தியோகத்தரின் விருப்பத்திற்குரிய ஓய்வு பெறும் வயதை (55 வயது) மிஞ்சி 60 வயது வரையிலான சேவைக் காலத்தினை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
கட்டாய சேவைக் காலம் உத்தியோகத்தர் 60 வயதினை அடையும் முன்னர் நிறைவு செய்யக் கூடிய வகையில் விடுமுறையை வழங்க முடியும். அக் கட்டாய சேவைக் காலத்தை நிறைவு செய்யும் முன்னர் வயது 55 – 60 வரையிலான காலத்தில் உத்தியோகத்தர் ஓய்வு பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்திருப்பின், அவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகுதியாகவுள்ள கட்டாய சேவைக்காலத்தின் பொருட்டு குறித்த தண்டப் பணத்தை அறிவிடல் வேண்டும்.
அரசாங்க உத்தியோகத்தரின் வாழ்க்கைத்துணை அல்லது பிள்ளை சுகவீனமுற்ற சந்தர்ப்பத்தில் மேற்கூறப்பட்டுள்ள விடுமுறைகளுக்கு மேலாக விடுமுறையை பெற முடியுமா?
2022.09.09 தினத்தன்றான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2022 இன் மூலம் திருத்தப்பட்ட தாபனக் கோவையின் XII இன் அத்தியாயம் 21:1 உப பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அரை கொடுப்பனவு விடுமுறை பெற்றுக் கொடுக்கலாம். மேலும், விடுமுறை தேவைப்படுத்தப்பட்டால் 2013.07.02 தினத்தன்றான அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 11/2013 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் ஒரு வருட காலத்திற்கு சம்பளமின்றிய தேசிய மற்றும் வெளிநாட்டு விடுமுறையும் பெறலாம்.
அரசாங்க அலுவலரொருவர் (பெண்) கல்வி கற்பதற்காக அல்லது வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பத்தின் போது நிகழும் குழந்தைப் பிரசவத்திற்காக வெளிநாட்டு பிரசவ விடுமுறையினை அனுமதித்துக் கொள்ள முடியுமா?
முடியாது.
அரசாங்க அலுவலரொருவர் தனது பதவிக்கு உரித்தான சேவைப் பிரமாணத்தின் / ஆட்சேர்ப்பு நடைமுறையின்/ பதவியுயர்த்தல் நடைமுறையின் தகைமைகளைப் பூரணப்படுத்துவதற்காக உயர் கல்விப் பாடநெறியொன்றினை தொடர்வதற்கான விடுமுறையின்றி பயிலும் சந்தர்ப்பத்தின் போது பரீட்சைக்காக ஆயத்தமாகும் போது பரீட்சைக்காக கற்பதற்குரிய விடுமுறையினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
2014.10.07 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்ற்றிக்கை 23/2014 இன் ஏற்பாடுகளுக்கு ஏற்ப பரீட்சைக்காக கற்பதற்குரிய விடுமுறையினைப் பெற்றுக்கொள்ள் முடியும்.
தாபன விதிக்கோவையின் XII அத்தியாயத்தின் 23:3 ஆம் உப பிரிவின் கீழ் கொள்ளப்படும் பதவி நிலை அலுவலரொருவருக்கு வெளிநாட்டு விடுமுறையினை அனுமதிக்கும் போது நிலவும் வரையறைகள் யாவை ?
விடுமுறை பெற்றுக்கொள்ளும் வருடத்திலும் அதற்கு முன்னைய இரண்டு வருடங்களும் என்ற மூன்று வருடங்களுக்குரிய ஒட்டுமொத்த விடுமுறைகள் மற்றும் அலுவலருக்கு உரிய முழுச் சம்பளம் அல்லது மாற்றமுற்ற முழுச் சம்பள விடுமுறை 06 மாதங்கள் வரை உச்ச அளவு பெற்றுக்கொள்ள முடியும். 06 மாதங்கள் கடந்ததன் பின்னர் விடுமுறையினை அனுமதிக்க வேண்டியது அரசாங்க நிர்வாக விடயப் பொறுப்பதாரியான செயலாளரின் மூலமாகும். இவ்வாறு நீடிக்கப்படும் விடுமுறைக் காலம் முழுச் சம்பளத்துடன் அல்லது சம்பளமற்ற விடுமுறையாக இருத்தல் வேண்டும்.
வைத்தியச் சான்றிதழை அடிப்பைடையாகக் கொண்டு, சில நாட்களுக்கு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ் விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா?
வைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். அவ் அத்தியாயத்தின் 8.3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள் நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்பட மாட்டாது. அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது.
உதரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவலக கடமையில் ஈடுபடவேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்தர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகவீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்கதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும்.
அரசாங்க அலுவலர் (பெண்) ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலயம் முந்தி புறப்படுவதற்கும் தாபனவிதிக் கோவையின் ஆம் XII அத்தியாயத்தின் 18:7 உப பிரிவின் ஏற்பாடுகளின் மூலம் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயமாக பெற்றுக்கொள்ள முடியுமா?
விடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து, திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை.
பிரசவ லீவு பெற்றுள்ள பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவு காலத்தினுள் இடமாற்றம் கிடைக்கப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தும் போது பிரசவ லீவு (சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமற்ற) காலத்தின் மீதமுள்ள நாட்களைப் பெற புதிய சேவை நிலையத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
இடமாற்றக் கட்டளைக்கு ஏற்ப புதிய சேவை நிலையத்தில் கடமையைப் பொறுப்பேற்றதன் பின்னர் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் படி அப்பெண் உத்தியோகத்தருக்கு தொடர்ந்தும், சம்பளத்துடன், அரைச் சம்பளம் அல்லது சம்பளமின்றிய பிரசவ லீவுகள் எஞ்சியிருப்பின் புதிய சேவை நிலையத்தில் அம்மீதமுள்ள லீவு நாட்களைப் பெறுவதற்கு அனுமதிக்க முடியும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் போது ஒரே தடவையில் 05வருடங்களுக்கும் விண்ணப்பிக்க வேண்டுமா?
தேவையில்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் போது, பெற்றுக்கொள்ளும் சம்பளமற்ற லீவினை குறுகிய காலத்திற்கு பெற்றுக்கொள்ள முடியுமா?
பெற்றுக்கொள்ள முடியும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பெற்றுக்கொண்ட லீவு காலத்தினை பூர்த்திசெய்யாது, அதற்கு முன்னரே சேவைக்கு சமூகமளிக்க முடியுமா?
பெற்றுக்கொண்ட லீவினை முடித்துக்கொள்வதாக நிறுவனத் தலைவருக்கு முறையாகத் தெரிவித்த பின்னர், சேவைக்குத் திரும்புவதற்கு எந்தத் தடையும் இல்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவருக்கு பதிலாக பதிற் கடமை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா?
அமைச்சு குழுவின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில், இந்த சம்பளமற்ற லீவுக்கு விண்ணப்பிக்கும் உத்தியோகத்தர்களுக்குப் பதிலாக, பதிற்கடமை உத்தியோகத்தர்களை நியமனம் செய்வது அவசியமில்லை, அவ்வாறு செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில், நிறுவனத்தில் அடையாளம் காணப்பட்ட ஒரு உள்ளக பொறிமுறையின் மூலம் குறித்த பணிகளை முறையாகவும் வினைத்திறனாகவும் பேணுவதற்கு நிறுவனங்களின் தலைவர்கள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவர் லீவு அங்கீகரிக்கப்படும் தினத்திற்கு முந்திய தினத்திற்கான அடிப்படை சம்பளத்திற்குரிய விதவைகள் /தபுதாரர், அநாதைகள் பங்களிப்புத் தொகையை எவ்வாறு அனுப்பீடு செய்ய வேண்டும்?
விதவைகள் /தபுதாரர், அநாதைகள் பங்களிப்புத் தொகையை அனுப்பீடு செய்யவேண்டிய முறை குறித்து ஓய்வூதிய திணைக்களத்தினால் ஓய்வூதிய சுற்றறிக்கை 06/2022 மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) மற்றும் 14/2022(II) பிரகாரம் வெளிநாட்டு/உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர் ஒருவருக்கு அந்த லீவுக்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(I) இன் 04 (அ) பிரிவு மற்றும் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் 5.1 பிரிவின் படி சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்வதற்கு தாம் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாள் முதல் ஒரு மாத காலப்பகுதிக்குள் இறுதி முடிவை வழங்க அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) பிரகாரம் உள்நாட்டில் சம்பளமற்ற லீவுக்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பப் படிவம் ஒன்று உள்ளதா?
இல்லை.
