All Island Services
இலங்கை கட்டிட நிர்மாண சேவை
இலங்கை கட்டடக்கலையியல் சேவையில் மனித வள முகாமைத்துவத்தினை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாக இருந்தாலும், அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பாடாத சந்தர்ப்பங்களில் இலங்கை கட்டடக்கலையியல் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்தல், சேவையில் நிரந்தரமாக்குதல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இடம்பெறும்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
முன்னைய சேவைப் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க பணிப்பாளர்
|
திருமதி. நவாஞ்யனீ லமாகேவா உதவிப் பணிப்பாளர்
|
கட்டிட நிர்மாண சேவை பிரிவு
|
|||||||
இலங்கை விஞ்ஞான சேவை
இலங்கை விஞ்ஞான சேவையில் மனித வள முகாமைத்துவத்தினை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளாக இருந்தாலும், அரசாங்க சேவை ஆணைக்குழு தொழிற்பாடாத சந்தர்ப்பங்களில் இலங்கை விஞ்ஞான சேவைக்குஆட்சேர்ப்புச் செய்தல், சேவையில் நிரந்தரமாக்குதல், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள், ஓய்வு பெறல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் இடம்பெறும்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
முன்னைய சேவைப் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
வெளியீடுகள்
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஜீ.ஐ.டீ.சீ. விஜேசிங்க பணிப்பாளர்
|
திருமதி. நவாஞ்யனீ லமாகேவா உதவிப் பணிப்பாளர்
|
விஞ்ஞான சேவை பிரிவு
|
|||||||
இலங்கை கணக்காளர்கள் சேவை
தொலைநோக்கு
"வினைத்திறன் மற்றும் விளைத்திறன் மிக்க நிதி முகாமைத்துவத்திற்காக சுய அதிகாரமிக்க கணக்காளர் சேவை"
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குவதற்காக இலங்கை கணக்காளர் சேவையின் நிமித்தம் அமைச்சரவை மற்றும் சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் விதிக்கப்பட்ட சகல கொள்கைகளும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயளாலரின் அனுமதியுடன் இலங்கை கணக்காளர்கள் சேவைப்பிரிவின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
நோக்கம்
நிதி முகாமைத்துவத்தின் வெளிப்படைத்தன்மையினை உச்ச அளவில் நிலைத்திருக்கும் வகையில் பொறுப்புக்கள் மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உள்ளார்ந்த தூண்டலுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிபுணத்துவ வல்லுநர்களை உருவாக்குதல்.
இலங்கை கணக்காளர் சேவையின் வரலாறு
இரண்டாம் உலக யுத்தத்தின் போது அரச துறையில் கடமைப் பரப்புக்கள் விரிவடைந்தமை, முற்பணக் கொடுப்பனவுச் செயற்பாடுகள் அதிகரித்தமை, கணக்கீட்டு முறைகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டமை என்பவற்றின் அடிப்படையில் 1946 ஆம் ஆண்டில் இலங்கை கணக்காளர் சேவை ஆரம்பிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அதன் பின்னர், அரச பொறிமுறையில் நிகழும் மாற்றங்களுக்கு தோல்கொடுத்து கணக்காளர் சேவையும் தற்போதுள்ள நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது. அந்தப் பயணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இச்சேவையின் நிருவாக நிலையம் காலத்துக் காலம் மாற்றமடைந்துள்ளது.
அதற்கிணங்க, நிதி அமைச்சின் கீழ் காணப்பட்ட கணக்காளர் சேவை 2015.06.18 ஆந் திகதி முதல் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதால் தற்போது இலங்கை கணக்காளர் சேவை பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் நிருவகிக்கப்படுகின்றது.
நாடளாவிய சேவையொன்றாகக் கருதப்படும் இலங்கை கணக்காளர் சேவையின் உத்தியோகத்தர்கள் நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். அந்த உத்தியோகத்தர்களை சுய கட்டுப்பாடுடைய மதிநுட்பமுள்ள மற்றும் தொழில்சார் தேர்ச்சிகள் நிரம்பிய உத்தியோகத்தர்களாக உருவாக்குவது, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கணக்காளர் சேவையின் பொறுப்பாகும். அதற்காக எதிர்காலத்தில் பின்வரும் விதத்தில் அபிவிருத்தி மற்றும் பயிற்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
- கணக்காளர்கள் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ளவர்களாக இருப்பதனால் சுய நிர்வாகம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி தேவையான மனப்பாங்கு மாற்றங்களைக் கட்டியெழுப்புதல் (SLIDA போன்ற நிறுவனங்களின் கீழ்).
- ஒழுக்காற்றுப பிரச்சினைகள் குறையும் விதத்தில் கெளரவத்துடன் கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவையும் மனப்பாங்குகளை உத்தியோகத்தர்களிடத்தில் உருவாக்குதல்.
