பொறுப்பளிக்கப்பட்ட வகிபாகம் தொடர்பான பொது வரைவிலக்கணம்
அரசாங்கத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கொள்கைகளை அமுல்படுத்துவதில் முதன்மையான சேவையாக இருந்துகொண்டு, கொள்கைகளை அமுலாக்கம் செய்வதில் உதவி செய்யும் உள்ளக, வெளியக நிறுவனங்களுடனான முறையான தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பினைப் பேணுதல் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் புதிய போக்குகளைப் பயன்படுத்துதல் ஆகியன மூலம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரச சேவையிலிருந்து எதிர்பார்க்கப்படும் சேவையினை யதார்த்தமாக்குவதற்கென சிறந்ததோர் அரச சேவையினைக் கட்டியெழுப்புவதற்குத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துவதே இலங்கை தகவல் மற்றம் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகிபாகமாகும்.
அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை – 2020/11/30 ஆம் திகதி
வகுப்பு |
அனுமதிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை |
வகுப்பு 1 |
131 |
வகுப்பு 2 |
455 |
வகுப்பு 3 |
2670 |
ஆட்சேர்ப்புச் செய்தல்
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு 1 இன் தரம் III, வகுப்பு 2 இன் தரம் II, வகுப்பு 3 இன் தரம் III இற்காக திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்புகள் இடம்பெறும்.
- இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியில் வெளியிடப்படுகின்ற அறிவித்தல் மூலம் விண்ணப்பங்களை கோரி நியமன அதிகாரி சார்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அல்லது நியமன அதிகாரியினால் தீர்மானிக்கப்படுகின்ற வேறு தகைமை வாய்ந்த நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற திறந்த போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தகைமைகளை பூர்த்தி செய்கின்றவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வகுப்பு மற்றும் தரம் |
திறந்த |
மட்டுப்படுத்தப்பட்ட |
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 3 தரம் III |
100% |
- |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 தரம் II |
70% |
30% |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 1 தரம் III |
70% |
30% |
குறிப்பு: மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவையின் வகுப்பு 2 இன் தரம் II மற்றும் வகுப்பு 1 இன் தரம் III ஆகியவற்றிலுள்ள பதவிகளுக்கான நியமனத்திற்கு தகுதியுடைய ஆட்களின் எண்ணிக்கையானது வெற்றிடங்களின் 30% இனை விடக் குறைவாக இருந்தால் அத்தொகையானது திறந்த போட்டிப் பரீட்சையில் தகுதியுடைய ஆட்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படும்.
தகைமைகள்:
வகுப்பு 3 இன் தரம் III
கல்வித் தகைமைகள்
- கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சா / த) ப் பரீட்சையில் மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்லாக திறமைச் சித்தி ஐந்துடன் (05) ஆறு (06) பாடங்களில் இரு தடவைகளுக்கு மேற்படாத தவணைகளில் சித்தியெய்திருத்தல்.
தொழில் தகைமைகள்
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் அல்லது கணனி விஞ்ஞானம்/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரித்தான டிப்ளோமா/ உயர் டிப்ளோமா அல்லது அதனை விட உயர் பாடநெறியொன்றினை கற்றுப் பூரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
- பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரிய டிப்ளோமா பாடநெறி/ அதனை விடக் கூடிய பாடநெறி அல்லது 1500 மணித்தியாலத்திற்கு குறையாத பாடநெறியை கற்று பூரணப்படுத்தி இருத்தல்.
அல்லது
- மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அவ் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ள நிறுவனமொன்றில் இருந்து அல்லது பாராளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்ட நிறுவனமொன்றில் இருந்து
I. கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு உரிய தேசிய தொழிற் தகைமை (NVQ) ஐந்து (05)/ அதனை விடக் கூடிய NVQ சான்றிதழினைப் பெற்றிருத்தல்.
அல்லது
II. 1500 மணித்தியாலத்திற்கு குறையாத கணனி/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கு உரிய பாடநெறியொன்றினைக் கற்று பூரணப்படுத்தி இருத்தல்.
வகுப்பு 2 இன் தரம் II
திறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் தொடர்பான
அல்லது
-
I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பிரதான பாடம் ஒன்றாக கணனி விஞ்ஞான /தகவல் தொழில்நுட்பத்துடனான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்)
அத்துடன்
II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
அல்லது
-
I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்தான பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
அத்துடன்
II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்
மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்
-
I. சேவையின் 3 ஆம் வகுப்பு I ஆந் தரம் அல்லது II ஆந் தரத்தின் உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அல்லது
-
I. சேவையின் 3 ஆம் வகுப்பு III ஆந் தரத்தில் ஐந்து (05) வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்துள்ள, நியமனத்தில் உறுதிப்படுத்தப்பட்ட உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அத்துடன்
II. இச்சேவைப்பிரமாணக் குறிப்பில் 7.3.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
வகுப்பு 1 இன் தரம் III
திறந்த அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - கல்வித் தகைமைகள்
- நிறுவனம் ஒன்றிலிருந்து கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பம் / கணனிப் பொறியியல் அல்லது கணனித் தொழில்நுட்பத்தில் பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
அல்லது
-
I. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பட்டம் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் (குறைந்தது பட்டத்தின் 1/3 பங்கானது கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்).