லீவுக்கு விண்ணப்பிப்பதற்காக எழுத்து மூல விண்ணப்பமொன்றை சமர்ப்பிப்பது போதுமானது என்பதுடன், அந்தந்த அமைச்சினால் தமது அமைச்சுக்கு என்று தயாரித்த மாதிரிப் படிவமொன்றைப் பயன்படுத்திக்கொள்வதற்கு தடையில்லை.
உ-ம்:-
1. | பெயர் | : | |
2. | பதவி | : | |
3. | சேவை செய்யும் அலுவலகம் | : | |
4. | லீவுக்கு விண்ணப்பிப்பதற்கான காரணம் | : | |
5. | லீவு கோரும் காலப்பகுதி | : | ..............முதல்......................வரை |
6. | ....... | : |
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் படி உள்நாட்டில் சம்பளமற்ற லீவினைப் பெறும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமொன்று உள்ளதா?
இல்லை.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II) இன் படி உள்நாட்டில் சம்பளமற்ற லீவினைப் பெற்றிருக்கும் போது வெளிநாடு செல்ல வேண்டியிருப்பின் லீவினைப் பெறும் முறை எவ்வாறு இருக்கும்?
(i) உள்நாட்டு சம்பளமற்ற லீவினைப் பெற்றிருக்கும் போது/ இணையவழி முறை ஊடாக தொழில் ஒன்றில் ஈடுபட்டிருக்கையில் குறுகிய கால (03 மாதங்களுக்கு குறைந்த காலத்திற்கு) வெளிநாடு செல்வதாயின் வெளிநாட்டு லீவுக்கான அனுமதியைப் பெறத் தேவையில்லை.
(ii) உள்நாட்டு லீவினைப் பெற்றுள்ள ஒரு உத்தியோகத்தர் 03 மாதங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அல்லது வேறொரு பணிக்காக அல்லது வெளிநாடு செல்வதற்கு அவசியப்பட்டால் மீள சேவைக்கு சமூகமளித்து, அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022, 14/2022(I) இன் படி அதற்காக வெளிநாட்டு லீவினை அனுமதித்துக் கொள்ள வேண்டும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022(II) இன் படி கலாநிதி பட்டப் பாடநெறி மற்றும் பட்டப் பின் பட்டப் பாடநெறி கற்கைகளுக்காக சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
முடியாது.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022(II) இன் படி கலாநிதி பட்டப் பாடநெறி மற்றும் பட்டப் பின் பட்டப் பாடநெறி கற்கைகளுக்காக சம்பளமற்ற லீவினைப் பெற்றுக்கொள்ள முடியுமா?
முடியாது.
தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் ஏற்கனவே வெளிநாட்டு லீவினை எடுத்துள்ள உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I), 14/2022(II) இன் கீழ் மீள சம்பளமற்ற லீவினை பெற்றுக்கொள்ள முடியுமா?
தாபன விதிக்கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 16 ஆம் பிரிவின் கீழ் அதிகபட்சம் 05 வருடங்கள் வரை லீவினைப் பெற்றுள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்த ஏற்பாடுகளின் கீழ் மீள லீவினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
அரசு சார்ந்த நிறுவனங்களில் சேவை செய்வதற்காக அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022(II)இன் படி லீவினைப் பெற முடியுமா?
முடியாது.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022II) இன் படி லீவு வழங்க முடியுமான பதவிகள் மற்றும் வழங்க முடியாத பதவிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதா?
சேவையின் தேவையை மதிப்பிட்டதன் பிறகு, ஏதேனும் ஒரு பதவியை வகிக்கும் உத்தியோகத்தருக்கு, மேற்கூறப்பட்டவாறு சம்பளமற்ற லீவு வழங்குவது தொடர்பாக குறித்த அமைச்சின் செயலாளரினால் முடிவெடுக்கப்படும்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 14/2022,14/2022(I) மற்றும் 14/2022(II) இன் கீழ் லீவினைப் பெற்றுள்ள உத்தியோகத்தருக்கு அந்த லீவு காலத்தினுள் அல்லது லீவு காலத்தின் இறுதிக் கட்டத்தில் மீள சேவைக்கு சமூகமளிக்காமல் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு வாய்ப்பு காணப்படுகின்றதா?
முறைசார்ந்த வகையில் சேவையிலிருந்து இராஜினாமாச் செய்வதற்கு தடையேதுமில்லை.
புகையிரத ஆணைச்சீட்டு
அரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை பிரயாண ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா?
தாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும் என்பதுடன், அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்
அலுவலக கடமை நேரம்
பிரயாணச் செலவு
முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா?
08.01.2008 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும்.
உத்தியோகபூர்வ வாசஸ்தலம்
ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா?
ஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும்.
ஒப்பந்த பிணை முறி
கடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா? கட்டாய சேவைக்காலம் அவசியமா?
ஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது.
சொத்து மற்றும் இடர் கடன்
யாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்?
உத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும்.
தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா?
ஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர்.
இடமாற்ற கொள்கைகள்
இடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா?
ஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அத்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும்.
வினைத்திறன் காண் தடைப்பரீட்சை
2001.09.12 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 20/2001 இன் படி வினைத்திறன் காண் தடையிலிருந்து விடுவிப்புக்கான ஏற்பாடுகள் என்ன?
2001.10.01 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் பின்வரும் தேவைப்பாடுகள் சகலதையும் பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்கள் மாத்திரம் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்வதற்கான தேவைப்பட்டிலிந்து விடுவிக்கப்பட முடியும்.
- 2001.10.01 ஆந் திகதியில் 45 வயதினை அடைந்திருத்தல்.
- ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைப் பிரமாணத்தில் வயதை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் காண் தடைப் பரீட்சையிலிருந்து விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருத்தல்.
- 2001.10.01 ஆந் திகதியில் நிர்ணயிக்கப்பட்டிருந்த வினைத்திறன் காண் தடைக்கு சம்பள படிமுறையை அடைந்திருத்தல். (முற்தேதியிடல் அல்லது பதவியுயர்த்தல் அல்லது சம்பள ஏற்ற அநுகூலங்களைப் பெற்றிருத்தல் என்ற அடிப்படையில் அல்லது குறித்த சம்பளப் படிமுறையை அடைந்திருத்தல் அல்லது சம்பள படிமுறையை தாண்டியிருத்தல் இங்கு ஏற்புடையதற்றது.)
நியமனம் மற்றும் பதவி உயர்வு
ஒரு உத்தியோகத்தர் அரச சேவையில் ஒரு பதவியிலிருந்து மற்றொரு பதவிக்கு பதவியுயர்த்தப்படும் போது பதவியுயர்வுக்கு முன்னரான பதவியில் பெற்ற சம்பள படிமுறை புதிய பதவிக்குரிய வகுப்பில்/ தரத்தில் அதிகபட்ச சம்பள படிமுறைக்கு அப்பாற்பட்டிருப்பின் அவர் அமர்த்தப்படும் சம்பளப் படிமுறையை முடிவு செய்வது எவ்வாறு?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இன் இணைப்பு 02 இன் 4:5 ஆம் பந்தியின் ஏற்பாடுகளின் படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதன்போது, புதிய பதவிக்குரித்தாக அமர்த்தப்பட வேண்டிய சம்பள படிமுறை புதிய பதவியில் அவரின் தரத்திற்கு உரித்தாக சம்பள அளவுத்திட்டத்தின் அதிகபட்ச சம்பள படிமுறையை விஞ்சிய சந்தர்ப்பத்தில், பதவியுயர்வு பெறாத நிரலில் உள்ள அதிகபட்ச சம்பள படிமுறைக்குரிய சம்பள ஏற்றப் பெறுமதியைச் சேர்த்து சம்பள அளவுத்திட்டத்தை நீடித்துக் கொண்டதன் பின்னர் உரிய சம்பள படிமுறையில் அமர்த்தப்படுதல் வேண்டும். அதற்கு அப்பாற்பட்டு, 2019.07.08 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 07/2019 இன் ஏற்பாடுகளின் பால் கவனம் செலுத்தி அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு ஏற்ப அடுத்துவரும் பதவியுயர்விற்காக சேவையாற்ற வேண்டிய குறித்த வருடங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யும் வரை தொடர்ந்தும் சம்பள ஏற்றங்களை வழங்க முடியும்.
உத்தியோகத்தர்கள் பதவியுயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் காண் தடை சம்பள படிமுறையை விஞ்சியிருப்பின் அதன் பின்னர் சம்பள ஏற்றங்களை வழங்குவது தொடர்பாக எவ்வாறு செயற்படுதல் வேண்டும்?