- இலங்கை கணக்காளர் சேவை உத்தியோகத்தர்களிடம் காணப்பட வேண்டிய தேர்ச்சிகளைப் பெறுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கு அவர்களை அனுப்புதல்.
- சமகாலத் தேவைகளை அடையாளம் கண்டு கணக்காளர்களை திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் (Capacity Building) பங்கேற்கச் செய்தல்.
- அபிவிருத்திப் பணிகளின் வெற்றியில் சரியான நிதி எதிர்வுகூறல் முக்கியான இடத்தை வகிப்பதனால் அதனுடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்தல், ஆய்வுப் பின்னணியொன்றை உருவாக்குதல், அவற்றின பெறுபேறுகளை பயன்படுத்துதல்.
- கணக்காளர்களை வாண்மைத் தொழிலாளர்களாக உருவாக்குவதற்குத் தேவையான உபாய முறைகளை உருவாக்குதல்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
நடைமுறையில் உள்ள சேவைக் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
மொழித் தேர்ச்சி
தொடர்பு விபரங்கள்
திருமதி. ஐ.யு.பீ. குணவர்தன பணிப்பாளர்
|
திருமதி.ஏ.ஏ.கே. பெரேரா பிரதிப் பணிப்பாளர்
|
திருமதி. பீ.பீ.எச். லியனகே உதவிப் பணிப்பாளர்
|
கணக்காளர்கள் சேவை பிரிவு
|
|||||||
இலங்கை திட்டமிடல் சேவை
பணிநோக்கு
"நிர்வாக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகள் உரிய முறையில் செயற்படுத்துதல் மற்றும் புதிய கொள்கைகளினை அறிமுகப்படுத்துதல், உத்தியோகத்தர்களின் இயலளவினை அபிவிருத்தி செய்வதன் மூலம் உற்பத்தித்திறன் வாய்ந்த திட்டமிடல் சேவையினை நாட்டிற்குப் பெற்றுக்கொடுத்தல்"
நோக்கம்
- திட்டமிடல் சேவையில் மனிதவள முகாமைத்துவக் கொள்கைகளினை தயாரித்தல்
- பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில், வினைத்திறனுள்ள திட்டமிடல் சேவையொன்றினை உருவாக்குதல்
ஆட்சேர்ப்புச் செய்தல்
- பதவி மற்றும் நிறுவனம் அடிப்படையில் வெற்றிடங்களை இனங்காணுதல்
- முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்
- ஆட்சேர்ப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுதல்
- தெரிவிற்கான பரீட்சைகளினை நடாத்துதல்
- நேர்முகப்பரீட்சையின் மூலம் விண்ணப்பதாரியின் தகைமைகளைப் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளல்
- அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியினைப் பெற்றுக்கொள்ளல்
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
முன்னைய சேவைப் பிரமாணம் மற்றும் திருத்தங்கள்
முக்கிய அறிவித்தல்
தொடர்பு விபரங்கள்
திருமதி. யு.பி.ஏ.டி.டி. கருநாநாயக்க பணிப்பாளர்
|
திட்டமிடல் சேவை பிரிவு
|
|||||||
இலங்கை பொறியியல் சேவை
பதவியணியினர்
- 2024.07.01 ஆம் திகதியில், இலங்கை பொறியியல் சேவையில் உள்ள உண்மை ஊழியர்களின் எண்ணிக்கை 1125 ஆகும்.
ஆட்சேர்ப்பு
- இலக்கம் 1836/6 மற்றும் 11.11.2013 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை பொறியியல் சேவைகளின் புதிய பிரமாணக்குறிப்பு மற்றும் அதன் திருத்தங்களின்படி, இலங்கை பொறியியல் சேவைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான முறைகள் 02 ஆகும்.
- திறந்த ஆட்சேர்ப்பு (தொழில் தகைமை கொண்ட பொறியாளர்களுக்கு மாத்திரமாகும்) – நிலவும் வெற்றிடங்களில் 75% அளவு
- மட்டுபடுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு – நிலவும் வெற்றிடங்களில் 25% அளவு
திறந்த ஆட்சேர்ப்பு
கல்வித் தகைமைகள்
- பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் இருந்து அவ்ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 04 வருட முழுநேர விஞ்ஞானமானிப் பொறியியல் பட்டத்தை ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத்துறையொன்றின் கீழ் வெற்றிகரமாக பூர்த்திசெய்து பட்டம் பெற்றிருத்தல்
அல்லது
- மேற்கூறப்பட்ட பட்டக்கற்கைநெறிக்குச் சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் மற்றும் இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்படுகின்ற கற்கைகள் மற்றும் ஏனைய சகல தேவைப்பாடுகளையும் ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத்துறையின் கீழ் பூர்த்திசெய்து அதற்கு உரிய செல்லுபடியாகும் சான்றிதழைப் பெற்றிருத்தல்
தொழில் தகைமைகள்
- 2017 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலங்கை பொறியியலாளர்கள் சபையின், குறித்த சேவைப் பிரிவின் கீழ் இணைப் பொறியியலாளராக அல்லது பட்டயப் பொறியாளராகப் பதிவு செய்திருத்தல் மற்றும் இலங்கை பொறியியல் நிறுவனத்தின் இணை அங்கத்துவம் அல்லது பூரண அங்கத்துவம் (பட்டயப் பொறியியலாளர் நிலை) பெற்றிருத்தல்.
மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவைக்கு உரித்தான உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்துடன், அதில் குறைந்த பட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடத்தப்படும் சிரேஷ்ட தொழில்நுட்பப் பரீட்சையில் பூரணமாக சித்தியடைந்திருத்தல்.
- புகையிரதத் திணைக்களத்தில் கண்காணிப்பு முகாமைத்துவ பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவர், அத்திணைக்களத்தில் 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக் காலத்துடன், அதில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல்.
- இலங்கைத் தொழிநுட்ப சேவையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத சேவைக்காலத்துடன், குறைந்தபட்சம் 05 வருடங்கள் அச்சேவையின் தரம் I இற்கு பதவி உயர்வு பெற்று சேவையாற்றியிருத்தல் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தால் நடத்தப்படும் அரசாங்க தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது பரீட்சையில் (1979 பிரமாணக்குறிப்பு) பூரணமாக சித்தியடைந்திருத்தல்
- நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தரொருவர் அல்லது இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரொருவர் அல்லது புகையிரதத் திணைக்களத்தில் கண்காணிப்பு முகாமைத்துவப் பதவியில் சேவையாற்றும் உத்தியோகத்தரொருவராக 21 வருடங்களுக்குக் குறையாத முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்துடன் அச்சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றிருத்தல்
- • நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியல் உதவியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தராக அல்லது இலங்கைத் தொழில்நுட்ப சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக அல்லது புகையிரதத் திணைக்களத்தில் மேற்பார்வை முகாமைத்துவப் பதவியில் சேவையாற்றும் உத்தியோகத்தராக 15 வருடங்களுக்குக் குறையாத முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருத்தல் மற்றும்
(அ) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் அவ்ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புச் செய்யப்படும் பாடத் துறையின் கீழ் 04 வருட பொறியியல் விஞ்ஞானம் பற்றிய கற்கைநெறியை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து பட்டம் பெற்றிருத்தல்
அல்லது
(ஆ) மேற்படி கற்கைநெறிக்குச் சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கை பொறியியல் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, கல்வி மற்றும் ஏனைய சகல தேவைப்பாடுகளையும் ஆட்சேர்ப்புச்செய்யப்படும் பாடத்துறையின் கீழ் பூர்த்தி செய்து அதற்கான சான்றிதழைப் பெற்றிருத்தல்
- மேற்குறிப்பிடப்பட்ட தகைமைகளில் ஒன்றுடன் 2017 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட இலங்கை பொறியியலாளர்கள் சபையில் ஒருங்கிணைப்பு அல்லது இணைப் பொறியாளராக பதிவு செய்திருத்தல்
புதிய இணைந்த சம்பள அளவுத் திட்டங்கள்
ஒவ்வொரு வகுப்புக்கு /தரத்திற்கு உரிய திருத்தப்பட்ட சம்பள அளவுத் திட்டங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
- விசேட தரம் (SL-3 – 2016) - ரூ.88,000.00 (1 படிநிலை)
- தரம் I (SL-1 – 2016) - ரூ.76, 175.00 (20 படிநிலை)
- தரம் II (SL-1 – 2016) - ரூ.62, 595.00 (12 படிநிலை)
- தரம் III (SL-1 – 2016) - ரூ.47, 615.00 (1 படிநிலை படி)
இலங்கை பொறியியல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் பூரண தொழில் தகைமை (பட்டயப் பொறியியலாளர் நிலை) பெற்றிருப்பின் அல்லது ஆட்சேர்ப்புக்குப் பின்னர் பொறியியலாளர் ஒருவர் பூரண தொழில் தகைமையைப் பெற்றிருப்பின், அவ்உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் சம்பளப் படிநிலை 6 இல் ஸ்தாபிக்கப்படுவார்.
வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை
- நிர்வாகம் பற்றிய எழுத்துப் பரீட்சை
- நிதி முறைகள் பற்றிய எழுத்துப் பரீட்சை
- திணைக்களம்/நிறுவன முறைமைகள் பற்றிய எழுத்துப் பரீட்சை
பதவி உயர்வு
- இலங்கை பொறியியல் சேவையின் தரம் III இன் உத்தியோகத்தராக 06 வருட முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்திசெய்திருப்பின் வினைத் திறன்காண் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்திருப்பின் மற்றும் ஏனைய அரச கரும மொழித் தேவைகளைப் பூர்த்தி செய்திருப்பின், அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்த திகதி முதல் தரம் II இற்கு பதவியுயர்த்தப்படுவார்.