அத்துடன்
II. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கணனி விஞ்ஞானம் / தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்பின் டிப்ளோமா ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையின் கீழான ஆட்சேர்ப்பு - அனுபவம்
-
I. சேவையின் 2 ஆம் வகுப்பின் I ஆந் தரத்துடைய உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு ஒத்திசைவாக ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அல்லது
-
I. சேவையில் ஐந்து (05) வருட முனைப்பானதும் திருப்திகரமானதுமான சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்துள்ள வகுப்பு 2 தரம் II இன் உத்தியோகத்தராக இருத்தல் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுச் சுற்றறிக்கை இலக்கம் 01/2020 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்படாதிருத்தல்.
அத்துடன்
II. 7.4.1.2.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்.
அத்துடன்
III. அத்தரத்திற்கு உரிய வினைத் திறமைகாண் தடைப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
ஆவணத் தலைப்பு |
திகதி |
ஆவணம் |
அளவு |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1894/26 ஆம் இலக்கம் |
2014.12.26 |
|
[108 KB] |
திருத்தங்கள் இலக்கம்-01 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1982/15 ஆம் இலக்கம் |
2016.08.30 |
|
[2.5 MB] |
திருத்தங்கள் இலக்கம்-02 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 2050/43 ஆம் இலக்கம் |
2017.12.22 |
|
[36 KB] |
திருத்தங்கள் இலக்கம்-03 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 2191/6 ஆம் இலக்கம் |
2020.08.31 |
|
[33 KB] |
திருத்தங்கள் இலக்கம்-04 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 2199/8 ஆம் இலக்கம் |
2020.10.26 |
|
[121 KB] |
முன்னைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
ஆவணத் தலைப்பு |
திகதி |
ஆவணம் |
அளவு |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பசேவைப் பிரமாணக் குறிப்பு- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1631/20 ஆம் இலக்கம் |
2009.12.09 |
|
[217 KB] |
திருத்தங்கள் இலக்கம்-01 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை 1861/44 ஆம் இலக்கம் |
2014.05.09 |
|
[29 KB] |
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
சுற்றறிக்கை இலக்கம் |
சுற்றறிக்கையின் பெயர் |
திகதி |
ஆவணம் |
04/2011 |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப சேவைக்குள் உள்ளீர்த்தல் |
2011.02.15 |
|
04/2011(I) |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவைக்கு உட்சேர்த்துக் கொள்ளுதல் |
2012.08.16 |
|
04/2011(II) |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைக்கு 2009.07.01 ஆம் திகதியிலுள்ளவாறு உள்ளீர்க்கப்பட்ட அலுவலர்களை அதே திகதியிலிருந்து உரிய வகுப்பில் மீள் உள்ளீர்ப்புச் செய்தல் |
2012.08.16 |
|
03/2015 |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைப் பிரமாணக் குறிப்பினை அமுல்படுத்தல் |
2015.01.29 |
|
04/2011(III) |
இயங்கக தகலல், கதாடர்பாடல் கதாறிநுட்ப சசகலக்கு உள்ரீர்த்தல் |
2017.02.17 |
|
28/2019 |
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவையின் வகுப்பு I தரம் I/II இலுள்ள பதவிகளுக்கு நியமிப்பதற்கான உத்தியோகத்தர்களைத் தெரிவுசெய்தல், நேர்முகப் பரீட்சைச் சபையை நியமித்தல் மற்றும் புள்ளி அளவுகளைத் தயாரித்தல் |
2019.09.12 |
|
தொடர்பு விபரங்கள்
திரு. எஸ். ஆலோக்கபண்டார இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்
தொலைபேசி |
: |
+94 11 2694560 (நீடிப்பு - 500) |
தொலைநகல் |
: |
+94 11 2692254 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
திரு. ஏ.எம்.எம்.என். அமரசிங்ஹ இணைந்த சேவைகள் பணிப்பாளர் II
தொலைபேசி |
: |
+94 11 2682972 (நீடிப்பு - 600) |
தொலைநகல் |
: |
+94 11 2688754 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
திருமதி. கே.எம்.என். தில்ஹாரி இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்
தொலைபேசி |
: |
+94 11 2699966 (நீடிப்பு - 612) |
தொலைநகல் |
: |
+94 11 2688754 |
மின்னஞ்சல் |
: |
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
|
|
இ. த. மற்றும் தொ. தொ. சேவை பிரிவு
தொலைபேசி |
: |
+94 11 2696211-13 (நீடிப்பு - 611) |
தொலைநகல் |
: |
+94 11 2688754 |
|
|
|