பதவியுயர்வின் படி சம்பள மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் காண் தடை சம்பள படிமுறையை விஞ்சியிருப்பின் தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 5:5 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மேலும், வினைத்திறன் காண் தடைதாண்டலை பூர்த்தி செய்வதற்காக உரியவாறு சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து சலுகைக் காலத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்பதோடு, அதன்படி, அடுத்துவரும் சம்பள ஏற்றத்தை செலுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
அரச சேவையில் / மாகாண அரச சேவையில் நிரந்தர பதவியை வகிக்கும் ஒரு உத்தியோகத்தர் அரசின் மற்றொரு பதவிக்கு நியமனம் பெறும் போது அவரின் முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்துடன் சேர்க்க முடியுமா?
சேர்க்க முடியாது. எனினும், அரச சேவையில் / மாகாண அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் முறையாக விடுவிக்கப்பட்டு அரச சேவையின் புதிய நியமனத்தைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில், அரச சேவையின் / மாகாண அரச சேவையின் கீழமைந்த மொத்த சேவைக் காலத்தையும் ஓய்வூதிய கணிப்பீட்டுக்கு மாத்திரம் ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.
அரச சேவையில் / மாகாண அரச சேவையில் நிரந்தர பதவியை வகிக்கும் ஒரு உத்தியோகத்தர் மற்றொரு அரச சேவையின் / மாகாண அரச சேவையின் பதவிக்கு நியமனத்தைப் பெறுகின்ற போது, அவரின் சம்பளத் தயாரிப்பின் போது முன்னைய சேவையில் பெற்ற சம்பளம் மற்றும் சேவைக் காலத்தை புதிய பதவியின் சம்பளத்தை தயாரிக்கும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
அரச சேவையில் / மாகாண அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் முறையாக விடுவிக்கப்பட்டு அரச சேவையில்/ மாகாண அரச சேவையில் புதிய நியமனத்தைப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில், அரச சேவையின் / மாகாண அரச சேவையின் கீழ் பெற்ற சம்பளம் மற்றும் சேவைக் காலம் தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 9 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி சம்பள ஏற்ற ஆநுகூலங்களை வழங்ககவனம் செலுத்த முடியும். இது சம்பந்தமாக 2017.09.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கைக் கடிதம் 05/2017 வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவியுயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல், வினைத்திறன் காண் தடைதாண்டல் சலுகை தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வாறு செயற்படுதல் வேண்டும்?
2022.12.14 ஆந் திகதிய மற்றும் 2310/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் அரச சேவை ஆணைக்குழு நடைமுறை ஒழுங்கு விதியின் பால் அவதானம் செலுத்தி குறித்த அறிவுறுத்தல்களை பொது சேவை ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
பற்றாக்குறை சேவை பட்டதாரிகளின் பிணக்கு
2005.07.15 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 20/94 (II) இன் ஏற்பாடுகள், 1980.12.31 ஆந் திகதியின் பின்னர் அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
விடுவிப்பு
அரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன?
2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
{sliders}அரசியல் உரிமைகள் அரசியலில் வேட்பாளராக போட்டியிடும் அரசியல் உரிமை உள்ள ஒரு உத்தியோகத்தருக்கு, அதற்கான லீவுகளை கோரும் போது, அவ்வருடத்தில் அவருக்கு உரித்தாகும் அதுவரை எடுக்காத பொதுவான லீவுகள் ஏதேனும் இருப்பின், அவற்றினைப் பெற்றுக்கொள்ள முடியுமா? |closed}
ஆம். அந்த ஆண்டுக்கு உரித்தான அமய லீவுகளையும், முன்னை வருடத்தின் ஓய்வு லீவுகள் எஞ்சியிருப்பின் அந்த லீவுகளையும் மற்றும் நடப்பு ஆண்டிற்கு உரித்தாக உழைத்துள்ள ஓய்வு லீவிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஓராண்டு முடிவதற்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு, அடுத்துவரும் ஆண்டில் தேர்தல் நடத்தப்படும்போது லீவுகளைப் பெறுவது எவ்வாறு?
2019.03.05 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 18/2020 இன் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசியல் உரிமை உள்ள உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராகி, தான் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமா?
இல்லை. அரசாங்கத்தில் அவர் வகித்து வந்த பதவியில் இருக்கும் போது அவர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 06 நாட்களுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட கூட்டங்களில் பங்கேற்கலாம். (2021.06.25 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 12/2021)
அரசியல் உரிமை உள்ள உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், தான் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமா?
இல்லை. அரசாங்கத்தில் அவர் வகித்து வந்த பதவியில் இருக்கும் போது அவர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 08 நாட்களுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும், சேவையின் அவசரத் தேவைகளுக்குக் கட்டுப்பட்டு, சம்பளத்துடனான லீவுகளை வழங்கல் அல்லது மொத்த பதவிக் காலத்திற்கும் சம்பளமற்ற லீவுகளைப் பெற்றுக்கொள்ளல். (2021.06.25 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 12/2021)
அரசியல் உரிமை உரித்துள்ள உத்தியோகத்தர் ஒருவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டால், அவர் தான் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமா?
இல்லை. தாபன விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயம் 2:3:4 ஆம் உபபிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 01 ஆம் அல்லது 02 ஆம் தேர்வின் படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அரசியல் உரிமை உரித்துள்ள உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டால் தான் வகித்து வந்த பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமா?
ஆம்.
{sliderஅரசியல் உரிமை உரித்தற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமா?|closed}
ஆம். எனினும், 10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியத்துடனான சேவைக் காலத்துடையவராயின், தாபன விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 1:3 ஆம் உபபிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்பட முடியும்.
{sliderதேர்தலில் போட்டியிடுவதற்காக அரசாங்கப் பணியில் இருந்த பதவியை இராஜினாமா செய்து அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தருக்கு மீண்டும் தனது முன்னைய பதவிக்கு வர முடியுமா? |closed}
முடியாது.
மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு
சிங்கள மொழிமூலம் கற்கும் பட்டப் பாடநெறியின் துணைப் பாடமாக ஆங்கிலத்தில் சித்தியெய்ததன் அடிப்படையில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்க முடியுமா?
முடியாது.
ஏதேனும் ஒரு பதவிக்குரிய ஆட்சேர்ப்பு நடைமுறை/சேவைப் பிரமாணத்தில் அல்லது விண்ணப்பங்கள் கோரும் அறிவித்தலில் ஆட்சேர்ப்பிற்குரிய தகைமையாக ஏதேனும் மொழிப் புலமை கோரப்பட்டிருந்தால் அந்த மொழிப் புலமைக்காக 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) இற்கு அமைய ஊக்குவிப்புத் தொகையைப் பெற முடியுமா?
முடியாது.
1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) (இன் கீழ் ஊக்குவிப்புத் தொகை வழங்குவதற்கு மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் ( ஊழியர் கல்வி நிறுவனத்தின்) சான்றிதழை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
அந்த நிறுவனத்தில் ஆங்கில மொழி டிப்ளோமா அல்லது ஆங்கில மொழியில் பட்டம் அல்லது கற்று சான்றிதழைப் பெற்றிருப்பின் அதன் சான்றிதழை ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்காக ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.
சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தருக்கு 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) இன் கீழ் மொழிக் கொடுப்பனவை நியமனம் பெற்ற திகதியிலிருந்து செலுத்த வேண்டுமா? சேவையில் உறுதிப்படுத்தப்பட்ட திகதியில் இருந்தா? வாய்மொழிப் பரீட்சையில் சித்தியெய்திய / விடுவிக்கப்பட்ட திகதியில் இருந்தா இல்லையெனில் ஊக்குவிப்புக் கொடுப்பனவைக் கோரும் திகதியிலிருந்தா?
மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க ஆரம்பிக்க வேண்டியது, உத்தியோகத்தர் எழுத்துமூலத் தகைமைகளைப் பூர்த்தி செய்த திகதியின் பின்னர் முதல் நியமனத் திகதிக்குப் பிறகு குறித்த தகைமைகளை பூர்த்தி செய்திருப்பின் அத்தகைமைகள் பூர்த்தி செய்த திகதியிலிருந்தா, நியமனம் உறுதிப்படுத்தப்பட்ட திகதியிலிருந்தா, இல்லையெனில் மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு கோரப்பட்ட திகதியிலிருந்தா, வாய்மூலப் பரீட்சை சித்தியெய்தலை கட்டாயப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர் தொடர்பிலாயின் வாய்மூலப் பரீட்சை சித்தியெய்திய / வாய்மூலப் பரீட்சையின் மூலம் விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்தா, என்பது பற்றிய தீர்மானத்தை திணைக்களத் தலைவரினால் எடுக்க முடியும்.