- இலங்கை பொறியியல் சேவையில் தரம் II இன் உத்தியோகத்தராக 06 வருட முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தைப் பூர்த்திசெய்திருப்பின், மற்றும் குறித்தொதுக்கப்பட்ட சம்பளவேற்றங்கள் 06 இனை ஈட்டியிருத்தலும் பூரண தொழில் தகைமையைப் (பட்டய பொறியியலாளர் நிலை) பெற்றிருத்தல், மற்றும் பட்டயப் பொறியாளர் நிலையை தொடர்ந்து பேணிச்செல்வதற்கான தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்திருப்பின் சகல தகைமைகளையும் பூர்த்தி செய்த திகதியிலிருந்து தரம் I இற்கு பதவியுயர்த்தப்படுவார்கள்.
- இலங்கை பொறியியல் சேவையின் தரம் I இல் 05 வருட முனைப்பான மற்றும் திருப்திகரமான சேவைக் காலத்தையும் மொத்த சேவைக்காலம் 18 வருடங்களுக்கு குறையாத முனைப்பான சேவைக் காலத்தையும் பூர்த்தி செய்துள்ள, இலங்கை பொறியியல் நிறுவகத்தின் உயர் அங்கத்துவம் அல்லது இலங்கை பொறியியல் நிறுவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேறு பொறியியல் நிறுவகமொன்றில் அதற்குச் சமமான உயர் அங்கத்துவம் பெற்றிருத்தல் அல்லது 09 மாதங்களுக்கு குறையாத கற்கைநெறிக் காலமொன்றுடன் கூடிய, பொறியியல் துறையில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா/ பட்டப்பின்பட்டம் அல்லது முகாமைத்துவ / வணிக நிர்வாகம் அல்லது தகவல் தொழில்நுட்பத்துறையில் பட்டப்பின் படிப்புச் சான்றிதழ் பெற்றுள்ள உத்தியோகத்தர்களது சேவை மூப்பின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக் குழுவொன்றின் பரிந்துரையின் பேரில் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்படுவர்.
சேவை பிரமாணக் குறிப்பு மற்றும் தொடர்புடைய சுற்றறிக்கைகள்
தற்போதைய சேவை பிரமாணக் குறிப்பும் திருத்தங்களும்
தொடர்புடைய சுற்றறிக்கைகள்
Background of Sri Lanka Engineering Service (SLES)
Before the Sri Lanka Engineering Service was centrally established on 01.10.1971, Engineers required for the Public Service were recruited by the respective Departments according to their needs. Engineers so recruited found themselves subject to varying conditions of employment, and as a result, around 1970 there was a considerable agitation among Engineers in the four Engineering disciplines of Civil, Mechanical, Electrical and Electronics Engineering that promotional prospects were limited, facilities for postgraduates training and practical experience required for Engineers to obtain full professional qualifications were restricted and that the disciplinary procedures in the different Departments were not uniform. As such, the Public Service Engineers suggested the formation of a separate service for Engineers.
The minute on the Ceylon Engineering Service was published in the Ceylon Government Gazette (Extra Ordinary) No. 15001/8 of March 14, 1972 (By the Secretary, Public Service Commission) and the Ceylon Engineering Service was established on 1st October 1971. This minute was replaced by the Minute published in the Gazette (Extra Ordinary) of the Democratic Socialist Republic of Sri Lanka No. 327/1 dated 25-07-1978.
The Sri Lanka Engineering Service minute was further revised to incorporate certain administrative procedures adopted after the promulgation of the new Constitution and revised Minute was published in the Gazette (Extra Ordinary) of the Democratic Socialist Republic of Sri Lanka No. 296/2 dated 7-5-1984.
All amendments inclusive of the new salary scales for Engineers have been incorporated in the service Minute published in the Gazette (Extra Ordinary) of the Democratic Socialist Republic of Sri Lanka No. 509/7 dated 07-06-1988.
As a result of Public Administration Circular No.06/2006, the Minutes of Sri Lanka Engineering Services was revised and published in the Gazette (Extra Ordinary) of the Democratic Socialist Republic of Sri Lanka No. 1836/6 dated 11-11-2013 and No 1840/2 dated 09-12-2013.
தொடர்பு விபரங்கள்
பொறியியல் பி.ஏ.டி.என். பொன்னம்பெருமா பணிப்பாளர்
|
திருமதி. டபிள்யூ.என்.பிரியதர்ஷினி உதவிப் பணிப்பாளர்
|
கிளைத் தலைவர் திரு. கே.பி.சி.ஜே. டி சில்வா
|
|||||||