இலக்கம் 1777/35 மற்றும் 2012.09.27 ஆந் திகதிய சேவைப் பிரமாணம் 2012.01.01 ஆந் திகதி முதல் அமுல்நடாத்தப்படும்.
தகைமைகள்
- விண்ணப்பப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதினை விட மேற்படாதிருத்தலும் வேண்டும் என்பதோடு இலங்கை பிரஜையாகவும் இருத்தல் வேண்டும்
- க.பொ.த சா/தர பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத தவணைகளில் 06 பாடங்களில் 02 திறமைச் சித்திகளுடன் சித்தியெய்திருத்தல் வேண்டும்
II ஆந் தரத்துக்கு பதவியுயர்த்தல்
III ஆம் தரத்தில் 10 வருடங்கள் முனைப்புடனானதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூரணப்படுத்தியுள்ள மற்றும் சம்பள ஏற்றங்கள் 10 இனையும் உழைத்துள்ள உத்தியோகத்தர்கள் II ஆந் தரத்துக்கு பதவியுயர்த்தப்படுவார்கள்.
தேவைப்படும் தகைமைகள்
- நியமனம் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல்
- III ஆம் தரத்தில் 10 வருடங்கள் முனைப்புடனானதும் திருப்திகரமானதும் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் 10 சம்பள ஏற்றங்களை உழைத்திருத்தல்
- அங்கீகரிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டு நடைமுறை ஒழுங்கிற்கிணங்க பதவியுயர்வுத் திகதிக்கு முன்னர் பத்து (10) வருடங்களினுள் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட செயலாற்றுகையை எடுத்துக் காட்டியிருத்தல்
- பதவியுயர்வுத் திகதிக்கு உடன்முன்னரான ஐந்து (05) வருடங்களினுள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்
- குறித்த மட்டத்தில் ஏனைய அரசகரும மொழித் தேர்ச்சியை அடைந்திருத்தல்
- குறித்த வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் உரிய திகதியில் சித்தியெய்திருத்தல்
I ஆந் தரத்துக்கு பதவியுயர்த்தல்
II ஆம் தரத்தில் ஒன்பது (09) வருடங்கள் முனைப்பானதும் திருப்திகரமானதும் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் சம்பள ஏற்றங்கள் ஒன்பதினை (09) உழைத்துள்ள அலுவலர்கள் I ஆந் தரத்துக்கு பதவியுயர்த்தப்படுவார்கள்.
தேவைப்படும் தகைமைகள்
- II ஆந் தரத்தில் குறைந்த பட்சம் ஒன்பது (09) வருடங்கள் முனைப்பானதும் திருப்திகரமானதும் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் சம்பள ஏற்றங்கள் ஒன்பதினையும் (09) உழைத்திருத்தல்
- பதவியுயர்வுத் திகதிக்கு உடன்முன்னரான ஐந்து (05) வருடங்களினுள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்
- அங்கீகரிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டு நடைமுறை ஒழுங்கிற்கிணங்க பதவியுயர்வுத் திகதிக்கு முன்னர் ஒன்பது (09) வருடங்களினுள் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட செயலாற்றுகையை எடுத்துக் காட்டியிருத்தல்
- குறித்த வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் உரிய திகதியில் சித்தியெய்திருத்தல்
விசேட தரத்துக்கு பதவியுயர்த்தல்
I ஆம் தரத்தில் ஒன்பது (09) வருடங்கள் முனைப்பானதும் திருப்திகரமானதும் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் சம்பள ஏற்றங்கள் ஒன்பதினை (09) உழைத்துள்ள அலுவலர்கள் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தப்படுவார்கள்.
தேவைப்படும் தகைமைகள்
- I ஆந் தரத்தில் குறைந்த பட்சம் ஒன்பது (09) வருடங்கள் முனைப்பானதும் திருப்திகரமானதும் சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும் சம்பள ஏற்றங்கள் ஒன்பதினையும் (09) உழைத்திருத்தல்
- பதவியுயர்வுத் திகதிக்கு உடன்முன்னரான ஐந்து (05) வருடங்களினுள் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல்
- அங்கீகரிக்கப்பட்ட செயலாற்றுகை மதிப்பீட்டு நடைமுறை ஒழுங்கிற்கிணங்க பதவியுயர்வுத் திகதிக்கு முன்னர் ஒன்பது (09) வருடங்களினுள் திருப்திகரமான மட்டத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட செயலாற்றுகையை எடுத்துக் காட்டியிருத்தல்
- குறித்த வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் உரிய திகதியில் சித்தியெய்திருத்தல்
கடமையை ஒப்படைத்தல்
- குறித்த சேவையின் அவசியப்பாடு, மூப்புநிலை மற்றும் அனுபவம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு திணைக்களத் தலைவரினால் கடமைகள் ஒப்படைக்கப்படும்
- பதவியுயர்வு வழங்கப்படுவது வெற்றிடத்துக்காகவன்றி என்பதுடன், அத் தரத்துக்குரிய பதவியிலே கடமையை ஒப்படைப்பதற்கு முடியாத சந்தர்ப்பங்களில் அதற்குக் கிட்டிய தரத்தைச் சேர்ந்த பதவியொன்றில் கடமையில் அமர்த்துவதற்கு திணைக்களத் தலைவருக்கு அதிகாரம் உண்டு
இடமாற்றங்களை மேற்கொள்ளல்
பின்வரும் வகையில் இடம்பெறும்
- அமைச்சுக்கிடையிலான இடமாற்றங்கள் பணிப்பாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்படும்
- ஒரே அமைச்சின் திணைக்களங்களுக்கிடையிலான இடமாற்றங்கள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டு அமைச்சின் செயலாளரினால் மேற்கொள்ளப்படும்
- ஒரே திணைக்களத்தினுள் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களை பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டு திணைக்களத் தலைவரினால் மேற்கொள்ளப்படும்
ஒவ்வொரு தரத்துக்குரிய பதவிகள்
I ஆந் தரம்
- தொலைபேசி இயக்குநர்
- ஆவணப் பொறுப்பாளர்
- புத்தகம் கட்டுநர்
- நகல் பிரதி பொறி இயக்குநர்
- படப் பிரதி பொறி இயக்குநர்
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
முன்னைய சேவைப் பிரமாணங்கள் மற்றும் திருத்தங்கள்
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
முக்கிய அறிவித்தல்
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஆர்.எம்.என்.இ.கே. ரணசிங்க இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்(பதில் கடமை)
|
திருமதி. ஆர்.எம்.எஸ். பிரசாதனி அமரசிங்க இணைந்த சேவைகள் பணிப்பாளர் III
|
||||||||||||||||||
திரு.வைூ.ஆர்.எல்.வி. சதுரங்க இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர்
|
அலுவலக ஊழியர் சேவை பிரிவு
|
|||||||