மீள சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்கள் 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) இன் கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெறுவதற்குரிய உரித்துடமை அவர்களுக்கு இருக்கின்றதா?
இல்லை.
க.பொ.த. (உ.தர) பரீட்சையில் பொது ஆங்கிலம் (General English) பாடத்தில் சித்தியெய்தல் 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
2007.02.09 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இன் கீழ் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்கு, 2020.10.16 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னர், பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இன் கீழ் மொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
முடியாது. 2020.10.16 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் மூலம் 2007.02.09 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 03/2007 இனை இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் 2020.10.16 ஆந் திகதியின் பின்னர் சிங்களம்/ தமிழ் மொழிகளுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை செலுத்துவதற்கு பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
ஆங்கில மொழி அல்லாத பிற பாடங்கள் தொடர்பில், ஆங்கில மொழியில் கற்றுள்ள டிப்ளோமா பாடநெறிச் சான்றிதழ், 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது.
பட்டப் பாடநெறியை ஆங்கிலத்தில் மற்றும் பிற மொழியொன்றினைப் பயன்படுத்தி இரண்டு மொழிகளில் கற்று பெற்றுக்கொண்ட சான்றிதழ், 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியாது. 1998.12.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கையின் 29/98 மற்றும் 2004.06.23 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 29/98 (i) கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவைப் பெறுவதற்கு குறித்த பட்டப் பாடநெறி முழுமையாக ஆங்கில மொழியில் கற்றிருத்தல் வேண்டும்.
ஒழுக்காற்று
ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்த ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை நியமிக்கலாமா?
முடியாது. அரச சேவையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை நியமித்தல் வேண்டும். எவ்வாறாயினும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கக் கருதுவதாயின் அதற்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன் அனுமதியைப் பெறுதல் வேண்டும்.
குற்றச்சாட்டுப் பத்திரம், சாட்சிகளுடன் கூடிய ஆவணம் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியல் என்பவற்றை திருத்த முடியுமான சந்தர்ப்பங்கள் எவை?
தாபன விதிக்கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின;
- 14:4 ஆம் உப பிரிவின் படி குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் வரையான காலப்பகுதியினுள் எத்தனை முறையும் குற்றச்சாட்டுப் பத்திரத்தை திருத்தியமைக்க ஒழுக்காற்று உத்தியோகத்தருக்கு அதிகாரம் உண்டு.
- 14:6 ஆம் உப பிரிவின் பிரகாரம், முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக குற்றச்சாட்டுப் பத்திரத்தில் இரண்டு தடவை திருத்தியமைக்க முடியும்.
- 14:8 ஆம் உப பிரிவின் பிரகாரம், முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், சாட்சிகளுடன் கூடிய ஆவணம் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியலை இரண்டு தடவை திருத்தியமைக்க முடியும்.
முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையில் முறைப்பாட்டை விசாரிக்கும் உத்தியோகத்தருக்கு சாட்சிகளுடன் கூடிய ஆவணம் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியலை திருத்தம் செய்யும் போது புதிதாக சாட்சிகளுடன் கூடிய ஆவணம் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்கள் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் சேர்க்க முடியுமா?
முடியும். தாபன விதிக்கோவையின் II ஆம் வகுதியின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 14:8 ஆம் உப பிரிவினால் ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆரம்ப விசாரணையின் போது சாட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட எழுத்து மூல கூற்று முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையில் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
தாபன விதிக்கோவையின் II ஆம் அத்தியாயத்தின் XLVIII ஆம் அத்தியாயத்தின் 21:13 பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் ஆரம்ப விசாரணையின் போது வழங்கப்பட்ட எழுத்து மூல கூற்று உண்மையானது என சாட்சியாளரினால் முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையின் போது ஏற்றுக்கொள்ளப்படுமாயின் அதனை முறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையில் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியும்.
குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தரின் தொலைபேசி அல்லது பிற உரையாடலின் ஒலிப் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவை முறைசார்ந்த விசாரணையொன்றின் முறைப்பாட்டின் சாட்சியாக ஏற்றுக்கொள்ள முடியுமா?
சமர்ப்பிக்க சட்டரீதியான தடையேதும் இல்லை. தொலைபேசி அல்லது பிற உரையாடல்களைப் பதிவு செய்யும் நபர் அல்லது மேற்படி தொலைபேசி உரையாடலில் பங்குதாரரான மற்ற நபரை சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியாக அழைப்பதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரினால் செய்யப்பட்டதாக கூறப்படும் அறிக்கையை சுயாதீனமாக நிரூபிக்க முடியும்.
முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் போது குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தர் இறந்துவிட்டால், ஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்தி தீர்ப்பினை வழங்க முடியுமா?
ஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்த முடியும். ஆனால் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் குற்றத்தைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர வாய்ப்பே இல்லை.
{slideஆரம்ப கட்ட விசாரணையை எவ்வளவு காலத்தினுள் முடிக்க வேண்டும்?}
02 மாதங்களினுள் (2019.09.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 30/2019 - 13.2 இன் பிரிவு)
{slideமுறைசார்ந்த ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்து எந்த காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட வேண்டும்?}
06 மாதத்தினுள் (2019.09.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 30/2019- 22.1.1 இன் பிரிவு)
{slide09. பணித் தடை செய்யப்பட்ட உத்தியோகத்தருக்கு பதவி உயர்வுப் பரீட்சைக்கு , திணைக்களப் பரீட்சைக்கு அல்லது வினைத்திறன்காண் தடை பரீட்சைக்குத் தோற்ற முடியுமா?}
2019.09.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 30/2019 இன் 14.12.1 ஆம் உபபிரிவின் கீழ் பரீட்சையில் தோற்ற முடியும்.
விருப்பப்படி ஓய்வு பெறுவதற்கான வயதை அடையும் முன் உத்தியோகத்தர் ஒருவர் தனது விருப்பத்தின் படி ஓய்வு பெறுவதற்கான ஏற்பாடுகள் காரணப்படுகின்றதா?
1988.08.30 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 30/88 மற்றும் 1990.06.19 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 30/88(1)இன் படி சுமார் 20 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்ததன் அடிப்படையில் ஓய்வு பெறச் செய்ய முடியும்.
மரணப் பணிக்கொடைக்கு உரிமை பெறுவதற்கு பூர்த்தி செய்திருக்க வேண்டிய தேவைகள் யாவை?
05 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய பதவியொன்றில் சேவையாற்றியிருத்தல் (1996.12.06 ஆந் திகதிய ஓய்வூதியச் சுற்றறிக்கை 9/96)
பயிற்சி சேவைக் காலத்தை ஓய்வூதியத்தை கணிப்பீடு செய்யும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.அப்பயிற்சியானது நியமனம் செய்யப்பட்ட பதவிக்கு உரித்துடையதாக இருத்தல் வேண்டும். ( ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 4(ஆ)1)
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதால் அவர்களின் ஓய்வூதியம் பறிக்கப்படுமா?
இல்லை
பொது சேவை ஆணைக்குழு நடைமுறை ஒழுங்கு விதியின் XII ஆம் அத்தியாயத்தின் 172 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனமொன்றிற்கு நிரந்தரமாக விடுவிக்கப்படும் போது முந்தைய பதவியில் செய்த சேவைக்கான ஓய்வூதிய உரித்துடமை கிடைக்கப் பெறுமா?
நிரந்தர ஓய்வூதியத்துடன் கூடிய பதவியில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சேவையாற்றியிருத்தல், முறையாக விடுவிக்கப்பட்டிருத்தல், விடுவிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து முறைசார்ந்த வகையில் ஓய்வு பெற்றிருப்பின், அவர் ஓய்வூதிய உரித்துடமையைப் பெறுகிறார்.
அரச சேவையில் இருந்து இராஜினாமாச் செய்து மீள சேவையில் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரின் முன்னைய சேவைக் காலத்தை ஓய்வூதியத்திற்காக கணிக்கப்பட முடியுமா?
ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 20(2) ஆ பிரிவின் கீழ் ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.
பிரத்தியேகக் கோவையில் உள்ள கடிதங்கள் காணாமல் போனதால் ஓய்வூதிய சேவைக் காலம் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறை யாது?
1973.06.14 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை121 இன் 5:4ஆம் பிரிவின் படி திணைக்களத் தலைவரினால் இரண்டு பதவிநிலை உத்தியோகத்தர்களைக் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து, குறித்த சேவைக் காலம் தொடர்பான பரிந்துரையை ஓய்வூதியத் பணிப்பாளர் நாயகத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
திடீர் விபத்துச் சலுகை
திடீர் விபத்து காரணமாக மரணமடைந்த திருமணமாகாத அரச உத்தியோகத்தர் ஒருவர் சார்பாக அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 22/93 இன் கீழ் சலுகை வழங்கும் போது, பெற்றோர் உயிருடன் இல்லாத போது, இந் நிவாரணப் பணத்தை அவரது திருமணமாகாத சகோதர∕சகோதரிகளுக்கு வழங்க முடியுமா?
அவ்வாறான சந்தர்ப்பத்தில் நிவாரணப் பணத்தை உத்தியோகத்தரின் திருமணமாகாத தொழிலற்ற சகோதர சகோதரிகளுக்கு சம பங்குகளாக வழங்க முடியும்.
பயங்கரவாத விபத்து∕நாசகார செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்கள்
பயங்கரவாத செயற்பாடு காரணமாக இறந்த அரச உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உத்தியோகத்தரின் ஊதியத்தை குழந்தைகளுக்கு வழங்க முடியுமா?
இறந்த உத்தியோகத்தரின் வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்து கொண்டதன் பின்னர், அவன்∕அவள் இறந்தவரில் தங்கி வாழ்பவர் எனக் கருத முடியாது எனினும் குழந்தைகள் மேலும் தங்கி வாழ்பவர்களாவர்.
அதற்கமைய 55 வருடங்கள் நிறைவு செய்யும் திகதி அல்லது குழந்தைகள் 26 வயதை நிறைவு செய்யும் திகதி ஆகிய இரண்டில் முதலாவதாக எழும் திகதி வரையில் உத்தியோகத்தருக்குரிய மாதாந்த ஊதியத்தை தடவை தடவையாக பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புப் பெற்றிருந்து அதிகரிப்புகள் மற்றும் கொடுப்பனவுகளுடன் அவரது குழந்தைகளுக்கு (பெண் பிள்ளைகள் எனில் விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்) வழங்க முடியும்.
அரச கூட்டுத்தாபனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய உத்தியோகத்தரொருவர், பயங்கரவாத நாசகார நடவடிக்கை காரணமாக மரணமடைந்தால் அவரது தங்கி வாழ்வோருக்கு நிவாரணம் பெற உரித்துண்டா?
13.07.1988 ஆந் திகதிய இலக்கம் 21/88 மற்றும் 30.11.1989 ஆந் திகதிய இலக்கம் 59/89 உடைய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய அவ்வாறான உத்தியோகத்தரொருவரின் பொருட்டு அவரது தங்கி வாழ்வோருக்குச் சகல கொடுப்பனவுகள் மற்றும் சம்பள ஆண்டேற்றங்களுடன் உத்தியோகத்தருக்குரிய முழுமையான மாதாந்த ஊதியத்தை அவருக்கு 55 வயது நிறைவு செய்யும் நாள் வரை வழங்க முடியும்.
குழந்தைகள் அற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக மரணடைந்தால், அவனது∕அவளது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்தால், இறந்த உத்தியோகத்தரது ஊதியத்தை அவனது∕அவளது பெற்றோருக்கு வழங்க முடியுமா?
திருமணமான அரச உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்பவராகக் கருதப்படுவது வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத தொழிலற்ற குழந்தைகளே என்பதால், மேற்படி உத்தியோகத்தரது பெற்றோருக்கு ஊதியத்தினை வழங்க முடியாது.
பயங்கரவாத நடவடிக்கை காரணமாக இறந்த உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்வோருக்கு 13.07.1988 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 21/88 இன் ஏற்பாடுகளுக்கமைய செலுத்தப்படும் ஊதியத்தினை, இறந்த உத்தியோகத்தர் 55 வயதை தாண்டிய பின்னரும் கொடுப்பனவு செய்ய முடியுமா?
உத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு பெறும் விருப்பத்திற்குரிய வயது 55 என்பதால் அதன் பின்னர் ஊதியத்தினைச் செலுத்த முடியாது.
பதிற்கடமைக் கொடுப்பனவு
ஏதேனும் ஒரு பதவியில் முழுநேர அடிப்படையில் பதிற்கடமையாற்ற அல்லது கடமைகளை நிறைவேற்ற அல்லது நியமிக்கப்பட்ட ஒரு உத்தியேகத்தர் மற்றொரு பதவியில் பதிற்கடமையாற்ற அல்லது கடமைகளை நிறைவேற்ற அல்லது நியமன அதிகாரியினால் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அவருக்கு அவ்வாறு பதிற்கடமையாற்ற அல்லது கடமைகளை நிறைவேற்ற அல்லது நியமிக்கப்பட்ட பதவிக்கு தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளின் படி பதிற்கடமையாற்ற அல்லது கடமைகளை நிறைவேற்றுவதற்கான கொடுப்பனவுகளைப் பெற முடியுமா?
பெற்றுக்கொள்ள முடியும்.
உத்தியோகத்தர் ஒருவர் தமது நிரந்தர பதவியினை விட உயர் பதவியொன்றில் முழுநேரமாக அல்லது நிரந்தர பதவிக்கு மேலதிகமாக அல்லது பதிற்கடமையாற்றுவதற்கு முறைசார்ந்த வகையில் நியமனம் செய்யப்பட்டிருப்பின், பதிற்கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த திகதி முதல் முற்தேதியிடப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டு அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள போது அந்நியமனத்தின் படி அவரின் சம்பளம் தயாரிக்கப்பட்டு நிலுவைச் சம்பளத்தைச் செலுத்தும் போது பதிற்கடமையாற்றிய காலத்திற்கு செலுத்தப்பட்ட பதிற்கடமைக் கொடுப்பனவை மீள அறவிடல் வேண்டுமா?
பதிற்கடமையாற்ற முறையாக நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து, முற்தேதியிட்டு பதவியுயர்த்தப்பட்டுள்ள கடிதம் வழங்கப்பட்ட திகதி வரை அப்பதவியில் பதிற்கடமையாற்றுவதற்குப் பதிலாக செலுத்தப்பட்ட பதிற்கடமையாற்றலுக்கான சம்பளத்தை மீள அறவிட்டுக்கொள்ளத் தேவையில்லை என்பதோடு, பதவியுயர்த்தப்பட்ட திகதியிலிருந்து பதவியுயர்வு கிடைக்கப்பெற்ற பதவிக்குரிய சம்பள நிலுவை காணப்படுமாயின் அதனுடன் செலுத்துதல் வேண்டும்.
ஏதேனுமொரு பதவியில் உள்ள உத்தியோகத்தர் அதற்கச் சமனான தரம் III / II இல் ஒருங்கிணைந்த பதவியில், உத்தியோகத்தரின் உண்மையான பதவிக்கு மேலதிகமாக பதிற்கடமையாற்ற நியமனம் செய்யப்பட்டு தாபன விதிக்கோவையின் VIIஆம் அத்தியாயத்தின் 12:5:4 இன் படி பதிற்கடமைக் கொடுப்பனவை கணக்கிடும் போது பதிற்கடமையாற்றும் பதவியின் ஆரம்ப சம்பளமாக கருதப்படும் சம்பள படிமுறை யாது?
தரம் II இன் ஆரம்ப சம்பளத்தை ஏற்புடையதாக்கிக் கொள்ள வேண்டும்.
இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறை
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2010 இற்கமைய உத்தியோகத்தர் ஒருவருக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய ஆகக் கூடிய இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறைக் காலம் எவ்வளவு?
உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெறும் திகதிக்கு முன்னராக 03 மாத காலத்தினுள் உள்ள அரசின் வேலை செய்யும் நாட்களுக்குச் சமமாக பயன்படுத்தப்படாத விடுமுறைகள் அவன்/அவள் இற்கு உரித்தாக இருப்பின் உத்தியோகத்தருக்கு உச்ச காலப் பகுதியாக 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு இளைப்பாறுவதற்கு முன்னரான விடுமுறையினைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு முன்னரான 03 மாத காலத்தை கணக்கிடும் அரசின் வேலை நாட்களுக்குச் சமமான நாட்களை பயன்படுத்தப்படாத விடுமுறைகளைக் கொண்டிராத உத்தியோகத்தர் ஒருவருக்கு அவன்/அவள் இற்கு உரித்தாகவுள்ள பயன்படுத்தப்படாதுள்ள விடுமுறைகளின் எண்ணிக்கைக்குச் சமமான வேலை நாட்களை இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2010 இன் பிரகாரம் இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையினை வழங்கும் பொருட்டு உத்தியோகத்தர் ஒருவர் பயன்படுத்தப்படாத விடுமுறையை எப்போது தொடக்கம் கணக்கிடுவது? அது எவ்வாறு?
2007.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய,ஓய்வு/சுகயீன விடுமுறைகளை இதன் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம். அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 02/2005 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் 2006 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படாத விடுமுறைகளின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாத உத்தியோகத்தர் ஒருவர் அவன்/அவள் சார்பாக 2006.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய, ஓய்வு/சுகயீன விடுமுறைகளை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.
சீருடை உரித்து
சீருடை உரித்துடைய அலுவலக உதவியாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் யார்?
அலுவலக உதவியாளர் சேவையின் II ஆம் வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே சீருடை உரித்தாகும். அலுவலக உதவியாளர் சேவையின் I வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு சீருடை உரித்து இல்லையெனினும் 2009.04.28 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 08/2009 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் அவர்களுக்கு சீருடைகளை வழங்கலாம். அலுவலக உதவியாளர் சேவையின் III ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைக்கு உரித்தில்லை.
ஆட்சேர்ப்புத் திட்டம்.
ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தயாரிப்பதற்காக பயன்படுத்த வேண்டிய மாதிரிப் படிவம் எது? அதை எப்படி பூர்த்தி செய்யவேண்டும்?
அரசாங்க சேவை ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் (www.psc.gov.lk)வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் 2015.03.26 ஆந் திகதிய அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கை 01/2015 மூலம் திருத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிப் படிவத்தின் பிரகாரம் ஆகும்.
அரசாங்க சேவைகள் சுற்றறிக்கை 06/2006 வெளியிடப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு பதவியின் பொருட்டும், வெவ்வேறாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டம், அச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னரும் அவ்வாறே அனுமதிக்கப்படல் வேண்டுமா?
இல்லை. ஒவ்வொரு பதவியின் பொருட்டும் ஆட்சேர்ப்புத் திட்டத்தினைத் தயாரிப்பதற்குப் பதிலாக, இயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே சேவைப் பிரிவின் பொருட்டு ஒரு ஆட்சேர்ப்புத் திட்டத்தினை தயாரித்தல் வேண்டும்.
பதவிப் பெயர் | சேவைப் பிரிவு |
தொழிலாளர் | கனிஷ்ட - தொழில் நுட்பம் அல்லாத |
காவலாளி | |
சாரதி உதவியாளர் | |
விடுதிப் பொறுப்பு உதவியாளர் |
ஒரு ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அங்கீகாரம் அளிக்கும் செயற்பாட்டில், அமைச்சு/திணைக்களத்திடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கான அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கும் அதிகாரி யார்?
- பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டிய அதிகாரிகள்
தாபனப் பணிப்பாளர் நாயகம்
தேசிய சம்பள ஆணைக்குழு
முகாமைத்துவ சேவை திணைக்களம்
- அனுமதியளிக்கும் அதிகாரி
அரசாங்க சேவை ஆணைக்குழு
ஆட்சேர்ப்பு நடைமுறைகளை பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அனுப்புவது எவ்வாறு?
அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு நடைமுறையைத் தயாரித்து திணைக்களத் தலைவர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரின் பரிந்துரையுடன் முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பதவிகளை அங்கீகரித்த கடிதத்தின் பிரதி மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பாக தேசிய சம்பள ஆணைக் குழுவினால் பரிந்துரைகள் வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியுடன் தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.
ஆட்சேர்ப்புத் திட்டமொன்றிற்கு சிபாரிசைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் யாவை?
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவி/பதவிகளின் பொருட்டு நி.பி. 71 கீழான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியல்.
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகள்/பதவிகளின் பொருட்டு சம்பளத்தை சிபாரிசு செய்து தேசிய சம்பள மற்றும் ஊழியர் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள்.
ஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதியின் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது ஆட்சேர்ப்புத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் எவை?
- முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் நி.பி. 71 கீழான பதவி∕பதவிகள் அனுமதிக்கப்பட்ட கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியலின் பிரதியொன்று
- ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்போது அனுமதிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்று இருப்பின் அவற்றின் பிரதியொன்று
- தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் சிபாரிசு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியொன்று
- Copy of the letter by which the National Salaries and Cadres Commission has made recommendations
பொது நிர்வாகச் சுற்று நிருபம் 6/2006 இற்கு அணுகூலமாகஅனுமதிக்கபட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்றை திருத்தம் செய்வதற்குத் தேவையாயின் அதனை மேற்கொள்வது எவ்வாறு?
1589/30 என்னும் இலக்கமுடைய 2009.02.20 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிமுறைகளில் IV வது அத்தியாயத்தின் 36 மற்றும் 37 வது பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.
இலங்கை விஞ்ஞான சேவைகள் பிரமாணக் குறிப்பின் நியதிகளை கட்டுப்படும் இலங்கை விஞ்ஞான சேவைக்கும் இலங்கை தொழில்நுட்ப சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் கட்டுப்படும் இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டங்களைத் தயாரிக்கப்படல் வேண்டுமா?
ஆம். இச்சேவைகளின் பொருட்டு சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் இருப்பினும், அச்சேவைகள் பிரமாணக் குறிப்புக்களினால் கட்டுப்படும் பதவிகளின் பொருட்டு வெவ்வேறான ஆட்சேர்ப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளது.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா?
ஆம். தற்காலிக அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்புத் திட்டமும், ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பும் திட்டமும் தயாரிக்கப்படல் வேண்டும்.
முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால், தற்போது பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இற்கமைய ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா?
இல்லை. இப்பதவியின் உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தயாரிக்கப்பட வேண்டியது ஆட்சேர்ப்புத்திட்டம் அல்ல பதவி உயர்வு திட்டமாகும்.
சேவைகள் பிரமாணக் குறிப்பு
சேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக் கொள்ளும் முறையும், ஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதிக்கும் முறையும் வேறுபடுவது எவ்வாறு?
சேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக்கொள்ளும் போது பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் கொள்கை ரீதியான அனுமதி தேவையெனத் தீர்மானிக்கப்படும் விடயங்கள் தொடர்பாக கொள்கை ரீதியான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த அமைச்சின் செயலாளரினால் அவ்விடயங்களை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். ஏனைய நடவடிக்கைகள் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அனுமதிக்கும் போது கடைப்பிடித்த நடை முறையிலேயாகும்.
மொழிக் கொள்கைகள்
2007.07.01ஆந் திகதிக்கு முன் அரசாங்க சேவை/மாகாண அரசாங்க சேவையில் நிரந்தரப் பதவியில் பணியாற்றிய ஒரு உத்தியோகத்தர் 2007.07.01 ஆந் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட அல்லது தகுதியின் அடிப்படையில் புதிய பதவியில் நியமிக்கப்படும்போது, அவர் பணியில் சேர்ந்த அரச கரும மொழிக்கு மேலதிகமாக வேறு அரச கரும மொழியிலும் தேர்ச்சி பெற வேண்டுமா?
ஆம். 2014.01.21ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 01/2014 மற்றும் அதன் துணை சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகளுக்குப் பதிலாக 2020.10.16 அன்று வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கை 18/2020 இன் விதிமுறைகளுக்கு இணங்க, வேறு அரச கரும மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.
2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு ∕ மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் அவசியமா?
2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு∕மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 07/2007 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சி ஏற்பாடுகள் ஏற்புடையதற்றது எனினும் ஆட்சேர்ப்பின் போது ஏற்புடையதாக்கிக் கொண்ட சேவைகள் பிரமாணக் குறிப்பில்∕ஆட்சேர்ப்புத் திட்டத்தில் மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக ஏனைய ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டிருப்பின் அதற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.
அங்கவீனமுற்றொருவரின் பொருட்டு தொழில் வழங்கல்
அங்கவீனமுற்ற நபர்களுக்குத் தொழில் வழங்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள, 18.08.1988 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 27/88 மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதா? திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அதற்கமைய நடவடிக்கைகளை எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது?
இச்சுற்றறிக்கை மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதுடன் 29.01.1999 ஆந் திகதியில் வெளியிடப்பட்டுள்ள அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 01/99 மூலம் மேற்படி சுற்றறிக்கையின் ஏற்பாடுகளை கடைப்பிடித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர அச்சுற்று நிருபத்தில் வேறு எவ்வித திருத்தங்களும் இல்லை.
ஆட்சேர்ப்பின் போது அங்கவீனமுற்ற நிலை தொடர்பாக அரச வைத்தியர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் அடங்கிய பரிசீலனைகள் மூலம் அங்கவீனமுற்றதாக உறுதிப்படுத்தி அச்சபையின் சிபாரிசின் பேரில் ஆட்சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை அரசாங்க சேவை / மாகாண அரசாங்க சேவை / அரசாங்க கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சட்ட சபைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்புடைய விதிகள் எவை?
விண்ணப்பித்த பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை / சேவை பிரமாணக் குறிப்பின் படி தேவையான தகைமைகளைக் கொண்டுள்ள, அவர்களது இயலாமையானது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்காத நிலையில், அரசாங்க சேவை / மாகாண அரசாங்க சேவை / அரசாங்க கூட்டுத்தாபனங்கள் / நியதிச்சட்ட சபைகளுக்கு உள்ள வெற்றிடங்களுக்கு திறந்த அடிப்படையில் நிரப்பும் போது 3% வெற்றிடங்களை மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்புவதற்கான ஏற்பாடுகள் பொது நிர்வாக சுற்றறிக்கைகள் 27/88 மற்றும் 01/99 ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ளன.
சம்பளக் கொள்கை மற்றும் சம்பள முரண்பாடு
பதவியுயர்வுத் திகதியும், சம்பள ஏற்றத் திகதியும் ஒரே திகதியில் இருப்பின், பதவியுயர்வின் போது சம்பள மாற்றியமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்?
அவ்வுத்தியோகத்தருக்கு பழைய பதவியில்/ வகுப்பில் / தரத்தில் அன்றைய திகதிக்குரிய சம்பள ஏற்றத்தை வழங்கி, அதற்கமைய கிடைக்கப்பெற்ற சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தாபன விதிக்கோவையில் VIIஆம் அத்தியாயத்தின் 5ஆம் பிரிவின் படி பதவியுயர்வின் போது சம்பளத்தினைத் தயாரித்தல் வேண்டும். இது சம்பந்தமாக 2019.07.09 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2019 இன் ஏற்பாடுகள் உரித்தாகும்.
உத்தியோகத்தரொருவரது "சம்பளம்" என்பதால் கருதப்படுவது யாது?
2018.09.07 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 24/2018 இன் படி, சம்பளம் என்பதனால் கருதப்படுவது கொடுப்பனவுகள் இன்றிய மாதாந்த சம்பளமாகும் என்பதோடு வேறுவிதத்தில் குறிப்பிடப்பட்டாலன்றி வேறு எந்த கொடுப்பனவும் உள்ளடங்காது.
உத்தியோகத்தொருவரது "அடிப்படைச் சம்பளம்" மற்றும் "இணைந்த சம்பளம்" என்பதால் கருதப்படுவது யாது?
"அடிப்படைச் சம்பளம்" மற்றும் "இணைந்த சம்பளம்" என்ற இரண்டு வசனங்களினாலும் கருதப்படுவது உத்தியோகத்தருக்குரிய சம்பள அளவுத்திட்டத்திற்குரிய கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த சம்பளமாகும்.
{sliderமுன்னறிவித்தல் எதுவுமின்றி விலகும் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய "மாதாந்தச் சம்பளம்" எனக் கருதப்படுவது யாது?}
2018.09.07 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 24/2018 இன் படி, சம்பளம் என்பதனால் கருதப்படுவது கொடுப்பனவுகள் இன்றிய மாதாந்த சம்பளமாகும். அதன்படி, அறவிடப்பட வேண்டிய கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த அடிப்படைச் சம்பளத்தை மட்டுமே.
தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 5:3:1 ஆம் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள " அடுத்துவரும் உயர் சம்பளப் படிமுறை" என்பதால் கருதப்படுவது யாது?
அதற்குக் கிட்டிய உயர் சம்பள படிமுறையாகும்.
மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறமை அடிப்படையிலான போட்டிப் பரீட்சைகளினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களின் போது சம்பளத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும்?
அவ்வாறான நியமனங்களின் போது தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 5 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி சம்பளத்தை தயாரிக்க வேண்டும்.
எவரேனும் ஒரு உத்தியோகத்தர் அவரின் வேண்டுகோளின் படி அவர் முன்னர் வகித்த பதவிக்கு மீள நியமிக்கும் போது அமர்த்தப்பட வேண்டிய சம்பளம் யாது?
2019.07.09 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2019 இன் படி, உத்தியோகத்தர் முன்னர் கடைசியாக சேவையாற்றிய வகுப்பிற்கு/ தரத்திற்குரிய சம்பள அளவுத்திட்டத்தின் ஆரம்ப சம்பளப் படிமுறையில் அமர்த்தப்படுதல் வேண்டும்.
நாடளாவிய சேவையொன்றில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 2006.01.01 ஆந் திகதி வகுப்பு I இற்கு பதவியுயர்த்தப்பட்டால், பொது நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (VII) இற்கமைய சம்பள மாற்றத்தை மேற்கொள்வது எவ்வாறு?
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (VII) இன் படி ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பின், 2005.12.31 ஆந் திகதி நாடளாவிய சேவையில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் வகுப்பு II இற்கு ஏற்புடையதாக பெற்றுக்கொண்ட சம்பளப் படிமுறைக்கு 3 சம்பள ஏற்றங்களை அச்சம்பள அளவுத்திட்டத்தின் அடிப்படையில் வழங்கி அதன்பின்னர் தரம் I இற்கு பதவியுயர்த்தி அந்த சம்பள அளவுத்திட்டத்தில் வகுப்பு I இற்குரிய சம்பள படிமுறையில் அமர்த்தி அதன்பின்னர் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இன் ஏற்பாடுகளுக்கமைய 2006.01.01 ஆந் திகதிக்குரிய சம்பளத்தை வழங்க வேண்டும்.
ஏதாவது ஒரு பதவியின் மிகை ஊழியர் அடிப்படையில் பதவியுயர்த்தப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவர் பின்னர் அப்பதவியிலே நிரந்தரமாக நியமிக்கப்படும் போது உரித்தாவது ஒரே சம்பள முறைமை என்பதால், சம்பள ஏற்றத் திகதியை மாற்றியமைத்து, மேலதிக சம்பள ஏற்றமொன்றினை வழங்குவதற்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்றதா?
மிகை ஊழியர் அடிப்படையில் நியமிக்கும் போது, பதவியுயர்வாக சம்பள மாற்றியமைப்பினை மேற்கொண்டிருப்பின், மீண்டும் மேலதிக சம்பள ஏற்றத்தை வழங்க முடியாது. அவ்வாறு மிகை ஊழியர் அடிப்படையில் பதவியுயத்தப்பட்ட திகதியிலே அடுத்துவரும் சம்பள ஏற்றத் திகதியாக கருதி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
உத்தியோகத்தர் ஒருவர் சம்பள ஏற்றத் திகதியிலேயே ஓய்வு பெறுவாராயின் அன்றைய திகதிக்குரிய சம்பள ஏற்றத்தினை வழங்கி அவரின் ஓய்வூதியத்தை தயாரிக்க முடியுமா?
உத்தியோகத்தரினால் சம்பள ஏற்றத்தினை உரிய முறையில் உழைத்திருப்பின் குறித்த சம்பள ஏற்றத்தை வழங்கி ஓய்வூதியத்தை தயாரிக்க முடியும்.
உத்தியோகத்தர் ஒருவரின் நியமனத் திகதி பெப்ரவரி 29 ஆந் திகதிக்கு அமைந்துள்ளவிடத்து லீப் ஆண்டு அல்லாத வருடங்களில் (மிகுநாள் ஆண்டு), அவரின் சம்பள ஏற்றத் திகதியாக கருதப்படும் திகதி யாது?
லீப் ஆண்டு அல்லாத ஆண்டுகளில் - மார்ச் 01 லீப் ஆண்டுகளில் - பெப்ரவரி 29
அரச சேவையில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் பதவியை விட்டு விலகினால் அல்லது இராஜினாமாச் செய்தால், பின்னர் அவ்வுத்தியோகத்தர் சேவையில் கடமையாற்றாத காலப்பகுதியை சம்பளமற்ற லீவாகக் கருதி மீள சேவையில் அமர்த்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சம்பள ஏற்றக் காலப்பகுதியை கணக்கிடுவது எவ்வாறு?
சேவையில் இருக்காத காலப்பகுதியை சம்பள ஏற்றக் காலத்தை கணக்கிடுவதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியாது என்பதுடன், சம்பளமற்ற லீவு காலத்திற்கு சமனான காலத்தில் சம்பள ஏற்றத்தை ஒத்திவைக்க வேண்டும். அதாவது, பதவியை விட்டு விலகிச் செல்வதற்கு முன் கடைசி சம்பள ஏற்றத்தைப் பெற்ற திகதியிலிருந்து பதவியை விட்டுச் சென்ற திகதி வரையிலான சேவைக் காலத்திற்கு, சம்பள ஏற்றத்தை வழங்குவதற்கு அவசியப்படும் ஒரு வருட சேவைக் காலத்தின் மீதியை மீள சேவையில் அமர்த்தப்பட்ட திகதியிலிருந்து சேவையாற்றி, அந்த ஒரு வருட காலம் பூர்த்தியாகும் திகதி சம்பள ஏற்றத் திகதியாக கருத வேண்டும்.
பதவியொன்றின் இடைநிலை தரமொன்றில் பதவியுயர்வு கிடைக்காத நிரலின் கீழ் அதிகபட்சத்தை எட்டிய உத்தியோகத்தர் ஒருவர் அடுத்த பதவியுயர்விற்காக சேவையாற்ற வேண்டிய குறிப்பிட்ட சேவைக் காலத்தை பூர்த்தி செய்யாத நிலையில் அவருக்கு தொடர்ந்தும் சம்பள ஏற்றத்தை செலுத்த முடியுமா?
முடியும். 2019.07.08 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 07/2019 இன் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அதிகபட்சத்தை தாண்டிய சம்பள ஏற்றங்களை வழங்குவதற்கான அங்கீகார அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு பதவியில் அதிஉயர் தரத்திலுள்ள உத்தியோகத்தருக்குரிய சம்பள அளவுத்திட்டத்தின் அதிகபட்ச சம்பள படிமுறையை விஞ்சிய சம்பள ஏற்றத்தை வழங்க முடியுமா?
2007.01.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (III) மற்றும் 2008.06.12 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006(V) இன் படி அதிகபட்ச சம்பள படிமுறைக்கு அப்பாற்பட்டு சம்பள ஏற்றத்தை வழங்க முடியும்.
தர நிலையற்ற பதவிகளுக்கு உத்தியோகத்தர் ஒருவர் அதிகபட்ச சம்பள படிமுறைக்கு அப்பாற்பட்டு சம்பள ஏற்றங்களை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை / சுற்றறிக்கைகள் காணப்படுகின்றதா?
2011.08.03 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (IX) மற்றும் 2014.07.16 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 (XI) இன் படி அதிகபட்ச சம்பள படிமுறைக்கு அப்பாற்பட்டு சம்பள ஏற்றங்களை வழங்க முடியும் என்பதோடு, அப்பதவிகளுக்குரிய ஆட்சேர்ப்பு / பதவியுயர்வு நடைமுறை 2006.04.25 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 06/2006 இன் படி அனுமதித்துக் கொள்வதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
முன்னாள் இராணுவ வீரர்கள்
முன்னாள் இராணுவ வீரர்களை அரச பதவிகளில் நியமனம் செய்யும் போது சம்பளத்தை தீர்மானிக்கும் முறை குறித்த ஏற்பாடுகள் யாவை?
முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆதரவின் கீழ் அரச சேவைக்கு அல்லது கூட்டுத்தாபன சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் அந்த உத்தியோகத்தரினால் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலத்தினுள் உழைத்த சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, தாபன விதிக்கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 9 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளத்தை தயாரித்தல் வேண்டும். (அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2021 இன் படி)
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2021 இன் ஏற்பாடுகள், அச்சுற்றறிக்கை வெளியிடப்பட்ட 2021.07.06 ஆந் திகதிக்கு முன்னர் முன்னாள் இராணுவ வீரராக இணைத்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா?
முடியும்.
முன்னாள் இராணுவ வீரர்களை மீள அரச சேவையில் நியமனம் செய்யப்பட்டுள்ள போது அவரின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மற்றும் இடைக்காலக் கொடுப்பனவை செலுத்துவது எவ்வாறு?
வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு
2013.12.31 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 37/2013 இன் 06 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஓய்வூதியத்துடன் உரித்தாகும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும், முன்னாள் இராணுவ வீரராக அரச சேவையில் பணியாற்றுவதற்காக அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு உரித்தாகும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியத்துடன் கிடைக்கப்பெறும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுக்கு இடையிலான வேறுபாட்டையும் செலுத்த முடியும்.
இடைக்காலக் கொடுப்பனவு
அரச சேவையின் பதவியொன்றுக்கு முறையாக நியமனம் பெற்றிருப்பின் 2019.04.22 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 19/2019 இன் படி ரூபா. 2500/- இனை இடைக்காலக் கொடுப்பனவாக வழங்க தடையில்லை.
இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச்சேவையில் ஈடுபடுத்தல்
இளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது ஏற்புடையதான சுற்றறிக்கைகள் என்ன?
- 12.02.1997 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007
- 16.11.2011 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 24/2011
பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி வகுப்பில் இளைப்பாறும் உத்தியோகத்தர் ஒருவர் 11.05.2007 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007 இற்கமைய நிர்வாக உத்தியோகத்தர் பதவியில் மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது உரித்தாகும் கொடுப்பனவு எவ்வளவு?
இளைப்பாறும் சந்தர்ப்பத்தில் இறுதியாகப் பெற்ற சம்பளத்தின் 50% அல்லது ரூபாய் 15,000 ஆகிய இரண்டில் அதிகமான தொகையாகும். (அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 09/2007 இன் 02 (v) வது பந்தி)
ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு விடுமுறை உரித்து உண்டா?
19.05.1986 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 329 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.
ஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படும் கொடுப்பனவை கணக்கிடுவது எவ்வாறு?
மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாள் சம்பளத்தினைக் கணக்கிடல், மீளச் சேவையில் ஈடுபடுத்துதலின் பொருட்டு செலுத்தப்படும் ஊதியத்திற்கமைய மேற்கொள்ளல் வேண்டும்.
ஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்படும் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு மொழித் தேர்ச்சிக்கான கொடுப்பனவு, வருடாந்த சம்பள ஆண்டேற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரித்துண்டா?
இல்லை.
இளைப்பாறிய உத்தியோகத்தர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பதவிக்கு மேலதிகமாக, தாபன விதிக்கோவையில் VII அத்தியாயத்தின் 12:2:5 இன் ஏற்பாடுகளுக்கமைய மேலும் ஒரு பதவியில் பதிற் கடமையின் பொருட்டு/கடமைகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருப்பின், பதிற் கடமை/கடமைகளைக் கவனித்தலின் பொருட்டு கொடுப்பனவுகளைச் செலுத்த முடியுமா?
பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் பதிற் கடமையின் பதவிக்குரிய ஆரம்ப சம்பளத்தில் ¼ம், கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள பதவியின் ஆரம்பச் சம்பளத்தில் 1/6 ம் கொடுப்பனவாகக் செலுத்த முடியும்.
கௌரவ அமைச்சரவைக்குரிய அமைச்சர்களினதும் மற்றும் பிரதி அமைச்சர்களினதும் தனிப்பட்ட அலுவலகக் குழாம்
கெளரவ அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகக் குழாமின் எண்ணிக்கையினர் எவ்வளவு?
ஜனாதிபதி செயலாளரின் CA1/17/1 என்னும் இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய எண்ணிக்கையினர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகும்.
|
|
கௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக குழாமின் பதவியின் பொருட்டு 01.06.2007 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 6/2006 (IV) இற்கமைய செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் எவ்வளவு?
பதவி | மாதாந்தச் சம்பளம் (அனைத்தும் உட்படுத்தப்பட்ட நிலையான கொடுப்பனவாக) |
அந்தரங்க உதவியாளர் | ரூபா 13990.00 |
முகாமைத்துவ உதவியாளர் | ரூபா 13990.00 |
அலுவலக உதவியாளர் | ரூபா 12330.00 |
சாரதி | ரூபா 12990.00 |
இதற்கு மேலதிகமாக 12.12.2011 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 31/2011 மற்றும் 13.12.2012 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 18/2012 இற்கமைய விசேட கொடுப்பனவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் உரித்தாகும். இவ் உத்தியோகத்தர்களில் யாராவது ஒருவர் தற்போதைக்கும் அரச சேவையின் பதவியொன்றில் அல்லது சேவையொன்றில் அறிக்கையிட்டிருப்பின் அவ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டியது அவன்/அவளின் நிரந்தர பதவிக்குரிய சம்பளமாகும்.
கௌரவ அமைச்சர்களின் அலுவலக குழாமினரின் பொருட்டு மாற்றியமைப்புச் செய்யப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவைச் செலுத்த முடியுமா?
20.09.2005 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 16/2005 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் செலுத்த முடியும்.
அரச உத்தியோகத்தர்களை கௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக ஆளணி குழாமிற்கு விடுவித்தல் தொடர்பான ஏற்பாடுகள் என்ன?
விசேட அனுமதி அவசியம் இல்லை என்பதுடன், நியமன அதிகாரிக்கு விடுவிக்க முடியும். (ஜனாதிபதி செயலாளரின் “அரச செலவு முகாமைத்துவம்” என்னும் தலைப்பிலான CA/1/17/1 இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என 19.12.2012 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.)